Tuesday, 17 May 2016 | By: Menaga Sathia

கேரளா ஸ்டைல் காளன் / Kerala Style Kalan | Onam sadya Recipe


காளன்‍‍‍**சேனை மற்றும் வாழைக்காய் சேர்த்து செய்வது.ஒணம் சத்யாவின் மிக முக்கியமாக இடம்பெறும் மெனு இது.

தே.பொருட்கள்

சேனைகிழங்கு 1/4 கப் நறுக்கியது
வாழைக்காய் 1/2 கப் நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகுதூள் 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
நெய் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
புளித்த தயிர் 2 கப்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி 1/4டீஸ்பூன்

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து ,புளித்த தயிரில் கலந்து ,உப்பு+1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்.

*சேனையை முதலில் 1/4 மஞ்சள்தூள் சேர்த்து 1/4 பாகம் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.இது சேனையின் காரல் தன்மையை போக்கும்.

*மீண்டும் சேனையை சிறிது நீர் ஊற்றி மிளகுதூள்+மிளகாய்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*பாதியளவு வெந்ததும் கறிவேப்பிலை+வாழைக்காயை சேர்த்து வேகவைக்கவும்.

*காய்கள் நீர் சுண்டும் அளவு வேகவைத்த பின் லேசாக மசிக்கவும்.

*பின் தயிர் கலவையை சேர்த்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.

*லேசாக கொதித்து வரும் போது இறக்கி நெய் மற்றும் வெந்தயப்பொடி சேர்க்கவும்.

*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*தயிர் கலவையை ஊற்றியபின் சிறுதீயில் கலக்கிகொண்டே இருக்கவும்,இல்லையெனில் தயிர் திரிந்துவிடும்.
Wednesday, 13 April 2016 | By: Menaga Sathia

கேரளா பருப்பு கறி / Kerala Parippu Curry | Onam Recipes

print this page PRINT IT
சாதாரணமாக பருப்பு கறியினை,பாசிப்பருப்பு மட்டும் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து (அதிகமான நீரை மேலோடு எடுத்து ரசம் செய்வது வழக்கம்) உப்பு கலந்து சாதத்தில் நெய் சேர்த்து பரிமாறுவார்கள்.

ஆனால் கேரளா பருப்பு கறியில் தேங்காய் மசாலா அரைத்து சேர்ப்பார்கள்,அதன்படி ஒருநாள் செய்தபின் இப்பொழுதெல்லாம் பருப்பு கறியினை தேங்காய் இல்லாமல் செய்வதில்லை.

தே.பொருட்கள்

பாசிபருப்பு- 1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
நீர்- 2 கப்
உப்பு -தேவைக்கு
நெய் -1 டீஸ்பூன்

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்- 1/3 கப்
பூண்டுப்பல்- 2
இஞ்சி துறுவல்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 1

தாளிக்க‌
தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -2
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*வெறும் கடாயில் பாசிபருப்பினை வாசனை வரும் வரை வறுத்து மஞ்சள்தூள்+2 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவிடவும்.



*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மைய அரைக்கவும்.

*பருப்பு வெந்ததும் உப்பு+அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து சிறுதீயில் 5 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்.

*பின் தேங்காய் எண்ணெயில் கடுகு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி பருப்பில் சேர்க்கவும்.

*பரிமாறும் போது நெய் சேர்த்து,உருளை வருவல் அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

பி.கு
*பருப்பு ஆறியதும் கெட்டியாகிவிடும்,அதற்குதகுந்தாற் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*ஒணம் சத்யாவின் செய்யும் போது இஞ்சி,பூண்டு,சின்ன வெங்காயம் சேர்க்காமல் செய்யவும்.

*பருப்பினை எப்போழுதும் வறுத்து வேகவைக்கவும்,நல்ல மணமாக இருக்கும்.

Saturday, 2 April 2016 | By: Menaga Sathia

கார பாத்& கேசரி / Chow Chow Bath ( Khara Bath & Kesari) | South Indian Breakfast Menu



சௌ சௌ பாத் என்பது காரபாத்,கேசரி,தேங்காய் சட்னி மற்றும் காபியுடன் கர்நாடாகவில் பரிமாறப்படும் காலை உணவு.

காரபாத் என்பது நம்ம ஊர் கிச்சடி போல தான்,ஆனால் இதில் வெங்காயம் சேர்க்காமல் செய்வார்கள்,மேலும் பாத் மசாலா பொடி அல்லது வாங்கிபாத் பொடி சேர்ப்பார்கள்.

காராபாத்
கேசரி 
தேங்காய்சட்னி

*காராபாத் குறிப்பினை விரைவில் பகிர்கிறேன்.

*கேசரிக்கும்,காராபாத்திற்கும் ரவையினை தனித்தனியாக வறுத்து வைக்கவும்.

*தேங்காயை துருவி சட்னிக்கும்,காராபாத்திற்க்கும் வைக்கவும்.

