Wednesday, 3 October 2012 | By: Menaga Sathia

எலுமிச்சை பழரசம் /Lemon Rasam

 தே.பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 1
தக்காளி - 4
வேக வைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை -சிறிது
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
நெய் - 1 1/2  டீஸ்பூன்
 
செய்முறை :

*பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து 2 கப் நீரில் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் வெந்த பருப்பை கொட்டி 1 கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் எலுமிச்சைசாறு பிழிந்து கலக்கவும்.சூட்டோடு சாறு பிழிந்து விட்டால் ரசம் கசக்கும்.

*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு.சூட்டோடு பிழியக் கூடாது என்பதையும் தெரிந்து கொண்டேன். நன்றி மேனகா.

Priya Suresh said...

Neiyla thallicha rasamoda taste'e vera than,super..

divya said...

looks sooo tempting but i don't know tamil?

Unknown said...

Idhu enoda romba fav rasam... kudikalam pola irruku suda suda cuppa oothi :)

hotpotcooking said...

Dinamum sapidalam. Parka supera irukku.

Sangeetha Nambi said...

Need to try it for sure...
http://recipe-excavator.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் said...

புது வித ரசம்...

குறிப்பிற்கு நன்றி...

ஸாதிகா said...

இம்முறையில் அவசையம் ரசம் செய்ய வேண்டும் மேனகா.

சி.பி.செந்தில்குமார் said...

புதுசு கண்ணா புதுசு, முயற்சி செஞ்சு பார்ப்போம்

Easy (EZ) Editorial Calendar said...

எலுமிச்சை பழ ரசம் நன்றாக இருக்கிறது...தொடர்ந்து இன்னும் நிறைய டிப்ஸ் கொடுங்க....

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

GEETHA ACHAL said...

superb rasam...Pass me one cup here too...

Avainayagan said...

எலுமிச்சை பழ ரசம் டிப்ஸ் (சூட்டோடு பிழியக் கூடாது ) நன்றாக இருக்கிறது..

Hema said...

Love this rasam, I do it exactly the same way..

Saravanan said...

ஒரு அருமையான சமையல் குறிப்பு.
அவசியம் செய்து பார்க்கிறேன்.
மிக்க நன்றி.

Tamil Magazine

Priya dharshini said...

Oru cup kodunga..appadie kudipen :)

Kanchana Radhakrishnan said...

நல்ல குறிப்பு

01 09 10