இந்த மாதம் Friendship 5 Series -ல் இடம்பெறுவது Kids Fast Food உணவுகள்..
தே.பொருட்கள்
ஸ்பிரிங் ரோல் /சமோசா ஷூட் - 5
மைதா -2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - மேலே தடவ
ஸ்டப்பிங் செய்ய
வேகவைத்த உருளைக்கிழங்கு -2 பெரியது
ப்ரோசன் பட்டாணி - 3/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
மாதுளம்பழ பொடி - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் -1 டீஸ்பூன்
செய்முறை
*கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து வேகவைத்த உருளையை மசித்து சேர்க்கவும்.
*பின் பட்டாணி மற்றும் மஞ்சள்த்தூள்+மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
*தூள் வாசம் போனதும் மாதுளம்பழ பொடி+கொத்தமல்லித்தழை தூவி இறக்கி ஆறவைக்கவும்.
*சமோசா ஷீட்டை 2 மணிநேரத்திற்கு முன் ப்ரீசரிலிருந்து எடுத்து ஈரத்துணியால் மூடிவைக்கவும்.
*ஒரு கிண்ணத்தில் மைதாவை நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
*ஷீட்டின் ஒரு ஒரத்தில் ஸ்டப்பிங்கை 1 டேபிள்ஸ்பூன் அளவில் வைக்கவும்.
*அதனை அப்படியே முக்கோணமாக படத்தில் உள்ளவாறு மடிக்கவும்.
*கடைசியாக வரும் முக்கோணத்தில் மைதா பேஸ்டினை தடவி ஒட்டவும்.
*சமோசாக்களை பேக்கிங் டிரேயில் அடுக்கி ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
*அனைத்தையும் செய்து முடித்த பின் சமோசா மீது வெண்ணெய் தடவி அவனை 200 டிகிரி முற்சூடு செய்து 15-20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு
*சமோசாக்களை செய்து ப்ரீசரில் வைத்து தேவைபடும் போது உபயோகபடுத்தலாம்.
*பேக் செய்யும் போது வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் தடவி செய்யலாம்,வெண்ணெய் தடவி செய்வது சுவையாக இருக்கும்.
*உருளைக்கு பதில் சிக்கன் மற்றும் மட்டன் சேர்த்து செய்யலாம்.
*மாதுளம்பழ பொடிக்கு பதில் ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சைசாறு சேர்க்கலாம்.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
samosa looks great.......... also view my space http://prachisvegkitchen.blogspot.in/
This looks super.. yumm..
healthy version!!!
Samosa paakave romba azhaga irukku Menaga.
Baked samosas supera irruku Menaga, appadiye oru plateaa saapidalam..
Yummy somasa's
Post a Comment