ராஜம் பிராண்ட் அனைத்தும் மூலிகை சம்பந்தப்பட்ட தயாரிப்பு.இதில் சுக்கு காபி மிக்ஸ்+பருத்திப் பால் நன்றாக இருக்கும்.
பருத்தி பால் மிக்ஸில் அதிக இனிப்பு இருப்பதுப்போல் தோன்றியதால் அதை வாங்குவதில்லை.இந்த சுக்கு காபி மிக்ஸ் மட்டும் வாங்குவேன்.மிக சுவையாக இருக்கும்.
இதில் சுக்கு,தனியா,மஞ்சள்தூள்,வெந்தயம்,திப்பிலி,சித்தரத்தை,பனைவெல்லம்,மிளகு,அஸ்வகந்தா,நன்னாரி,அதிமதுரம்,ஜாதிக்காய் சேர்த்து செய்வார்கள்.நான் என்னிடம் இருந்த பொருட்களை மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.
சுக்கு காபியை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
*அதிகப்படியான பித்தம் குறையும்.
*உடலின் வெப்பத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
*ஜீரணத்தை தூண்டி ,பசியை அதிகரிக்கும்.
*மழைக்காலங்களில் ஏற்படும் சளி,காய்ச்சல் குணமாகும்.
தே.பொருட்கள்
சுக்கு - 25 கிராம்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
ஜாதிக்காய் -சிறியதுண்டு
கண்டதிப்பிலி - 2 குச்சிகள்
மிளகு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பனை வெல்லம் அல்லது வெல்லம் -சுவைக்கேற்ப
செய்முறை
*கொடுத்துள்ள பொருட்களில் பனை வெல்லம்+மஞ்சள்தூள் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
சுக்கு காபி செய்முறை
* 1 கப் நீரில் 2 டீஸ்பூன் சுக்கு காபி பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும்.
பி.கு
*இது கொஞ்சம் காரமாக இருக்கும்,அதனால் சுவைக்கேற்ப வெல்லத்தை சேர்க்கவும்.
*விரும்பினால் இதில் சிறிதளவு பால் கலந்து பருகலாம்,ஆனால் இதை ப்ளையினாக குடிப்பது தான் நன்றாக இருக்கும்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
Suda oru sukku coffee please..
my go to powder when I hv cold.. Nice to see the recipe for this..
nice, tasty coffee mix.
supera seithu irukinga ... nanum muyarchi seithu parkkiren
Sukku kaapi en kanavaruku migavum pidithathu.Arumai
Mmmm...flavorful
Tasty Appetite
நன்றி, பயனுள்ள தகவல்
நன்றி, பயனுள்ள தகவல்
Daily kudikalama morning ?
@Unknown
Yes,kudikalam
Post a Comment