*தலப்பாக்கட்டு பிரியாணி போலவே இந்த பிரியாணியும் பிரபலமானது.
*இதில் காரத்திற்கு மிளகாய்த்தூள்+பச்சை மிளகாய்க்கு பதில் காய்ந்த மிளகாயை அரைத்து சேர்க்கவேண்டும்.
*காய்ந்த மிளகாயின் நிறமே போதுமானதாக இருக்கும்,கலர் +மஞ்சள்தூள் சேர்க்க தேவையில்லை.
*கறி சிறிது வெந்த பிறகுதான் வெங்காயம் +தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
*இஞ்சி பூண்டு விழுதினை தனித்தனியாக அரைத்து சேர்க்கவேண்டும்.
தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
நறுக்கிய வெங்காயம் - 2 பெரியது
நறுக்கிய தக்காளி - 2 பெரியது
புதினா+கொத்தமல்லித்தழை - தலா 1 கைப்பிடி
பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
பிரியாணி இலை -2
கிராம்பு - 2
ஏலக்காய் -2
பட்டை -1 துண்டு
ஊறவைத்து அரைக்க
காய்ந்த மிளகாய் = 8-10
செய்முறை
*காய்ந்த மிளகாயை நன்கு விழுதாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் +நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் இஞ்சி விழுதினை சேர்த்து வதக்கவும்.
*பின் அரைத்த காய்ந்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கிய பின் சுத்தம் செய்த கறியை போட்டு நன்கு வதக்கவும்.
*10 நிமிடங்கள் கழித்து புதினா+கொத்தமல்லியை சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
*பின் தக்காளி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கி தயிர் சேர்க்கவும்.
*பின் உப்பு + 3 கப் நீர் சேர்த்து கறியை நன்கு வேகவிடவும்.
*இதற்கிடையே வேறொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைத்து அரிசியை போட்டு 3/4 பதத்தில் வேகவைத்து நீரை வடிகட்டவும்.
*கறிநன்கு வெந்த பின் வேகவைத்த அரிசியை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
*தோசைகல்லை காயவைத்து அதன்மேல் பிரியானி பாத்திரத்தை வைத்து மூடி அதன்மேல் ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய கஞ்சியை வைத்து தம்மில் 10 - 15 போடவும்.
*15 நிமிடங்கள் கழித்து மெதுவாக கிளறிவிட்டால் சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி!!
Sending To Priya's Valentine Day Contest & Faiza's Passion on plate Event
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
குறித்துக் கொண்டாயிற்று... நன்றி சகோதரி...
Sunday special?? Looks delicious!!
Can I have some. Superaa irukku paakave
look absolutely tempting !! Gorgeous
அழகான முறையில் எளிதாக பிரியாணி சமைக்கும் வழியை சொல்லிவிட்டீர்கள் தோழி, நிச்சயம் முயற்சி செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நன்றி... :)
பிரியாணி பார்க்கவே அருமை.
அய்யயோ பிரியாணி பிரியாணி...எனக்கு பிடித்த பிரியாணி [[அபிராமி அபிராமி ஸ்லாங்]]
Pakkave romba nalla irukku.super ponga.
So tempting and invitng.... Love it...
Event: Dish name starts with Q till Feb 28th
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு....பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Yummy & Flavored...
http://recipe-excavator.blogspot.com
பார்க்கவே சூப்பராக உள்ள்து
super tempting biryani, mouthwatering...
Ennaku pidicha biryani..bangalore sellum othu ellam sapiduvom
ennaku oru plate venum,super flavourful briyani.
Delicious, Thanks for linking this recipe to my event
Post a Comment