Monday, 7 July 2014 | By: Menaga Sathia

சீராளம் / Seeralam | Healthy Snacks Recipes


இந்த மாதம் Friendship 5 Series ல் இடம் பெறுவது Childhood Memories உணவுகள்..

தே.பொருட்கள் 

புழுங்கலரிசி- 1/2 கப்
து.பருப்பு+க.பருப்பு  - தலா 1/4 கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -  2
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க‌
கடுகு+உளுத்தம்பருப்பு  - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*அரிசி+பருப்புகளை ஒன்றாக  ஊறவைத்து உப்பு +காய்ந்த மிளகாய்+பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக‌ கெட்டியாக அரைக்கவும்.


*இதனை இட்லி பாத்திரத்தில் இட்லி போல ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து,ஆறியதும் துண்டுகளாக போடவும்.

*நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெட்டிய பருப்பு துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

*சுவையான மாலை நேர சிற்றுண்டி இது.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

this is new to me.. sounds very healthy

GEETHA ACHAL said...

வித்தியசமான உணவு...இதே மாதிரி அடை தான் செய்து இருக்கின்றேன்...அதனையே இட்லி மாதிரி வேகவைத்து செய்வது சூப்பர்...சத்தான ஸ்நாக்...

'பரிவை' சே.குமார் said...

பார்க்க நல்லாத்தான் இருக்கு...
செய்து சாப்பிடத்தான் கஷ்டம்...
ஊரில் இருந்தால் மனைவியைச் செய்யச் சொல்லி சாப்பிடலாம்...

nandoos kitchen said...

very healthy and yummmy snack..

Sangeetha Priya said...

interestign n healthy snack!!!

Lifewithspices said...

hv not heard abt tis dish lokks healthy n yummy

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான சத்துள்ள பகிர்வு. பெயரும் நன்றாக வித்தியாசமாக உள்ளது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மேனகா. வாழ்த்துக்கள்.

Niloufer Riyaz said...

a healthy recipe!!

ADHI VENKAT said...

சீராளம் பற்றி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை. ஏறக்குறைய இதே மாதிரி தான் வட இந்திய சிற்றுண்டியான டோக்ளாவும். அது எனக்கு மிகவும் பிடித்தது. அது கடலைமாவில் செய்து எலுமிச்சை சாறு விடுவாங்க.

Priya Suresh said...

Antha plate appadiya thantha pothum yennaku,love this snack.

01 09 10