நீண்ட நாட்களாக ஓண சத்யா சாப்பாடு சாப்பிட வேண்டும் என்ற ஆசை உண்டு.சின்ன வயசில் அக்காவின் தோழி மினி அக்கா வீட்டில் ஒரு முறை ஒண சத்யா சாப்பாடு சாப்பிட்டுருக்கேன்.
முகநூல் தோழி மைலி ரகுபதி சமீபத்தில்தான் எனக்கு அறிமுகம்.அவங்ககிட்ட ஓணசத்யா சாப்பாடு சிம்பிள் ரெசிபி கேட்டேன்,அனைத்தையும் என்னிடம் பகிர்ந்துக்கிட்டாங்க.மிக்க நன்றி மைலி!!
ஒண சத்யா உணவை பாரம்பரியமாக தலைவாழையிலையில் தான் பரிமாறுவாங்க.அதில் கிட்டதக்க 13 - 15 வகையான கறி வகைகள்,ஊறுகாய் வகைகள்,3-5 வகை பாயாசம்,பப்படம் என 25 வகையான பதார்த்தங்கள் செய்து பரிமாறுவாங்க.
பருப்பு கறி ,3 வகையான ஊறுகாய் வகைகள்,நேந்திரன் சிப்ஸ்,சாம்பார்,ரசம்,3-5 வகையான தோரன்,ஒலன்,அவியல்,காளன்,மோரு கூட்டன்,எரிசேரி,மோர்குழம்பு,புளிசேரி ,கிச்சடி,பச்சடி,கொத்துக்கறி,புளி இஞ்சி,2-3 வகை பாயாசம்,நேந்திரம் சிப்ஸ்,உப்பேரி,வாழைப்பழம்,பப்படம்,மோர் என நிறைய வகைகள் செய்வாங்க.
மேலும் இலையில் பரிமாறுவதற்கும் முறை இருக்கு.எனக்கு தெரிந்த வரையில் நான் செய்துருக்கேன்.
இலையின் மேலே இடது பக்கத்தில் ஊறுகாய்,புளி இஞ்சி மற்றும் இதர வகைகளும்,கீழே இடது பக்கத்தில் வாழைப்பழம்,பப்படம்,சிப்ஸ், சாதம் மற்றும் பாயாச வகைகளும் பரிமாறுவர்கள்
ஒண சத்யாவில் வெங்காயம்+பூண்டு சேர்க்க மாட்டாங்க.வாழைக்காய்,சேனை,தயிர்,தேங்காய் தான் முக்கியமாக இடம் பெறும்.
நான் எங்களுக்கு தகுந்த மாதிரி சிறிய அளவிலும்,முக்கியமான குறிப்புகளையுமே செய்துருக்கேன்.
பாரம்பரிய சுவை கிடைக்க தேங்காய் எண்ணெயை தாளிக்க பயன்படுத்தவும்.
இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய்
புளி இஞ்சி
கேரட் தோரன்
ஒலன்
அவியல்
எரிசேரி
பருப்பு கறி
சாம்பார்
ரசம்
மோரு கூட்டன்
பருப்பு பாயாசம்
நேந்திரன் சிப்ஸ் -- கடையில் வாங்கியது
பருப்பு கறி
தே.பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -1
தாளிக்க
எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+சீரகம் -தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
கா.மிளகாய் -1
செய்முறை
*பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வறுத்து மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
*பின் உப்பு+தேவைக்கு நீர்+அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைத்து தாளித்து சேர்க்கவும்.
*பரிமாறும் போது நெய் சேர்த்து பரிமாறவும்.
இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்
*1/2 கப் பொடியாக நறுக்கிய மாங்காயில் 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்+உப்பு சேர்க்கவும்.பின் எண்ணெயில் கடுகு+பெருங்காயம் தாளித்து சேர்க்கவும்.
கேரளா சாம்பார்
இந்த சாம்பாரின் ஸ்பெஷல் மசாலாவை ப்ரெஷ்ஷாக பொடித்து சேர்ப்பதுதான்.
தே.பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
புளிகரைசல் - 1/3 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
காய்கள் -1/2 கப் முருங்கைகாய்,கேரட்,பீன்ஸ்,கத்திரிக்காய்
தக்காளி - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வறுத்து பொடிக்க
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயம் -சிறிது
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -சிறிது
காய்ந்த மிளகாய் -1
கறிவேப்பிலை -சிறிது
செய்முறை
*வேகவைத்த துவரம்பருப்புடன் மஞ்சள்தூள்+காய்கள்+ சேர்த்து வேகவைக்கவும்.
*வெந்ததும் நறுக்கிய தக்காளி+புளிகரைசல்+பொடித்த பொடி+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*வெண்டைக்காய் சேர்க்க விரும்பினால் தனியாக எண்ணெயில் வதக்கி தக்காளி சேர்க்கும் போது சேர்க்கவும்.
*சாம்பார் திக்காக இருந்தால் தேவைக்கு நீர் சேர்க்கவும்.பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து இறக்கவும்.
மோரு கூட்டன்
அனைவருக்கும் ஒணம் நல்வாழ்த்துக்கள் !!

இதில் பெரும்பாலும் வெள்ளை பூசணிக்காய் சேர்த்து தான் செய்வாங்க.அதற்கு பதில் சேனைக்கிழங்கு அல்லது வாழைக்காய் சேர்க்கலாம்.
தே.பொருட்கள்
வாழைக்காய் - 1 சிறியது.
தயிர் - 1/2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க
தேங்கய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் -1
காய்ந்த மிளகாய் - 1
சீரகம் -1/2 டீஸ்பூன்
மிளகு -10
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
காய்ந்த மிளகாய் -1
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மைய அரைக்கவும்.அதனுடன் தயிர் + 1/2 கப் நீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
*வாழைக்காய் பெரிய அளவில் வட்டமாக வெட்டி கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.
*பாத்திரத்தில் தயிர் கலவையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறுதீயில் கிளறி விடவும்.
*சிறுதீயில் வைத்து கிளறினால் தயிர் பிரியாது.
*5 நிமிடம் கழித்து வேகவைத்த வாழைக்காயை சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாலித்து சேர்க்கவும்.
பி.கு
*புளி இஞ்சியில் மைலி சொன்ன மாதிரி வெந்தயத்தூள் பதிலாக உளுத்தமாவு 1 டீஸ்பூன் சேர்த்து செய்தேன்.
அனைவருக்கும் ஒணம் நல்வாழ்த்துக்கள் !!
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
nice spread
நமது முகநூல் நண்பர்களுக்கு "ஓணம் திருநாள் வாழ்த்துகள்" நமது நண்பர் திருமதி Menaga Sathia அவர்கள் ஓணம் விருந்து படைத்திருக்கிறார். நிறைய ஓணத்திற்கான சமையல் குறிப்புகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திருமதி Menaga Sathia.
sooper yummy platter..
Very neatly presented!
such a wonderful spread, love it!!!
kerala special dishes superrrrr...
ஓணம் விருந்து மிக அருமை மேனகா! அசத்தி விட்டீர்கள்!!
What a lovely spread...everything looks so good :)
Kalaki irrukeenga Menaga, delicious and tempting..
Hi dear,
Did not understand though...looks yummy
ஓணம் தாளி சூப்பர்
Post a Comment