Wednesday, 9 July 2014 | By: Menaga Sathia

கெஜரா / கெஜிரா | Gejira | Gaejira | Maida Sweet Square Cut Recipe

 சின்ன வயசுல பெட்டிக்கடையில இந்த கெஜிரா,எலந்தை வடை,தேன் மிட்டாய்,பட்டர் பிஸ்கட் இதெல்லாம் வாங்கி சாப்பிட்டது.இப்போழுதும் ஊருக்கு போனால் தேடி வாங்கி சாப்பிடுவேன்.இந்த கெஜிராவை 1 ரூபாய்க்கு 10 கொடுப்பாங்க..

இப்போழுது இதன் செய்முறையை பார்க்கலாம்

தே.பொருட்கள்

மைதா - 3/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
உப்பு - 1/8 டீபூன்
பேக்கிங் சோடா -1சிட்டிகை
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை

*சர்க்கரையை ஏலக்காய் சேர்த்து பொடிக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் தவிர மேற்கூறிய பொருட்களை சேர்த்து ஒன்றாக கலந்து 2 டீஸ்பூன் அளவு நீர் சேர்த்து பிசையவும்.


 *இதனை க்ளியர் ராப் கவரில் சுற்றி 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் பெரிய உருண்டையாக எடுத்து நீளவாக்கில் மெலிதாக கயிறு போல் சமமாக உருட்டவும்.
 *பின் கத்தியில் சிரிய சதுரங்களாக வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பி.கு

*குறைவான நீர் சேர்த்து பிசையவும்,இல்லையெனில் மாவு இளகி உருட்ட வராது அல்லது எண்ணெயில் பொரிக்கும் போது உதிர்ந்துவிடும்.

*பேக்கிங் சோடாவை மிக குறைவாக சேர்க்கவும்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

one of my fav.. looks great!

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்...

Hema said...

Gejira, we call it by this name only in Pondy right, perfectly done Menaga..

பால கணேஷ் said...

எனக்கும் இது ரொம்பப் பிடித்தமான உணவுப் பொருள். விரும்பிச் சாப்பிடற இதை வீட்லயே செய்ய முடியும்ங்கறதப் பார்த்ததும் குஷியாய்ட்டேன். தாங்ஸ்.

ADHI VENKAT said...

பேர் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனா இதை மைதா பிஸ்கெட் என்று சொல்வோம். நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.

nandoos kitchen said...

nice tasty treat. looks great!

Priya Suresh said...

Mouthwatering here, semaiya irruku menaga.

01 09 10