Monday 1 October 2012 | By: Menaga Sathia

நெய் பிஸ்கட் /Nei (Ghee) Biscuit

தே.பொருட்கள்

மைதாமாவு - 1 கப்
 நெய் - 1/2 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்

செய்முறை

*அவனை 180°C  10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.


*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து ,மாவை சிறு உருண்டையாக எடுத்து லேசாக அழுத்தி இடைவெளிவிட்டு வைக்கவும்.


*அவனின்  வெப்பநிலையை குறைத்து 120°C ல் 10 -15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு

* பிஸ்கட் அவனில் இருந்து எடுக்கும் போது வேகாதமாதிரி இருக்கும்.ஆறியதும் சரியாக இருக்கும்.

*அதிகநேரம் வேகவைத்தால் பிஸ்கட் நிறம் மாறிவிடும்.

*இந்த அளவில் 10 பிஸ்ட்கள் வரும்...மாவு பிசையும்போதே நானும்,என் பொண்ணும் கொஞ்சம் சாப்பிட்டாச்சு,கடைசியில் 8 பிஸ்கட்கள் தான் வந்தது.

*அலுமினியம் பாயிலுக்கு பதில் நான் பயன்படுத்தியிருப்பது மீள்சுழற்சி துணி,அவனில் வைத்து பேக்கிங் செய்வதற்கென்றே கடையில் கிடைக்கிறது.இந்த துணியை ஒரு முறை பயன்படுத்திய பின் நீரில் அலசி காயவைத்தாலே போதும்.



20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Vimitha Durai said...

Beautiful melt in the mouth cookies

Easy (EZ) Editorial Calendar said...

அவன் இல்லாதவங்க காஸ் ஸ்டவில் செய்தா நல்லா வருமா....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Jaleela Kamal said...

நெய் பிஸ்கேட் ரொம்ப அருமை
நான் முதலாவதாக செய்யும் போதும் இப்படி தான் போட்டோ எடுப்பதற்குள் தட்டு காலி

இரண்டாம் முறை சாக்லேட் பிஸ்கேட் ஷேப் செய்த வரை எடுத்தேன், செய்து முடித்ததும்

நிமிஷத்தில் காலி,

அம்பாளடியாள் said...

நல்ல வேளை இந்த மூன்று பொருட்களும் வீட்டில் உள்ளது .
நீங்க மட்டும் இல்லை இனி நாங்களும் சாப்பிடுவோம் தோழி
உங்கள் தயவால் :) மிக்க நன்றி பகிர்வுக்கு .

ஸாதிகா said...

நெய் வாசனை கமகமக்கிறதே,இதனை நானகத்தா என்போம்

Unknown said...

ரொம்ப சிம்பிளாக இருக்கு.. பேக்கிங் சோடா மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் நாங்க சேர்ப்போம்

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த அளவில் 10 பிஸ்ட்கள் வரும்...மாவு பிசையும்போதே நானும்,என் பொண்ணும் கொஞ்சம் சாப்பிட்டாச்சு,கடைசியில் 8 பிஸ்கட்கள் தான் வந்தது.


எங்க ஊர்ல இதுக்கு பரக்காவெட்டின்னு பேரு கி கி கி

Priya Suresh said...

My fav biscuit, its been a long i prepared them..Oru parcel pls.

Reva said...

Biscuit super..:)
Reva

Unknown said...

yummy n easy biscuits...

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்... செய்வது எளிது... நன்றி...

Unknown said...

yummy ghee biscuit...love it..

GEETHA ACHAL said...

superb..yummy biscuits....

Unknown said...

romba nalla irukku.

Sangeetha M said...

very flavorful n delicious biscuits, will try this for my kids soon...thanks for sharing!

divya said...

Wow... this looks tempting and yummy..,

Asiya Omar said...

நானகத்தா(நெய் பிஸ்கட்) சூப்பர்.

Participate My First Event - Feast of Sacrifice Event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html

Menaga Sathia said...

@மலர்

பிஸ்கட்களை அவனில் செய்தால் தான் நன்றாக வரும்....

Saravanan said...

Very nice post and making an intention to try it out today itself.

Tamil Breaking News

Asiya Omar said...

என் இவெண்ட்டிற்கு இந்த குறிப்பை இணைத்தமைக்கு மிக்க நன்றி மேனகா.

01 09 10