Wednesday, 19 August 2009 | By: Menaga Sathia

வாழைப்பழ கேசரி

இது என்னோட 100வது பதிவு!!என் ப்ளாக்கை படிப்பவர்கள்,பின்னூட்டமிடுபவர்கள்,பாலோவர்ஸாக இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி!!

தே.பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 2
ரவை - 3/4 கப்
சக்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 3
முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் -2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் -1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 8
தண்ணீர் -3/4 கப்

செய்முறை:

* பாதாமை தோலெடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.

*1டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் ரவையை வறுக்கவும்.3/4 கப் கொதித்த தண்ணீரை ரவையில் சேர்க்கவும்.

*அத்துடன் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து விடாமல் கிளறி சர்க்கரையை சேர்க்கவும்.

*சக்கரை கரைந்து சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+எசன்ஸ்+வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.

பி.கு:

அசத்தலான சுவையில் இருக்கும் இந்த கேசரி.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாராம்மா said...

dear menaga

congragulations for ur century.make it into 200 soon.

with regards
anita

சாருஸ்ரீராஜ் said...

மேனகா உங்கள் 100 பதிவு சுவிட்டா இருக்கு , பார்கும் போதே சாப்பிட தோணுது

சப்ராஸ் அபூ பக்கர் said...

என்னமா சமையல் பண்றீங்க?.... அதுவும் வாழைப் பழத்தில்.... அருமையோ அருமை....

சென்ஷி said...

வா(வ்)ழ்த்துக்கள்..

இனிப்பான மற்றுமொரு துவக்கம்!

வால்பையன் said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

வாழைப்பழ கேசரி யாராவது செஞ்சு கொடுத்தா சாப்பிடலாம்!

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் மேனகா...இனிப்புடன் சேர்த்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இனிப்புடன் செண்ட்ச்சுரியா


வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

ஸ்வீட்டா ஒரு செஞ்சுரி. வாழ்த்துக்கள்

சிங்கக்குட்டி said...

வாழ்த்துக்கள்...மற்றும் இனிப்புக்கு நன்றி :-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

வாழ்த்துக்கள்.. கலக்குங்க.. விரைவில் ஆயிரமாவது பதிவ ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தம்பி!!

இராகவன் நைஜிரியா said...

உங்களது 100வது இடுகைக்கு வாழ்த்துகள்.

வாழைப்பழ கேசரி... பார்க்கையிலே பரவசம் ஊறுதுங்க..

SUFFIX said...

முதன் முறையா இந்த பக்கம் வந்து, தங்களது நூறாவது பதிவை பார்வையிடுகிறேன். வாழைப்பழம் எளிதாக கிடைக்ககூடியது தான், செய்முறையும் எளிதாகவே இருக்கு, Presentation அருமை, வாழ்த்துக்கள்!!

துளசி கோபால் said...

சதமடிச்சதுக்கு இனிய பாராட்டுகளும் இனிய வாழ்த்து(க்)களும்.

Jaleela Kamal said...

100 வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் மேனகா.

வாழைபழ கேசரி கொடுத்து அசத்திட்டீங்க.

Menaga Sathia said...

தங்கள் அனைவரின் வாழ்த்திற்க்கும்,கருத்துக்கும்

@நன்றி சாராம்மா
சீக்கிரம் ப்ளாக்கில் எழுத ஆரம்பிங்க.

@நன்றி சாரு,ம்ம் சீக்கிரம் செய்து சாப்பிடுங்க.

@நன்றி சப்ராஸ் அபூபக்கர்
பைனாப்பிள் கேசரி இதுவும் நல்லாயிருக்கும்.

Menaga Sathia said...

தங்கள் அனைவரின் வாழ்த்திற்க்கும்,கருத்துக்கும்

@நன்றி சென்ஷி!!

@நன்றி வால்பையன்!!வாங்க வீட்டுக்கு செய்து தரேன்.

@நன்றி கீதா!!

Menaga Sathia said...

தங்கள் அனைவரின் வாழ்த்திற்க்கும்,கருத்துக்கும்

@நன்றி ஜமால்!!

