சோயாவை பத்தி தெரிஞ்சுக்கலாமா?
சோயா இதுபத்தி எல்லோருக்கும் தெரியும்.சோயாவின் பூர்விகம் கிழக்காசியா.அவரை இனத்தின் ஒருவகை தான் சோயா.வெஜ் பிரியாணியில் இதை உபயோகிப்போம் கறிக்கு பதில்.சீனா,அமெரிகா,ப்ரேசில் தான் சோயாவை அதிகம் உற்பத்தி செய்கின்றனர்.பெரும்பாலும் சீன உணவுகலில் சோயா சாஸை அதிகம் பயன்படுத்துவாங்க.இதில் ஒமேகா-3 சத்து அதிகம் இருக்கு.மீன் சாப்பிடதவங்க சோயாவை சாப்பிட்டால் அந்த சத்து தாராளமாக கிடைக்கும்.
சோயா உற்பத்தியில் அமெரிக்காதான் முதலிடத்தில் இருக்கு.சோயாவிலிருந்து சோயா உருண்டை,சோயாப் பால்,சோயா குருணை,சோயா பனீர்(டோபு),சோயா எண்ணெய்,சோயா சாஸ்,சோயா ப்ளேக்ஸ் என தயாரிக்கிறார்கள்.ஒரு நாளைக்கு 25கிரம் சோயா சாப்பிடுவதால் கொழுப்பு குறைவதுடன் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது.மேலும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சோயாவிலிருந்து எண்ணெய்,சோப்பு,அழுகு பொருட்கள்,ப்ளாச்டிக்,இங்க்,மெழுகு,துணி என்று பல்வேறு தயாரிக்கிறோம்.அமெரிக்காவில் சோயாஎண்ணெயை எரிவாயுவாக பயன்படுத்துகிறாங்க.சோயாவை வருடகணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பயன்கள்:
சோயாஉருண்டையை வெந்நீரில் போட்டு,நன்றாக அலசி,பிழிந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் தேவையற்ற வாசனை போய்விடும்.உடம்பில் LDL (Low Density Lipit) என்கிற கெட்ட கொலஸ்ட்ராலை சேரவிடாது.இதில் நார்சத்து,புரதம்,கால்சியம் நிறைந்திருக்கு.எலும்புகளை உறுதியாக்கும்,பற்களை வலுவடைய செய்யும்.இதில் விட்டமின் A,B6,B12,C,K இருக்கு.
100 கிராம் சோயாவில் 43 கிராம் புரதமும்,19.5 கிராம் கொழுப்பும்,20.9 கிராம் கார்போஹைட்ரேடும் இருக்கிறது.இதில் நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.மெனோபாஸ் நிலையை எட்டும் பெண்கள் சோயா சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.
ஆர்த்ரைடீஸ் ப்ரச்னை இருப்பவர்களுக்கு சோயா ஒரு இயற்கை மருந்து.பெண்கள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு சோயா.அவர்அளுக்கு ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் ப்ரச்னைகள்,அடிக்கடி அபார்ஷன் ஏற்படுதல் போன்ற பல ப்ரச்னைகளுக்கு சிறந்த நிவாரணி இது.
பெண்களுக்கு ஏற்படுகிற அதிகப்படியான உதிரபோக்ககை கட்டுப்படுத்துகிறது சோயா.எல்லா பருப்பு வகைகளிலும்20 முதல் 24 கிராம் புரதச்சத்து இருக்கும்.ஆனால் இதில் மட்டும் 2 மடங்காக அதாவது 43 கிரம் புரதசத்து இருக்கு.புரதசத்து இருப்பதால் ஒரு நாளுக்கு 20 கிராம் மட்டுமே சேர்த்துக் கொள்வது நல்லது.
சப்பாத்தி மாவுக்கு அரைக்கும் போது 4 கிலோ கோதுமையுடன் 1/2 கிலோ சோயாவையும் சேர்த்து அரைத்து வைத்து சப்பாத்திகள் செய்து சாப்பிடலாம்,ருசியாகவும் இருக்கும்.சில குழந்தைகளுக்கு பால் ஒத்துக்கொள்ளாமல் பேதியானால் சோயாப்பால் தரலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிகவும் அருமையாக எழுதி இருக்கிங்க...பயனுள்ள தகவல்கள்..எங்களுடன் பகிர்த்து கொண்டதற்கு நன்றி
ரொம்ப நல்ல தகவல் தந்திருக்கிங்க. சோயாவை பற்றி நிறைய பல பல விஷயம் தெரிந்துக்கொண்டேன்.
நல்ல தகவலை பகிர்ந்துக்கொண்டதர்க்கு நன்றி
சோயா உடலுக்கு மிக நல்லது. ஆமாங்க!!! அதை வைத்து உணவு செய்வது மிக நன்று..
கலக்குறீங்க... இன்ஃபொர்மேசன் இஸ் வெல்த்!!
பயனுள்ள, தெரியாத புது தகவல்கள்.
தங்களின் அனைவருடைய கருத்துக்கும் மிக்க நன்றி!!
@கீதா ஆச்சல்
@பாயிஷா காதர்
@தேவன்மாயம்
@ராஜ்
@சுமஜ்லா
நல்ல தகவல்கள் பகிர்வுக்கு நன்றிகள்...
வாழ்த்துக்கள்...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சந்ரு!!
மேனகா சோயா பற்றி நல்ல விளக்கம் கொடுத்து இருக்கீங்க.கலக்குங்க....
தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
சோயா பற்றிய பயனுள்ள குறிப்புகள்
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அமுதா கிருஷ்ணா!!
kallakureeganga madam
சோயா பத்தி ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க .நன்றி
நன்றி போல்!!
நன்றி சந்தியா!!
Post a Comment