PRINT IT
நாஞ்சில் நாடு - கன்னியாகுமாரி,நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைக் கொண்டது.கேரளா சமையல் போலவே இங்கும் சமையலில் அதிகம் தேங்காயும்,தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயும் பயன்படுத்துகிறார்கள்.
இதில் நான் சமைத்திருப்பது
பருப்புகறி+நெய்
கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு
தக்காளி ரசம்
வாழைப்பூ தோரன்
அவியல்
வெள்ளரிக்காய் கிச்சடி
மசால் வடை மற்றும்
காஜூ கத்லி
இதில் காஜூ கத்லி தவிர மொத்த சமையலும் செய்து முடிக்க 1 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆனது.
வாழைப்பூ தோரன் / Vazhaipoo ( Banana Blossom ) Thoran
தே.பொருட்கள்
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ- 2 கப்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய்- 1
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வாழைப்பூ+உப்பு சேர்த்து 1/2 கப் அளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் 1 சுர்று சுற்றி எடுக்கவும்.
*வாழைப்பூ வெந்ததும் கறிவேப்பிலை மர்றும் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.
வெள்ளரிக்காய் கிச்சடி / Cucumber Kichadi
தே.பொருட்கள்
வெள்ளரிக்காய் 1 சிறியது
தயிர் 1/2 கப்
உப்பு தேவைக்கு
தாளிக்க
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை -1 கொத்து
அரைக்க
தேங்காய்த்துறுவல் -1/3 கப்
பச்சை மிளகாய்- 1 சிறியது
சீரகம் -1/4 டீஸ்பூன்
கடுகு -1/8 டீஸ்பூன்
செய்முறை
*வெள்ளரிக்காயை தோல் சீவி இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கவும்.
*கடாயில் நறுக்கிய வெள்ளரிக்காய்+உப்பு மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து வேகவிடவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*வெள்ளரிக்காய் வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
*நன்கு ஆறியதும் தயிர் சேர்த்து கலக்கவும் மற்றும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
பி.கு
தயிரை வெள்ளரிக்காய் நன்கு ஆறிய பிறகே சேர்க்கவும்.
6 பேர் ருசி பார்த்தவர்கள்:
ருசியான விருந்துச்சாப்பாட்டைப் பரிமாறி விட்டீர்கள் மேனகா.
நாஞ்சில் நாட்டு விருந்து ஏக அமர்கக்ளமாக இருக்கிறது மேனகா!
ஆஹா... படம் பார்க்கும் போதே ரொம்ப பசிக்குதே சகோதரி....
sooper o sooper
super. romba pasikuthu. sapitu varenda Menaga :)
nice thali menu.. wish to eat all tes at a time.. valaipoo thoran s the best.. In addition to these, we usually have a kootu accompanying theeyal style dishes in Nagercoil..
Post a Comment