பிரான்ஸ் நாட்டின் தென் - மேற்கு பகுதியில் Midi - Pyrénéees என்னும் மாநிலத்தில் லூர்து நகரம் அமைந்துள்ளது.அமெரிக்கா என்றால் நமக்கு சுதந்திர தேவியின் சிலை ஞாபகம் வருவது போல் ப்ரான்ஸ் என்றால் அனைவருக்கும் லூர்து மாதா கோயில் தான் ஞாபகம் வரும்.கடந்த வியாழக்கிழமை 6ந் தேதி நான்,கணவர்,பொண்ணு மூணு பேரும் காரில் லூர்துக்கு போனோம்.
இது நான் 2 வது தடவை அந்த கோயிலுக்கு போவது.முதல் தடவை 2003 ல் அம்மா,அக்கா கூட போனேன்.கணவருடன் முதல் தடவையாக இந்த வருடம் போய்ட்டு வந்ததில் ஒரு திருப்தி.எனக்கு இந்த கோயிலைப் பற்றி ப்ளாக்கில் எழுத ஆசை.எனக்கு ஒரளவுதான் தெரியும் எப்படி எழுதுவதுன்னு யோசித்துகிட்டே உட்கார்ந்திருந்தேன் அப்போ ஒரு தமிழர் வந்து ஒரு தாள் குடுத்துத்து போனார்.
என்னன்னு படித்துபார்த்தா அந்த கோயிலின் வரலாறு இருந்தது அதுவும் தமிழில்,எனக்கு அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது.மாதாவின் சக்தியை நினைத்து வியந்தேன்
கோயிலின் அழகான முகப்புத் தோற்றம்.
அந்த கோயிலின் வரலாறை பார்ப்போம்
இயற்கை அழகு கண்கொள்ளாத வண்ணம் அமைந்திருக்கும் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது "லூர்ட்ஸ்" என்ற சின்னஞ்சிறு நகரம்.தென்மேற்கு ப்ரான்ஸ் பகுதியில் "Midi - Pyrénéees" என்ற மலைத்தொடரின் மத்தியப் பகுதியில் உள்ள இந்தச் சிறிய ஊரை,ஒவ்வொரு வருடமும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறார்கள்.இந்த சின்னஞ்சிறு ஊரில் அப்படியென்ன விசேஷம்?
லூர்ட்ஸ் என்னும் இவ்வூரில் அமைந்துள்ள மாதா கோயில்,கோயிலின் அடிவாரத்தில் உள்ள "கிரிட்டோ" எனப்படும் குகை,அந்தப் பகுதியில் குபுகுபுவென பொங்கி வரும் கற்கண்டாய் இனிக்கும் தெளிவான புனிதமான ஊற்று நீர்.ஊரின் நடுவே மிகவும் ப்ரம்மாண்டமாக மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது புனித லூர்து மாதா கோயில்
உலகெஞ்கும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஸ்லிகாக்களில் ஒன்றான இந்த ஆலயத்தை மாதாவே விரும்பி அமைத்துக் கொண்ட கதையை பார்க்கலாம்.
மேலே இருக்கும் படம் தான் லூர்து மாதா,கோயிலின் உள்ளே சிறிது தூரம் நடந்தால் மாதாவைக் காணலாம்.
19ம் நூற்றாண்டில் கேவ் நதியின் கரையில் பல மாவு மில்கள் அமைக்கப்பட்டிருந்தன.அத்தகைய மில் ஒன்றில் பணி புரிந்து வந்த பிரான்ஸிஸ் தன் மனைவி லூயிஸ் சௌபிரஸ் மர்றும் 4 குழந்தைஅக்ளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.இனிமையான இவர்களின் வாழ்வில் திடீரென துன்பங்கள் தொடர்ந்து வரத்தொடங்கின.
மில்லில் வேலை செய்யும் போது சிறு கல் ஒன்று பிரான்ஸிஸ்ஸின் இடதுகண்ணில் புகுந்து கண்பார்வை பறிபோயிற்று.2 மூட்டைகள் மாவினை திருடியதாக அவர்மேல் தவறான பழி விழு,எட்டு தினங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.ஊரெங்கும் பஞ்சமும்,காலரா நோயிம் பரவிற்று.
இந்நோய் பிரான்ஸிஸ்ஸின் மூத்த மகளான பெர்னாடெட்டையும் தாக்கிற்று.வசதியில்லாத காரணத்தினால் நடுத்தெருவிற்க்கு வந்த குடும்பத்தினரைப் பார்த்து பரிதாபப்பட்டு,அவர்களின் உறவினர் ஒருவர் பழைய சிறையான "காசோட்" என்ற அறையை அவர்கள் தங்குவதற்க்காக அளித்தார்.
தந்தை முதலில் சிறைக்கு சென்றார்,இப்போது குடும்பத்துடன் அனைவருமே சிறையில் தங்குகிறார்கள் என ஊரில் பலர் அவர்களைக் கேலி செய்தனர்.உடல்நலமில்லாததாலும்,ஊர்ப் பேசிய கேலியினாலும்,பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டாள் பெர்னாடெட்.பதினான்கு வயதாகியும் பள்ளிக்குச் செல்லாததால் ஆங்கிலத்திலோ,ப்ரெஞ்சிலோ பேச,படிக்க,எழுத தெரியாது.
அவளுக்குப் பேசத் தெரிந்தது கூட மாறுபட்ட பிரெஞ்சு மொழிதான்.அவள் மான்க்கவலைகளை வாரா வாரம் மாதா கோயிலுக்கு சென்று முறையிட்டு அழுவாள்.
(மீதி அடுத்த பதிவில்)
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஆர்குட்லயே பாத்தேன் படங்கள் கண்களுக்கு இதமாய் இருந்தது எத்தனைநாள் சுற்றுலா?
பயணக்கட்டுரையா ...
5 நாள் சுற்றுலா,நன்றி வசந்த்!!
ஆமாம் ஜமால்,5 நாள் சுற்றுலா போனேன் அதை எழுதுகிறேன்..
படிக்க ஆவலாக உள்ளேன் , சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்கள்
நாளை போடுகிறேன் சாரு,நன்றி!!
நன்றிங்க,,, நம்ம பேச்சயும் கேட்கறீங்களே அதுக்கு தான்!!
படமும் அழகு!!பதிவும் அழகு!!கலக்குங்க மாமி இன்னும் படிக்க ஆவலாதான் இருக்கேன்!!
தம்பி பேச்சை அக்கா கேட்காமல் இருப்பாங்களா.நான் தான் நன்றி சொல்லனும் என்னை எழுத சொன்னதற்க்கு நன்றி ராஜ்!!
தங்கள் கருத்துக்கு நன்றி மாமி!!
நல்ல கட்டுரை.
//அமெரிக்கா என்றால் நமக்கு சுதந்திர தேவியின் சிலை ஞாபகம் வருவது போல் ப்ரான்ஸ் என்றால் அனைவருக்கும் லூர்து மாதா கோயில் தான் ஞாபகம் வரும்.//
ஓஹோ அப்படிங்களா, நான் என்னமோ 'ஈபில் டவர்' தான் ஞாபகம் வரும்னு தப்பாலெ நினைச்சிகிட்டு இருந்தேன்.
இப்ப தெளிஞ்சிட்டேன் ;-)
தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி இளைய கரிகாலன்!!
very good blog. Bonne continuation et bravo.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ரவிசுகுணா!!
Post a Comment