Monday 5 May 2014 | By: Menaga Sathia

MTR இன்ஸ்டண்ட் புளியோதரைப் பொடி /MTR Puliogare Mix | Instant Puliogare Powder | Friendship 5 Series - Homemade Powder # 1

print this page  PRINT IT

Friendship 5 Series  இவெண்டினை சவிதா & கீதா சேர்ந்து நடத்துறாங்க.ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் - வெள்ளி வரை தொடர்ந்து மாதம் ஒரு குறிப்பு என பகிர்ந்துக்கலாம்.இந்த மாதம் Homemade Powder Series.

MTR  இட்லிப் பொடி  குறிப்பினை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்.இந்த பிராண்டின் புளிசாதம்  பொடியும் நன்றாக இருக்கும்.

இந்த  பொடியை நான் உடனே பயன்படுத்தி விட்டதால் இதில் எந்த Preservative சேர்க்கவில்லை. நீண்ட நாள் வைத்திருந்து பயன்படுத்த வேண்டுமெனில் இதில் Acetic Acid & Tartaric Acid சேர்க்கவேண்டும்.

பரிமாறும் அளவு -2 நபர்
தயாரிக்கும் நேரம் -15 நிமிடங்கள்


தே.பொருட்கள்

புளி - சிறிய எலுமிச்சை பழளவு
மிளகு+சீரகம் - தலா 3/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
வெள்ளை எள் -1 டீஸ்பூன்
தனியா -1 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் -1/2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வேர்கடலை -1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1 டீஸ்பூன்

செய்முறை

*முதலில் வெறும் கடாயில் தனியா+கடலைப்பருப்பு+மிளகு+சீரகம்+வெந்தயம்+எள்+காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

*தேவையான உப்பையும் வறுத்து எடுக்கவும்.

*பின் புளியை பொடியாக நறுக்கி ஈரம் போக வெறும் கடாயில் வறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலையை வறுத்து வைக்கவும்.

*அதே கடாயில் மீதமுள்ள எண்ணெயில்  கடுகு+உளுத்தம்பருப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஆறவைக்கவும்.

*வறுத்த பொருட்கள் ஆறியதும் தனியா+கடலைப்பருப்பு+மிளகு+சீரகம்+எள்+வெந்தயம்+காய்ந்த மிளகாய்+தாளித்த பொருட்கள் இவற்றை சேர்த்து நைசாக பொடித்து தனியாக வைக்கவும்.
*பின் உப்பு+புளி சேர்த்து பொடிக்கவும்.
*இதனுடன் அரைத்து வைத்த பொடியை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*பின் கடைசியாக வேர்கடலையை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுக்கவும்.

*இதில்   Acetic Acid & Tartaric Acid  சேர்ப்பதாக இருந்தால் அதையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
*ஆறியதும் காற்று புகாத டப்பாவில் 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பி.கு

* கலந்த சாத வகைகளுக்கு உப்பை வடிக்கும் போதே சேர்த்து விடுவேன்,அதனால் இந்த இன்ஸ்டண்ட் மிக்ஸ்ல் உப்பை குறைத்து சேர்த்துள்ளேன்.

புளிசாதம் செய்யும் முறை

தே.பொருட்கள்

உதிராக வடித்த சாதம் -1 கப்
புளிசாத இன்ஸ்டண்ட் மிக்ஸ் -1/4 கப்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி இன்ஸ்டண்ட் மிக்ஸினை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கி சாதத்தை சேர்த்து கிளறி 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் மசால் வடை,உருளை வறுவல் அல்லது புதினா துவையலுடன்  பரிமாறவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

looks so tasty and yummy I never tried mix powder at home always make the gravy type.. this looks good

GEETHA ACHAL said...

நன்றி மேனகா...

இந்த பொடி ரொம்ப சூப்பராக இருக்கின்றது...சாதம் + வடை பார்க்கும் பொழுது செய்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்... நன்றி சகோதரி...

MANO நாஞ்சில் மனோ said...

நம்மால சாப்பிடதான் முடியல மனமார்ந்த வாழ்த்தை சொல்லிருவோம் மனோ...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

Unknown said...

Romba useful podi Menaga. Try panren.

Priya said...

Enaku migavum pidith elithana puliyotharai ...Arumaiyana mix

Gita Jaishankar said...

I am also a big fan of MTR puliogare mix, thanks for sharing this awesome recipe :)

Sangeetha Priya said...

super delicious homemade podi!!!

nandoos kitchen said...

This definitely is a very useful post.

Jaleela Kamal said...

மிக அருமையான கட்டு சாதம், எனக்கு பிடித்த மசால் வடையும் மிக அருமை மேனகா

Priya Suresh said...

MTR puliyodhrai mix veetulaye pannalam'nu prove pannitinga Menaga, masala vadakuda puli saadham supera irruku.

ஸாதிகா said...

ஆஹா மிக சுலபமாக செய்யலாம் போலிருக்கே.

Vysyas recipes said...

very useful post. tamarind podi comes handy at busy mornings. tamarind rice looks yummy.

Sivakumar said...

Sister.... I'm Prepared... Sema taste.... !

Sivakumar said...

Arumai….Arumai….சவுதியில் உள்ள எனது சகோதரனுக்கு செய்துகொடுத்து அனுப்பினேன், கொஞ்சம் எனது அலுவலக நண்பர்களுக்கு கொடுத்தேன், ஒரே பாரட்டுமழை... நன்றி சகோதரி...

01 09 10