Monday, 4 May 2009 | By: Menaga Sathia

இறால் உருண்டைக் குழம்பு /Eral(Prawn) Urundai Kuzhambu


தே.பொருட்கள்:

உருண்டைக்கு:

குட்டி இறால் - 100 கிராம்
பொட்டுக்கட்லை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
தேங்காய் - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


க்ரேவிக்கு:

வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1டீஸ்பூன்

செய்முறை:


* இறாலை சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வதக்கி ஆறவிடவும்.

* இறால் மற்றும் தேங்காயை அரைக்கவும்.


*அரைத்த இறால்,தேங்காய் விழுது+பொட்டுக்கடலைமாவு+உப்பு+சோம்புத்தூள்+முட்டை+வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கெட்டியாக கலக்கவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலைமாவு சேர்க்கலாம்.

*பிசைந்தவைகளை உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



*க்ரேவிக்கு வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.


*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பால்,உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.


*நன்கு கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு,எலுமிச்சை சாறு சேர்த்து 2 ந்மிடம் கொதித்தபின் இறக்கவும்.






16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா அசத்தலான ரெஸிபி , உருண்டைகளை சும்மாவே சாப்பிடனும் போல் உள்ளது, நீங்கள் புரோஜன் இறாலா பயன் படுத்தி இருக்கிறீர்கள்.
அது ரப்பர் மாதிரி இருக்குமே,நாங்கள் புரோஜன் அவ்வளவா வாங்கியதில்லை.
கறி உருண்டை தான் அடிக்கடி செய்வோம், அடுத்த முறை இறால் செய்யும் போது இது போல் செய்து பார்க்கீறேன்.

சென்ஷி said...

வாவ்.. பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டேன். இந்த வாரம் பிரண்ட் ரூம்ல இதை டிரை செய்ய வேண்டியதுதான் :-))

போட்டோஸ் அற்புதம்! பசியெடுக்க வைக்குது

சென்ஷி said...

நீங்க எழுதியிருக்குற அளவு எத்தனை பேர் சாப்பிடுறதுக்கு?

(நான் இறால்ன்னா நான் யாரையும் கூட்டு சேர்த்துக்கறதில்லை. தனிஆவர்த்தனம்தான்) :-)

Menaga Sathia said...

ஜலிலாக்கா தங்கள் கருத்துக்கு நன்றி!!.ஆமாம் சும்மாவே அந்த உருண்டையை சாப்பிடலாம்.

Menaga Sathia said...

சென்ஷி செய்து பார்த்து சொல்லுங்க.எனக்கு இந்த அள்வில் நார்மலா 13 உருண்டைகள் வந்தது.தாராளமா 3 பேர் சாப்பிடலாம்.இறால்னா உங்களுக்கு அவ்வளவு விருப்பமா?..

Malini's Signature said...

ஆஹா இது புதுசா இருக்கே ஆனா நானும் உங்க கச்சிதான்பா.

SUMAZLA/சுமஜ்லா said...

மேனகா,
உங்க ப்ளாக் மிகவும் அழகு. இந்த குறிப்பின் புகைப்படங்கள் அதை விட அழகு!

Menaga Sathia said...

ஆமாம் ஹர்ஷினி நாம 2 பேரும் ஒரே கட்சி தான்.இறால் குழம்பு செய்தால் குழம்பு மட்டும் சாப்பிடுவேன்.இந்த குறிப்பு என் மாமியாரிடம் கத்துக்கிட்டது.

Menaga Sathia said...

//மேனகா,
உங்க ப்ளாக் மிகவும் அழகு. இந்த குறிப்பின் புகைப்படங்கள் அதை விட அழகு!//

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சுமஜ்லா!!

தாஜ் said...

இதை பார்த்ததும் ஊர் ஞாபகம்தான் வருது மழைகாலங்களில் அதிகமாய் இந்த குழம்பு செய்வார்கள் என்னா ருசியாக இருக்கும்

Menaga Sathia said...

ஆமாம் தாஜ் ரொம்ப நல்லாயிருக்கும்னு சாப்பிட்டவங்க சொல்வாங்க.

Unknown said...

ஆஹா எனக்கு பிடித்த ஐட்டம்..

Menaga Sathia said...

அப்படியா பாயிசா,உங்களுக்கும் இறால்னா ரொம்ப பிடிக்குமா?

Anonymous said...

it is very nice.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி அனானி!!

Priya Anandakumar said...

super Menaga, romba nallairrukku. I have done chicken and mutton balls but not with shrimp. looks awesome, will give it a shot for sure...

01 09 10