Thursday, 29 January 2015 | By: Menaga Sathia

நாஞ்சில் ஸ்டைல் வெஜ் தாளி / NANJIL STYLE VEG THALI | THALI RECIPES





print this page PRINT IT

நாஞ்சில் நாடு- கன்னியாகுமாரி,நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைக் கொண்டது.கேரளா சமையல் போலவே இங்கும் சமையலில் அதிகம் தேங்காயும்,தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயும் பயன்படுத்துகிறார்கள்.

இதில் நான் சமைத்திருப்பது

பருப்புகறி+நெய்
கத்திரிக்காய் முருங்கைக்காய் குழம்பு
தக்காளி ரசம்
வாழைப்பூ தோரன்
அவியல்
வெள்ளரிக்காய் கிச்சடி
மசால் வடை மற்றும்
காஜூ கத்லி

இதில் காஜூ கத்லி தவிர மொத்த சமையலும் செய்து முடிக்க 1 மணிநேரம் 30 நிமிடங்கள் ஆனது.

வாழைப்பூ தோரன் / Vazhaipoo ( Banana Blossom ) Thoran

தே.பொருட்கள்

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைப்பூ- 2 கப்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு -தேவைக்கு

அரைக்க‌

தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

தாளிக்க‌

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய்- 1

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வாழைப்பூ+உப்பு சேர்த்து 1/2 கப் அளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் 1 சுர்று சுற்றி எடுக்கவும்.

*வாழைப்பூ வெந்ததும் கறிவேப்பிலை மர்றும் அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

வெள்ளரிக்காய் கிச்சடி / Cucumber Kichadi

தே.பொருட்கள்

வெள்ளரிக்காய் 1 சிறியது
தயிர் 1/2 கப்
உப்பு தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை -1 கொத்து

அரைக்க‌

தேங்காய்த்துறுவல் -1/3 கப்
பச்சை மிளகாய்- 1 சிறியது
சீரகம் -1/4 டீஸ்பூன்
கடுகு -1/8 டீஸ்பூன்

செய்முறை

*வெள்ளரிக்காயை தோல் சீவி  இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி பொடியாக நறுக்கவும்.

*கடாயில் நறுக்கிய வெள்ளரிக்காய்+உப்பு மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து வேகவிடவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நீர் சேர்க்காமல் மிக்ஸியில் 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*வெள்ளரிக்காய் வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

*நன்கு ஆறியதும் தயிர் சேர்த்து கலக்கவும் மற்றும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

தயிரை வெள்ளரிக்காய் நன்கு ஆறிய பிறகே சேர்க்கவும்.


6 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாந்தி மாரியப்பன் said...

ருசியான விருந்துச்சாப்பாட்டைப் பரிமாறி விட்டீர்கள் மேனகா.

மனோ சாமிநாதன் said...

நாஞ்சில் நாட்டு விருந்து ஏக அமர்கக்ளமாக இருக்கிறது மேனகா!

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... படம் பார்க்கும் போதே ரொம்ப பசிக்குதே சகோதரி....

Lifewithspices said...

sooper o sooper

Thenammai Lakshmanan said...

super. romba pasikuthu. sapitu varenda Menaga :)

Anonymous said...

nice thali menu.. wish to eat all tes at a time.. valaipoo thoran s the best.. In addition to these, we usually have a kootu accompanying theeyal style dishes in Nagercoil..

01 09 10