Thursday, 11 October 2012 | By: Menaga Sathia

கார்ன்மீல் பொங்கல்&தேங்காய் சட்னி -2/Cornmeal Pongal &Coconut Chutney - 2

கார்ன்மீல் பொங்கல்

தே.பொருட்கள்
கார்ன்மீல்(சோளரவை ) - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்

செய்முறை

*பாசிபருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து கார்ன்மீல் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.

*பின் வேகவைத்த பாசிபருப்பு+உப்பு + தேவையானளவு கொதிநீர் சேர்த்து கிளறவும்.

*வெந்ததும் நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
அம்மா தேங்காய் சட்னியை விதவிதமாக செய்வாங்க,அதில் இந்த செய்முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஹோட்டல் தேங்காய் சட்னி போலவே இருக்கும்.

தேங்காய் சட்னி

தே.பொருட்கள்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
புளி -ப்ளூபெர்ரி பழளவு
சின்னவெங்காயம் - 2
பச்சை மிளகாய் -4
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டு -2 பல்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
*1 டீஸ்பூன் எண்ணெயில் சின்ன வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+பூண்டு  இவற்றை வதக்கவும்.

*ஆறியதும் இதனுடன் தேங்காய்த்துறுவல்+உப்பு+பொட்டுக்கடலை+புளி தேவையான நீர் சேர்த்து மைய அரைத்து தாளித்து சேர்க்கவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

wow really good one..

ராமலக்ஷ்மி said...

பார்க்கும் போதே சுவைக்கும் ஆசை வருகிறது:)! தேங்காய் சட்னி வெங்காயம் இஞ்சி பூண்டு வதக்கி செய்வது வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

அம்பாளடியாள் said...

நல்ல சுவையான பகிர்வு !...செய்து சாப்பிட வேண்டியதுதான் .
ஆனா உங்க அளவுக்கு சுவையா சமைக்க முடியுமா ?...!..:)
மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு .

Unknown said...

Nice one...never tried pongal wth cornmeal...looks yum...

Unknown said...

Very healthy breakfast....

divya said...

looks mouthwatering...just delicious!

divyagcp said...

Delicious pongal.. Healthy and yummy!!

Divya's Culinary Journey

திண்டுக்கல் தனபாலன் said...

குறிப்பிற்கு நன்றி சகோதரி...

Jayanthy Kumaran said...

that looks soooper good & tasty
Tasty Appetite

Unknown said...

I should say i am kinda obsessed to cornmeal...love it in any form...nice combo...
B-O-O-O-O Halloween Event Oct 5th to Nov 5th
SYF&HWS - Cook with Spices

South Indian Cooking (SIC) Series

Priya Suresh said...

Mouthwatering here, cornmeal pongal and chutney yummm, inviting.

preethiDhinesh said...

Roma naala iruku unga blog .excellent presentaion . following u.
Check my blog in ur spare time
http://www.followfoodiee.com/

preethiDhinesh said...

Roma naala iruku unga blog .excellent presentaion . following u.
Check my blog in ur spare time
http://www.followfoodiee.com/

Unknown said...

மேனகா, 2 குட்டீஸை வெச்சுக்கிட்டு இந்த கலக்கு கலக்கறீங்க.

வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜேமாமி

Unknown said...

மேனகா, அப்படியே என் ப்ளாகிற்கு வருகை தாருங்கள்.
'manammanamviisum.blogspot.in'
அன்புடன்
ஜேமாமி

Hema said...

Just before coming to India, I tasted polenta (cornmeal), never cooked anything with it, this looks good..

01 09 10