Wednesday 24 October 2012 | By: Menaga Sathia

பால் பாயாசம்/Paal Payasam (Rice Kheer)

ஆஹா என்ன ருசி -இல் பார்த்து பலதடவை செய்துவிட்டேன்.மற்ற பாயாசங்களை விட இந்த பாயாசம் மிகவும் பிடித்துவிட்டது.விரும்பினால் முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.அது சேர்க்காமலே நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்

பாஸ்மதி - 1/4 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை = 4 - 5 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் நெய் விட்டு அரிசியை போட்டு லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
*ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
*பொடித்த அரிசி+பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.வெயிட் போட்டதும் சிறுதீயில் 1/2 மணிநேரம் வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நன்றாக மசித்து சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
*சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

பி.கு


*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்.சர்க்கரை அவரவர் இனிப்பிற்கேற்ப சேர்க்கவும்.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

இமா க்றிஸ் said...

பாயாசம் சீசனா! சமீபத்தில் வேறு எங்கோ கூட இதுபோல் ஒரு குறிப்பு பார்த்தேன். நானும் ட்ரை பண்றேன் மேனகா.

Unknown said...

ஆஹா என்ன ருசி.. பார்க்கும் பொழுதே தெரிகிறதே..

divyagcp said...

Yummy Payasam..

Divya's Culinary Journey

divya said...

ahaaa...looks absolutely yummy!

GEETHA ACHAL said...

மிகவும் சூப்பராக இருக்கின்றது...நான் பிரஸர் குக்கரில் செய்தது இல்லை..செய்துபார்க்க வேண்டும்...

Akila said...

Yummy payasam

Event: Dish name starts with P

Vimitha Durai said...

Love this payasam... Looks creamy

மனோ சாமிநாதன் said...

உண்மையிலேயே இந்த பால் பாயத்தின் ருசி அபாரம் மேனகா! நெய்யில் வறுத்து அப்படியே பாலுடன் குக்கரில் வேக வைத்து சிறு தீயில் வைத்து ச‌ற்று கெட்டியானதும் சாப்பிடலாம். உங்களின் செய்முறையும் அருமை! செய்து பார்த்து விட்டு எழுதுகிறேன்!!

சாருஸ்ரீராஜ் said...

mmm yummy payasam menaga

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பர்...

நன்றி...

Unknown said...

Looks Delicious..love it...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா! மிகவும் ருசியான பாயஸப் பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

நாக்கில் நீர் ஊற வெச்சுட்டீங்க.

Hema said...

Love this payasam..

Priya Suresh said...

Yethana bowl venalum saapidalam intha payasatha, superr rich kheer.

Unknown said...

SUPER PAYASAM...looks delicious.

Asiya Omar said...

சூப்பர். பார்க்கவே ஆசையை தூண்டுது.

Jaleela Kamal said...

rompa super menaga

01 09 10