Thursday 19 November 2015 | By: Menaga Sathia

வாழைப்பூ மிளகு பொரியல்/Vazhaipoo (Banana Flower) Pepper Poriyal

print this page PRINT IT
தே.பொருட்கள்

பொடியாக அரிந்த வாழைப்பூ - 2 கப்
சின்ன வெங்காயம் - 6
பூண்டுப்பல் -2
வேர்கடலை - 1/4 கப்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

* பூண்டு+சின்ன  வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.   வேர்க்கடலையை ஒன்றும் பாதியுமாக உடைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி வாழைப்பூ + உப்பு+தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் மிளகுத்தூள்+வேர்க்கடலை சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*வேர்க்கடலைக்கு பதில் தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழைப்பூ மிளகுப் பொரியல் செய்முறையும் படமும் மிக அருமை.

நேற்று எங்கள் வீட்டில் வாழைப்பூவில் பருப்பு உசிலி. இன்று வாழைப்பூக் கூட்டு.

முரட்டுப்பூக்களாக நான்கு வந்து வந்து கள்ளன்களை நீக்கி, பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுத்தது நான் மட்டுமே :)

-=-=-=-=-

முடிந்தால் படியுங்கோ:

http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

இலகுவான செய்முறை விளக்கம் நிச்சயம் செய்து பார்க்கிறோம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

எங்க வீட்டில் அம்மா செய்வாங்க...
மனைவியும் செய்வார், ஆனால் அவருக்கு வாழைப்பூ வடை செய்வதில்தான் அதிக ஆர்வம்...
அருமை...

Unknown said...

This looks so healthy and yummy

”தளிர் சுரேஷ்” said...

வாழைப்பூ பொரியல் சுவையானது! எனக்கு பிடித்த ஒன்று! பகிர்வுக்கு நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முரட்டுப்பூக்களாக நான்கு வந்து வந்து கள்ளன்களை நீக்கி, பொடிப்பொடியாக நறுக்கிக்கொடுத்தது நான் மட்டுமே :)//

இதில்
’வந்து வந்து’
என்பது
’வாங்கி வந்து’
என்று இருக்க வேண்டும்.

அவசரத்தில் தவறாக வந்து வந்து என எழுதியுள்ளேன். தயவுசெய்து அதனை மாற்றிப்படிக்கவும்.

ஸ்ரீராம். said...

நாளை இதுதான் முயற்சிக்கப் போகிறேன். வாழைப்பூ வடகறி செய்து அலுத்துப் போச்சு!

Priya said...

valaipoo vadai than seiven .Poriyal arumai.

ராமலக்ஷ்மி said...

அருமை. செய்து பார்க்கிறேன். வேர்க்கடலையை பச்சையாகவே சேர்க்கலாமா? அல்லது வறுத்து உடைக்க வேண்டுமா?

Menaga Sathia said...

@ ராமலஷ்மி

அக்கா,வறுத்து உடைத்த வேர்க்கடலையை தான் சேர்க்கவேண்டும்.

ராமலக்ஷ்மி said...

@ மேனகா,

நன்றி!

01 09 10