ப்ரெஞ்ச் சாலட் டிரெஸிங் செய்ய இந்த Dijon Mustard, Red Wine Vinegar & échalotes 3 பொருட்களும் மிக முக்கியம்.சுவையும் மிக நன்றாக இருக்கும்.
échalotes என்பது ஒரு வகை வெங்காயம்,ப்ரெஞ்ச் சமையலில் அதிகம் பயன்படுத்தபடும் வெங்காயம் இது.
சாலட் டிரெஸிங் செய்ய தே.பொருட்கள்
ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -1/4 டீஸ்பூன்
Dijon Mustard - 1/2 டீஸ்பூன்
Red Wine Vinegar -1 டேபிள்ஸ்பூன்
échalotes - 1 சிறியது.
ப்ரெஷ் மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் ஹெர்ப்ஸ் -சிறிது விரும்பினால் சேர்க்கலாம்.
இந்த அளவு டிரெஸிங் 1/4 கப் வரும்.
செய்முறை
*Dijon Mustard + ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
*Red Wine Vinegar சேர்க்கவும்.
*நன்கு கலந்த பின் மிளகுத்தூள்+உப்பு சேர்க்கவும்.
*விரும்பினால் ப்ரெஷ் ஹெர்ப்ஸ் சேர்க்கலாம்,நான் சேர்க்கவில்லை.
*பரிமாறும் போது மட்டும் échalotes மிகப் பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கவும்.
சாலட் செய்ய
மிக்ஸட் லெட்டூஸ் -250 கிராம்
சாலட் சீஸ் -125 கிராம்
செர்ரி தக்காளி - 8
வேகவைத்த சோளம் -1/2 கப்
சாலட் டிரெஸிங் -1/4 கப்
செய்முறை
*இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பரிமாறும் போது சாலட் டிரெஸ்ஸிங் சேர்த்து பரிமாறவும்.
7 பேர் ருசி பார்த்தவர்கள்:
Migavum piditha lettuce salad .Arumaya iruku .
Healthy & yummy Salad..
colorful salad.. quite refreshing
nice healthy salad.
enakku lunchu kku sooper ah irukkum
Healthy, colorful and delicious salad..
Can we have this for lunch
Post a Comment