நாம் சாதரணமாக சௌசௌ (பெங்களூர் கத்திரிக்காய்) தோலை தூக்கிப் போடுவோம்,அப்படி செய்யாமல் துவையல் செய்து சாப்பிட்டால் நன்றாகயிருக்கும்.
தே.பொருட்கள்:
சௌசௌத் தோல் - ஒரு காயின் தோல்பகுதி மட்டும்.
உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 கொட்டைப்பாக்குளவு
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை :
*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு வருத்துக்கொள்ளவும்.
*சிறிது எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.
*மீதிருக்கும் எண்ணெயில் சௌசௌத் தோல்+தேங்காய்த்துருவல்+கறிவேப்பில்லை+காய்ந்த மிளகாயை வதக்கவும்.
*ஆறியதும் அனைத்தையும் உப்பு+புளி சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக நீர் சேர்த்து மைய கெட்டியாக அரைக்கவும்.
*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து நன்கு வதக்கி ஆறவைத்து பயன்படுத்தவும்.
22 பேர் ருசி பார்த்தவர்கள்:
எதையும் வீணாக்காமல் இருக்க நினைக்கும் விடயம் அழகுதான்.
என் நண்பர் ஒருவர் முட்டைகோஸில் சட்னி செய்தார் - ரொம்ப டேஸ்ட்டாக இருந்திச்சி - அது நினைவுக்கு வருது.
மேனகா , இந்த சட்னி கேள்வி படாத ஒன்று , அவசியம் செய்து பார்கிறேன்.
மேனகா எப்படி இருக்கீங்க.
சௌசௌத் தோல் துவையல் வித்தியாசமா இருக்கு.பார்க்கவும் சூப்பரா இருக்கு, ஆனா எங்களுக்கு இங்க இந்த காய் கிடைக்கிறதில்ல,அதனால இந்த துவையலை பார்க்க மட்டுமே முடியும்:(
microwave samayal konjam sollunga..
எங்கள் ஊரில் அதிகமாக விளையும் இந்த செளசெள இற்கு தமிழில் 'மேரக்காய்' என்று பெயர்.
நன்றி
புதுசு புதுசா சிந்திக்கிறீங்க, செஞ்சும் காண்பிக்கீறீங்க. நன்றி.
U r welcome dear....chowchow thoal thuvaiyal laaa......romba puthusa eruku pa....very nice ...
நன்றி ஜமால் தங்கள் கருத்துக்கு.முட்டைக்கோஸ் சட்னி எங்கம்மாவும் செய்திருக்காங்க.நன்றாகயிருக்கும்.
அவசியம் செய்துப்பாருங்க சாரு,நன்றி!!
கவி நான் நல்லாயிருக்கேன்பா.நீங்களும் ஷாமும் நலமா?நீங்கள் இருக்கும் இடத்தில் இந்தகாய் கிடைக்காதுன்னு சொல்லும் போது ஆச்சர்யமா இருக்குப்பா.தங்கள் கருத்துக்கு நன்றி கவி!!
மைக்ரோவேவ் சமையல் எனக்குத் தெரியாது,அதுல நான் சாப்பாடு சூடு செய்யமட்டும் பயன்படுத்துவேன்.க்ரில் செய்ய அவனை யூஸ் பன்னுவேன்.மேலும் ஹஸ்க்கு அதுல சாப்பாடு செய்தா பிடிக்காது.சாரி சகோதரரே!!
இதற்க்கு மேரக்காய் என்னும் பெயர் இருப்பதை உங்களால் அறிந்துக் கொண்டேன்.நன்றி சகோதரரே!!
தங்கள் கருத்துக்கு நன்றி ஷஃபிக்ஸ்!!
தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியாராஜ்!!
Nice recipe sashiga..i will do the similar one in ridge gourd .. will try this with chow chow too.. looks so good and delicious..
இனைக்கு எங்கள் வீட்டில் இந்த சௌசௌ துவையல் தான்...
நன்றி மேனகா.
நானும் பீர்க்காங்க்காய் தோலில் செய்துருக்கேன்.சௌசௌ தோலில் துவையல் செய்துபாருங்க.தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா!!
செய்துப்பார்த்து சொல்லுங்கள் கீதா.நன்றி!!
சௌ சௌ செஞ்சா வாவ் வாவ்னு சொல்ர மாதிறி இருக்குமாங்க??
நிஜமாவே செய்து சாப்பிட்டா வாவ் வாவ் ந்னு இருக்கும்.நன்றி ராஜ்!!
உங்க சமையலில் அடிக்கடி வடகம் பயன்படுத்த சொல்றீங்க.... அந்த வடகம் means what? அப்புறம், veg cutlet recipe சொல்ல முடியுமா?
வடகம் லிங்க் இணைத்துள்ளேன் பாருங்கள்.எங்கள் ஊர்பக்கம் வடகத்தை அதிகம் யூஸ் பண்ணுவாங்க.
விரைவில் கட்லட் ரெசிபி குடுக்கிறேன்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் பொற்கொடி கர்ணன்!!
Post a Comment