*தக்காளி மற்றும் காய்களை நறுக்கி வைக்கவும் மற்றும் காராபாத்திற்கும்,கேசரிக்கும் தண்ணீரினை கொதிக்க வைக்கவும்.அனைத்தும் ரெடியாக இருந்தால் பாத் மற்றும் கேசரி செய்து முடிக்கலாம்.

*கடைசியாக சட்னி அரைத்து ,தாளித்தபின் பரிமாறவேண்டியது தான்.

*மொத்த சமையலும் 1/2 மணிநேரத்தில் முடிக்கலாம்.
Monday, 28 March 2016 | By: Menaga Sathia

ரசவடை / Rasa Vadai | Nanjil Spl Recipe


ரசவடை ‍நாஞ்சில் நாட்டு சமையலில் மிக பிரபலமான ஒன்று.வடை செய்வதற்கு பட்டாணி பருப்பு தான் முக்கியம்.அது கிடைக்காத பட்சத்தில் கடலைப்பருப்பில் வடையை செய்யலாம்.

பட்டாணிபருப்பு ,இதை பற்றி முக்கியம் நான் சொல்லியே ஆகனும்,இதனை கடைகளில் பார்த்தாலும் ஏதோ தேவையில்லாத பருப்பு போல இதனை வாங்கவே மாட்டேன்.கடலைபருப்பு போல இல்லையே இது எதுக்குனு வாங்கமாட்டேன்.ஆனால் சாந்தி அக்காவின் பதிவை பார்த்ததும் அடக்கடவுளே !! இத்தனை நாளா இதனையா நாம வாங்காமல் விட்டோம்னு வருத்தம்...

ஆமாங்க,நான் தேவையில்லாத பருப்புனு எதை நினைத்தேனோ அதுதான் பட்டாணிபருப்பாம்,அப்புறமென்ன வாங்கி வந்து ரசவடையும் செய்து சாப்டாச்சு.கடலைபருப்பை விட பட்டாணிபருப்பின் விலை இங்க குறைவு தான்.வடையின் சுவையிலும் வித்தியாசம் தெரிகிறது.இனி கடலைபருப்புக்கு பைபை சொல்லவேண்டியது தான்.பட்டாணி பருப்பினை ஆங்கிலத்தில் Yellow Split Peas ,ப்ரெஞ்சில் POIS CASSES JAUNEஅழைக்கபடுகிறது.

இப்போ குறிப்புக்கு வருவோம்,ரசவடை செய்வதற்கு வடையை உருண்டையாகதான் போடுவாங்க.உளுந்து வடையில் செய்த ரசவடைலாம் ரசவடையே இல்லைன்னு நாஞ்சில் நாடு சாந்திஅக்கா சொல்லிட்டாங்க.அதனால் ரசவடை செய்தால் பருப்பு வடையினையே சேர்க்கவும்.அவங்க ரசவடை குறிப்பினை அவ்வளவு சுவையோடு எழுதியிருந்ததை படித்ததும் ஆர்வமாகி செய்தாச்சு.

அதேபோல் ரச செய்முறையும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

Recipe Source : Here 

வடை செய்ய‌

பட்டாணி பருப்பு- 1 கப்
காய்ந்த மிளகாய்- 6
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு + எண்ணெய் -தேவைக்கு

செய்முறை 
*பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்தபின் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

*சாதரணமாக வடைக்கு அரைப்பதுபோல் கொரகொரப்பாக அரைக்காமல் ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்களை கலந்து சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ரசம் செய்ய‌

இந்த ரசம் மசாலா செய்வதற்கு,அரைதெடுத்த மொத்த மசாலாவும் நெல்லிக்காயளவு மட்டுமே இருக்க வேண்டும்.

தே.பொருட்கள்
தக்காளி ‍- 2
புளிகரைசல்- 2 கப்
நீர்- 1 கப்
உப்பு- தேவைக்கு
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
எண்ணெய்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி -தேவைக்கு

மசாலா செய்ய‌
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
தனியா- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பூண்டுப்பல்- 10


செய்முறை
*மிளகு+சீரகம்+தனியா+காய்ந்த மிளகாய்+மஞ்சள்தூள் இவற்றை சற்றே கரகரப்பாக பொடித்த பின் கறிவேப்பிலை மற்றும் பூண்டினை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்ததும் அரைத்த மசாலா மற்றும் பெரிய துண்டுகாளாகிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

*தக்காளியின் மேல்தோல் மட்டும் சற்று பிரிந்தாற்போல் வந்ததும் புளிகரைசல்+உப்பு+நீர் சேர்க்கவும்.

*ரசம் நுரைத்து வரும் போது பெருங்காப்பொடி+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ரசவடை செய்ய‌

*ரசத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் ஆறிய வடைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

*பின் அப்படியே 2மணிநேரம் ஊறவைத்தால் வடைகள் 2மடங்காக உப்பியிருக்கும்.

*லேசாக சூடுபடுத்தி ரசவடையினை சூடாக பரிமாறவும்.
Saturday, 19 March 2016 | By: Menaga Sathia

வெண்பொங்கல்,மைசூர் போண்டா,சட்னி& அவசர சாம்பார் / South Indian Breakfast Menu

நான் எப்போழுதும் காலை உணவாக ஆம்லெட்,ப்ரெஞ் டோஸ்ட் தான் செய்வேன்,ஈஸியானதும் கூட.இன்றைக்கு சீக்கிரமாகவே எழுந்துவிட்டதால் காலை உணவாக பொங்கல்,போண்டா செய்தாச்சு..

