தே.பொருட்கள்
புழுங்கலரிசி -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் -2
செய்முறை
*அரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.
*நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் அரைத்த மாவினை சேர்த்து கிளறி,ஒட்டாமல் வரும் போது தேங்காய்த்துறுவலை சேர்த்து கிளறி இறக்கவும்.
*இதனை சூடு பொறுக்கும் பதத்தில் உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*அப்படியே சாப்பிட நன்றாக இருக்கும்.
பி.கு
*இன்னும் சுலபமாக செய்ய அரிசியை ஊறவைத்து அரைப்பதற்கு பதில் அரிசிமாவில் செய்யலாம்.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
so perfect snack.. yumm!
காரச்சட்னி நல்ல காம்பினேஷன்!
நேற்று ஒரு தளத்தில் இதே போல் ஒரு பகிர்வை கண்டோம்... உங்கள் செய்முறைப்படி செய்து பாக்கிறோம் சகோதரி...
அருமை.
super tiffin....
My favourite snacks, drooling here.
அருமையான ரெசிபி! எங்கள் வீட்டிலும் செய்வார்கள்! நன்றி!
My favorite evening snack....looks so tempting and tasty dear :)
Post a Comment