Friday, 8 August 2014 | By: Menaga Sathia

எள்ளு பூரண கொழுக்கட்டை/ Ellu Poorna Kozhukattai | Vinayagar Chaturthi Recipes


print this page PRINT IT

தயாரிக்கும் நேரம் :20 நிமிடங்கள்
அளவு :10 உருண்டைகள்

தே.பொருட்கள்

அரிசி மாவு- 1/2 கப்
நீர் -1 கப்
கறுப்பு எள் -1/3 கப்
வெல்லம்- 1/3 கப்
நல்லெண்ணெய்- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்

செய்முறை


*எள்ளை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.பின் அதனுடன் வெல்லத்தை துருவி 1 சுற்று சுற்றி எடுக்கவும்.



*பாத்திரத்தில் 1 கப் நீர்+எண்ணெய்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*கொதிததும் அதனை அரிசிமாவில் ஊற்றி கிளறி 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
*பின் மிருதுவாக மாவை பிசைந்து சிறு உருண்டைகளாக எடுத்து  வட்டமாக தட்டி எள்ளு பூரணத்தை சிறிது வைத்து உருண்டையை மேல் நோக்கி மூடவும்.

*இதே போல் அனைத்து உருண்டையிலும் செய்த பின்னர் ஆவியில் 6 -7 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு

*உருண்டை வெந்ததின் அடையாளமாக பார்க்கும் போது மினுமினுப்பாக இருக்கும்.

*உருண்டை எடுத்து உருட்டும் போது நல்லெண்ணெய் தொட்டு தட்டவும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

Gita Jaishankar said...

This filling is new to me, looks tasty :)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செய்து பார்க்க தங்களின் பதிவு ஒரு உந்து சக்தியாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Sangeetha Priya said...

looks divine!!!

nandoos kitchen said...

nice tasty kozhukkattai..

Priya Suresh said...

Rendu kozhukattai yeduthukalama, sapitu naal achu.

01 09 10