சோயா - முளைக்கீரை பொரியல்
தே.பொருட்கள்:
முளைக்கீரை - 1 கட்டு
சோயா உருண்டைகள் - 20
வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் -தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தாளிக்க:
கடுகு - 1டீஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*சோயாவை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போடவும்.
*சிறிது நேரத்தில் உருண்டை பெருசாகும்,மீண்டும் அதை நல்ல தண்ணீரில் அலசி பிழிந்துக் கொள்ளவும்.
*அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் துருவலாகிவிடும்.
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
*கீரையை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
*வதங்கியதும் சோயாதுருவலைப் போட்டு லேசாக வதக்கி கீரையை சேர்க்கவும்.உப்பு சேர்த்து மூடி வேக வைக்கவும்.
*தண்ணீர் ஊற்ற வேண்டாம்.கீரைவிடும் நீரிலேயே வெந்துவிடும்.
*வெந்ததும் தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.
பி.கு:
*இதே மாதிரி சோயாவை சேர்த்து எந்தவகை கீரையிலும் சேர்க்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
22 பேர் ருசி பார்த்தவர்கள்:
இது புது கலவையாயிருக்கே..செய்து பார்க்கிறேன்
மேடம் சூப்பர் சமையல் குறிப்புகள் கொடுக்குறீங்க
சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை போன்ற குறிப்புகளும் தரலாமே ............
நல்லாயிருக்கு உங்கள் இந்த கீரை பொறியல்
நிச்சயம் செய்துபாருங்க பாயிஷா,நாமே சொன்னால் தான் தெரியும் சோயா சேர்த்து செய்தது என்று.நன்றாக இருக்கும்.நன்றி பாயிஷா!!
தங்கள் கருத்துக்கு நன்றி வசந்த்!!
//சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை போன்ற குறிப்புகளும் தரலாமே // இனி வரும் குறிப்புகளில் தருகிறேன் வசந்த்!!
தன்கள் கருத்துக்கு மிக்க நன்றி இனியா!!
அருமையான குறிப்புக்கள்... நன்றி சத்தியா...
நன்றிங்க... கலக்குங்க..
நல்லா இருக்குங்க மாமி!! ஆனால் என்னால செய்து பார்க்க முடியாது..இங்க இந்த கீரை எல்லாம் கிடைக்குமானு தெரியாது அப்படியே கிடைத்தாலும் எந்த கீரைக்கும் எனக்கு பேர் தெரியாது..so sad...(கீரை கொஞ்சம் பார்சல் அனுப்புங்க அது செய்து அனுப்பினாலும் எனக்கு ok)
தங்கள் கருத்துக்கு நன்றி
@சந்ரு!!
@ராஜ்!!
@மாமி கீரை செய்தால் கண்டிப்பா பார்சல் அனுப்புறேன்,சாப்பிடுங்க.உங்களுக்கு லிங்க் அனுப்புறேன் அதுல பாருங்க கீரை பத்திய விபரம் இருக்கும்ப்பா.
நன்றி மாமி!!
உங்கள் குறிப்பு எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு.என்னோட அம்மா இப்படி தான் செய்வாங்க.ஆனா எனக்கு கீரை பிடிக்காது.என் பையனுக்கு மட்டும் இப்பவே குடுத்து பழக்குகிறேன்
தங்கள் கருத்துக்கு நன்றி உமா!!
பையனுக்கு பழகிவிடுவது நல்லது.உங்க குட்டி பெயர் என்ன?
என் பையனோட பேர் ரித்திக் ஷங்கர். ரித்திக் ரொம்ப சேட்டை. அதனால தான் என்னால அடிக்கடி உங்க blog-கு வர முடியல.
பையன் பெயர் அழகாயிருக்கு உமா.ஓஓ ரொம்ப சேட்டையா.பிள்ளையை பார்த்துக்குங்க.நேரம் இருக்கும் போது வாங்க.
உங்கள் செயல்முறையினை பார்த்து இன்று புரோக்கோலியில் செய்தேன்.நன்றாக இருந்தது.
நன்றி
மேனகா அருமையா ஹெல்தி குறிப்பு.
கீரை பொரியல் சூப்பரா இருக்கு மேனகா. எங்களுக்கும் அந்த கீரை லிங்க் அனுப்பி வெச்சீங்கனா,கீரை சாப்பிடும்போதெல்லாம் உங்கள நினைச்சிக்கிட்டே சாப்பிடுவோம்.
ஒ ஒ புரோக்கலியில் செய்தீங்களா,நானும் செய்து பார்க்கிறேன் கீதா.நன்றி!!
தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
வாங்க கவி,லிங்க் தானே அனுப்பி வச்சுட்டா போச்சு.என்னை நினைக்கறதுக்காகவே அனுப்புறேன்.நன்றி கவி கருத்துக்கு!!
hi ,thanks for ur notes ,what
is the English name for this mulaikkeerai? thanks.
Amarnath leaves என்று சொல்வாங்க.நன்றி Karu!!
Post a Comment