தே.பொருட்கள்:
கருவாடு - சிறிது
மொச்சைக் கொட்டை - 1/2 கப்
முருங்கைகாய் - 1
வாழைக்காய் - 1
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
*மொச்சையை முதல்நாள் இரவே வெறும் கடாயில் லேசாக வறுத்து ஊறவைக்கவும்.
*மறுநாள் மொச்சையை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
*பருப்பை தனியாக வைத்து,அதே நீரில் புளியை ஊறவைத்து 1 கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*கருவாட்டை சுத்தம் செய்யவும்.வெங்காயம்+சீரகம்+கறிவேப்பிலையை நசுக்கவும்.காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தை போட்டு தாளிக்கவும்.
*பின் நசுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் போது காய்+கருவாடு+மொச்சை போட்டு இன்னும் நன்கு கொதிக்கவிட்டு,காய் வெந்ததும் இறக்கவும்.
பி.கு:விரும்பினால் குழம்பு கொதிக்கும் போது பல்லாக நறுக்கிய தேங்காயை குழம்பு கொதிக்கும் போடலாம்.இன்னும் சுவையா இருக்கும்.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
பார்க்கும் பொழுதே ருசி தெரிகிறது மேனகா..இதை போல் செய்து பார்க்கிறேன்.
பசி வயிற்றைக் கிள்ளுகிறது.மீன் குழம்பு படம் வேற அதை இரட்டிப்பு ஆக்குது.
(நம்புங்க!அம்மணி சாப்பாட்டுத் தட்ட 'டபக்'ன்னு கொண்டு வந்து வச்சுட்டு சமயலறைக்கு மறுபடியும் போயிட்டாங்க.என்ன வருதுன்னு தெரியல.நான் சாப்பிடப் போறேன்)
ஆகா!இங்கயும் மீன் குழம்பு.ஆனா உங்க ஸ்டைல் அல்ல.
தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!.
தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ நடராஜன்!!
அருமை!
இப்பவே உக்காந்து சாப்பிடனும் போல இருக்கு!
சாப்பிட வாங்க ஜோதிபாரதி எங்க வீட்டுக்கு.
vadakam enraal?
வடகம் என்பது நாங்கள் தாளிப்பதற்க்கு பயன் படுத்துவோம்.என் குறிப்பில் இருக்கு பாருங்கள்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,தமிழிஷில் என் குறிப்பிற்க்கு ஒட்டு போடுவடஹ்ற்க்கும் மிக்க நன்றி மலர்!!
http://sashiga.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D வடக குறிப்பு லிஞ்க் குடுத்திருக்கேன் பாருங்கள்.உங்கள் ப்ளாக் பார்த்தேன் நல்ல சமூக சிந்தலையுடன் எழுதறீங்க.வாழ்த்துக்கள் மலர்!!
என்னவொரு ப்ரசண்டேஷன்,உங்கள் படைப்புக்களை பரிமாறிய விதம் பார்க்கவே அடிக்கடி வருவேன்,இந்தக்குழம்பு நான் தூத்துக்குடியில் இருக்கும் பொழுது என் தோழி ஒருவர் செய்து தருவார் அதை நினைவு படுத்திவிட்டது.அருமையான குழம்பு.
தங்கள் பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!!.இந்த குழம்பினால் உங்க தோழியை ஞாபகபடுத்தியதில் சந்தோஷம்.
karuvattu kolambu paarkave arumaiya eruku
Post a Comment