Tuesday, 12 October 2010 | By: Menaga Sathia

ஹைதராபாத் மட்டன் பிரியாணி /Hyderabad Mutton Biryani

தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
பச்சை மிளகாய் - 3
வறுத்த வெங்காயம் - 1/4 கப்
தயிர் - 150 கிராம்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
இளஞ்சூடான பால் - 1 டேபிள்ஸ்பூன்
குங்கமப்பூ - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ரம்பை இலை - 2
ஏலக்காய் -2

பிரியாணி மசாலா தயாரிக்க:
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3
கறுப்பு ஏலககய் - 2
பிரியாணி இலை - 3
ஜாதிபத்திரி - 1
வறுத்த வெங்காயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*சுத்தம் செய்த மட்டனில் பிரியாணி மசாலா+தயிர்+உப்பு+வரமிளகாய்த்தூள்+கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம்.

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை+கிராம்பு+ஏலக்காய்+ரம்பை இலை+ உப்பு+அரிசி சேர்த்து 3/4 பதமாக வடித்து ஆறவைக்கவும்.

*பிரஷர் பானில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+புதினா கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

*ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை+சாதம்+நெய்+வறுத்த வெங்காயம்+ வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு +பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும்.

*இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.
 
Sunday, 10 October 2010 | By: Menaga Sathia

பகோடா குழம்பு

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

பகோடாவுக்கு:
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை:
*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி சோம்பு+உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக நீர் விடாமல் அரைக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+கொத்தமல்லித்தழை சேர்த்து பகோடாகளாக பொரித்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார் பொடி+உப்பு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
கடலைமாவிலும் பகோடாவை செய்து போடலாம்.

Thursday, 7 October 2010 | By: Menaga Sathia

ஜாங்கிரி /Jangri

தே.பொருட்கள்:
வெள்ளை முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எலுமிச்சை சாறு - 1/2 டேபிஸ்பூன்

செய்முறை:
*உளுந்தை 1 மனிநேரம் ஊறவைத்து நன்கு வெண்ணெய் போல் சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் அரிசிமாவு+சிறிது நீரில் புட்கலர் கலக்கவும்.மாவு ஒட்டையில் விழும் பதமாக இருக்க வேண்டும்.
*ஒரு ஜிப்லாக் கவரில், ஒரு கம்பி எடுத்து லேசாக சூடு செய்து ஒட்டையை மெலிதாக போடவும்.

*ஒட்டை போட்ட கவரில் மாவை நிரப்பி படத்தில் உள்ளவாறு பிழியவும்.முதலில் 2 வட்டங்கள் போட்டு அதன்மேல் குட்டி குட்டி வளையங்கள் போல் பிழியவும்.2,3 முறை போட்டவுடன் அழகாக வரும்.
*எண்ணெய் காயவைத்து நேரடியாக மாவை பிழியவும்.ஒரு புறம் வெந்ததும்,மறுபுறம் திருப்பி வேகவிடவும்.ரொம்பவும் முறுகலாக எடுக்ககூடாது.
*இன்னொரு அடுப்பில்,பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் எலுமிச்சை சாறு+ரோஸ் எசன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*பொரித்த ஜாங்கிரிகளை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*1/2 மணிநேரம் கழித்து பரிமாற அனைவருக்கும் பிடித்த சுவையான ஜாங்கிரி ரெடி!!
பி.கு:
*ஒட்டையை மிக மெலிதாக போடவும்.மாவு சரியாக பிழிய வரவில்லையெனில் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கவும்.

*சர்க்கரை பாகு தண்ணீயாக இல்லாமலும்,கெட்டியாக இல்லாமலும் இருக்கனும்.

*பொரித்த ஜாங்கிரியும்,சர்க்கரை பாகும் சூடாக இருக்கனும்.
Wednesday, 6 October 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பார்லி இட்லி/Oats Barley Idly

தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்+உப்பைத் தவிர பார்லி,உளுந்து+வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் பார்லி+உளுந்து மைய அரைக்கவும்.

*ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

*புளித்ததும் இட்லி(அ)தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
Tuesday, 5 October 2010 | By: Menaga Sathia

வாழைப்பழ ப்ரெட்

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
கோதுமைமாவு - 1 1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டைதூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை(அ)தேன் - 1 1/4 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை:
* வெதுவெதுப்பான சிறிது நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

* ஒரு பவுலில் மாவு வகைகள்+உப்பு+உருக்கிய வெண்ணெய்+மசித்த வாழைப்பழம்+பட்டைதூள்+ஈஸ்ட் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெப்பமன இடத்தில் ஈரத்துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் 2 மடங்காக உப்பியிருக்கும் மாவை கைகளால் நன்கு பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ப்ரெட் பானின் நீளம் அகலத்திற்கேற்ப மாவை வடிவில் உருட்டி ப்ரெட் பானில் ஒருதுணியால் மூடி 3/4 மணிநேரம் வைக்கவும்.

*முற்சூடு செய்த அவனில் 200°C க்கு 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.


Sunday, 3 October 2010 | By: Menaga Sathia

பார்லி சூப்/Barley Soup

தே.பொருட்கள்:பார்லி - 3/4 கப்
விருப்பமான காய்கள் - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*பார்லியை 1/2 மணிநேரம் 2 கப் நீரில் ஊறவைத்து அந்த நீருடனேயே குக்கரில் 5 விசில் வரை வேகவைக்கவும்.வெந்ததும் பார்லியை வடிகட்டவும்.1 கைப்பிடி வேகவைத்த பார்லியை மட்டும் அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம்+காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் பார்லி வேகவைத்த நீர் +உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் பாதி வேகவைத்த பார்லி + அரைத்த பார்லி அனைத்தையும் ஒன்றாக கலந்து மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

பி.கு:
அவரவர் விருப்பப்படி அனைத்தையும் ஒன்றாக வேகவைத்து அரைத்தும் செய்யலாம்.
Friday, 1 October 2010 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 4/Tomato Chutney

தே.பொருட்கள்:
தக்காளி - 4 பெரியது
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*தக்காளி+புளி இவற்றை விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைபோட்டு தாளித்து சாம்பார் பொடியை போட்டு உடனை உப்பு+அரைத்த தக்காளி விழுதை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொத்தித்து கெட்டியாக வரும் போது வெந்தயப்பொடியை தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இட்லி,தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
01 09 10