வெண்பொங்கல்
மைசூர் போண்டா
தேங்காய் சட்னி   (இதில் மாங்காய் இஞ்சி சேர்க்காமல் அரைத்துள்ளேன்)
அவசர சாம்பார்

*இந்த அவசர சாம்பார் பருப்பு,தேங்காய் இல்லாமல் செய்தது,அதன் குறிப்பு வேறொரு நாளில்..

*எழுந்ததும் போண்டாவிற்காக உளுத்தம்பருப்பினை ஊறப்போடவும்.1 மணிநேரம் ஊறினால் போதும்.

*அதற்குள் குக்கரில் அரிசி பருப்பினை வேகவைத்தால் பொங்கல் ரெடி,அதன் பின் பொங்கலுக்கு தாளிக்கவும்.

*தேங்காயை எப்போழுதும் துருவி ப்ரீசரில் வைத்துவிடுதால்,மைக்ரோவேவில் தேவைக்கு தேங்காய் டிப்ராஸ்ட் செய்து சட்னி ரெடி செய்யவும்.

*பின் இன்னொரு குக்கரில் சாம்பார் செய்தால் அதுவும் ரெடி.

*கடைசியாக பருப்பினை அரைத்து போண்டா செய்து,காபியுடன் டிபனை பரிமாறவேண்டியது தான்.

*பருப்பு ஊறவைக்கும் நேரம் தவிர 3/4 மணிநேரத்தில் அனைத்தையும் செய்துவிடலாம்.
Wednesday, 16 March 2016 | By: Menaga Sathia

சீரக சாதம்,ஆலு பாலக்,கோவைக்காய் ராய்தா,ப்ளெயின் குல்சா,மசாலா மோர் / North Indian Veg Lunch menu

எப்போழுதும் தெந்நிந்திய மெனு சாப்பிட்டு போரடிவிட்டதால்,ஒரு மாறுதலுக்காக வட இந்திய லஞ்ச் செய்தேன்.என் பொண்ணு பாலக் பன்னீர் செய்ய சொன்னாங்க,ஆனால் பனீர் கைவசம் இல்லாததால் அதற்கு பதில் உருளை போட்டு செய்தாச்சு.

சீரக சாதம் (பால் சேர்க்காமல்,சீரகம் மட்டும் தாளித்து சேர்க்கவும் )
ஆலு பாலக் ( பனீர் பதில் உருளை சேர்க்கவும்)
மசாலா மோர்
கோவக்காய் ராய்தா
ப்ளெயின் குல்சா (ஸ்டப்பிங் சேர்க்காமல் செய்யவும்)

*அனைத்தும் ரெடியாக வைத்திருந்தால் சமையல் 1 மணிநேரம் முடித்துவிடலாம்.

*குல்சா செய்ய மாவினை பிசைந்து ஊறவைத்து விடவும்.

*மசாலா மோர் செய்து ப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

*அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்,உருளையை வேகவைக்கவும்.ஆலு பாலக் செய்ய வெங்காயம்+தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

*சாலட்டிற்கு வெள்ளரிக்காய்,தக்காளியை வட்டமாக நறுக்கவும்.ராய்தாவிற்கு கோவைக்காய் துருவி வைத்தால் ராய்தா ரெடி.

*பாலக் கீரையை வதக்கி அரைத்தால் ஆலு பாலக் ரெடி செய்து விடலாம்.

*கடைசியாக சாதமும்,குல்சாவும் செய்தால் லஞ்ச் ரெடி...

Monday, 14 March 2016 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி குழம்பு,கோங்கூரா பச்சடி,அவியல்&கொட்டு ரசம் / South Indian Veg Lunch Menu




இன்றைய சமையல்

மாங்காய் இஞ்சி குழம்பு
கோங்கூரா பச்சடி
அவியல்
கொட்டு ரசம்

*இந்த மொத்த சமையலும் 1 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.இதில் கோங்கூரா பச்சடி மட்டும் முதல் நாளே செய்துவிட்டேன்.

*புளியை குழம்பிற்கும்,ரசத்திற்கும் சேர்த்து ஊறவைத்து ,கரைத்து குழம்பு மற்றும் ரசத்திற்கு தனியாக வைக்கவும்.

*குழம்பிற்கு இஞ்சியை நறுக்கி,எண்ணெயில் வறுத்து அரைத்து வைக்கவும்,அவியலுக்கு தேங்காய் மசாலா தனியாக அரைத்துவைக்கவும்.

*அவியலுக்கு காய்களும்,குழம்பிற்கு வெங்காயம்,பூண்டும் நறுக்கி வைத்தால்,அவியல்,குழம்பு செய்துவிடலாம்.

*கடைசியாக ரசம்,சாதம் வைத்தால் உண்வு ரெடி!!
01 09 10