@நன்றி நவாஸுதீன்!!

@நன்றி சிங்கக்குட்டி!!

@நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

தங்கள் அனைவரின் வாழ்த்திற்க்கும்,கருத்துக்கும்

@நன்றி இராகவன் நைஜிரியா!!

@நன்றி ஷஃபிக்ஸ்!!

@நன்றி துளசி கோபால்!!

@நன்றி ஜலிலாக்கா!!

Unknown said...

அடடா நான் தான் எப்பவும் ரொம்ப லேட்டா சொல்றேன்..லேட்டா சொன்னாலும் சம்பந்தி சொன்னால் ஸ்பெஷல்தான்,வாழ்த்துக்கள் மாமி...உங்களோட 100 ரொம்ப சீக்கிரமே 1000 ஆகனும் அதற்கு என் பிரார்த்தனையும் வாழ்த்துக்களும்..வாழைப்பழத்துல அல்வா,கேக் எல்லாம் கேட்டு இருக்கிறேன்,கேசரியும் நல்லா இருக்கும் போல தெரியுது..கலக்கிட்டீங்க மாமி!!

Menaga Sathia said...

சம்மந்தி நீங்க லேட்டா வாழ்த்தினாலும் வாழ்த்து வாழ்த்துதானே.அதுவும் சம்மந்தி வாழ்த்து எப்பவும் ஸ்பெஷல் தான்.உங்களின் ப்ரார்த்தனைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி மாமி!!

Unknown said...

வாழ்த்துக்கள் மேனகா
நான் தான் லேட் மேனகா சாரி. மாமியார் வீட்டில் இருப்பதால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை


இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
இனிப்பான வாழைப்பழ கேசரி விதியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருக்கு

Unknown said...

வாழ்த்துக்கள் மேனகா
நான் தான் லேட் மேனகா சாரி. மாமியார் வீட்டில் இருப்பதால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை


இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
இனிப்பான வாழைப்பழ கேசரி விதியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருக்கு

Unknown said...

வாழ்த்துக்கள் மேனகா
நான் தான் லேட் மேனகா சாரி. மாமியார் வீட்டில் இருப்பதால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை


இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
இனிப்பான வாழைப்பழ கேசரி விதியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருக்கு

Unknown said...

வாழ்த்துக்கள் மேனகா
நான் தான் லேட் மேனகா சாரி. மாமியார் வீட்டில் இருப்பதால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை


இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்.
இனிப்பான வாழைப்பழ கேசரி விதியாசமாகவும், பார்க்க அழகாகவும் இருக்கு

ப்ரியமுடன் வசந்த் said...

100வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சகொதரி

ஸ்வீட்டோட கொண்டாடிட்டீங்க போல..

Menaga Sathia said...

லேட்டாக சொன்னாலும் வாழ்த்துதானேப்பா.எப்ப சென்னை வருவீங்க?
தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

ஆமாம் வசந்த் ஸ்வீட்டோட கொண்டாடிட்டேன்.தங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரரே!!

Malini's Signature said...

வாழ்த்துகள் மேகனா ..உங்க 100 பதிவை எதிர்பாத்துட்டே இருந்தேன் ஆனா இன்னைக்கு தான் பாக்க முடிந்தது... அதுக்குள்ளே நீங்க 100 தாண்டி போயிட்டீங்க :-)... இப்ப தான் பிளாக் ஆரம்பிச்சது போல இருந்த்து இன்னும் பல பல சுவையான ரெசிபி குடுக்க வாழ்த்துகள்

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கு நன்றி ஹர்ஷினி அம்மா!!நீங்க சொல்வது உண்மைதான் ப்ளாக் ஆரம்பித்து 8 மாதமாகுது அதுக்குள்ள சதம் அடித்தது எனக்கே ஆச்சர்யமா இருக்குப்பா.அதுக்கு நீங்களும் ஒரு வகையில் காரணம்.ஏன்னா உங்களால் தான் நான் எழுத ஆரம்பித்தேன்.

01 09 10