தே.பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
வடகம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காயளவு
செய்முறை:
*கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரிக்கவும்.
*அதே கடாயில் காய்ந்த மிளகாய்+தேங்காயை லேசாக வதக்கவும்.
*ஆறியதும் புளி +உப்பு சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் சிறிது சிறிதாக நீர் சேர்த்து மைய அரைக்கவும்.
*இந்த துவையலை 2 நாள் வரை ப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
பி.கு:
இந்த துவையலை சாப்பிட்டு பார்த்தால்தான் அதன் சுவை தெரியும்.எனக்கு மிகவும் பிடித்த துவையல் இது.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
வித்தியாசமாக இருக்கே ...
அப்படியா சொல்றீங்க..
மேனகா வடகம்னு வத்தலையா சொல்றீங்க?
அன்புடன்,
அம்மு.
அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட்டால் போச்சு..
முடியும்னா நீங்க கட்டாயம் ஆண்கள் இலகுவாக சமைக்கக் கூடிய சமையல் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள். (ஆனால் ஒரு வேண்டுகோள்.... மிகவும் இலேசான முறையாக இருக்க வேண்டும் )
அருமையாக இருந்தது இன்றைய பதிவு... வாழ்த்துக்கள்...
கலக்கல் வடகதுவையல்..உங்க புண்ணியத்தால் வடகம் செய்தாச்சு..இப்போ இந்த துவையலும் செய்துவிட வேண்டியது தான்...
வித்தியாசம் மட்டுமில்லை,சாப்பிடவும் நன்றாக இருக்கும் ஜமால்.நன்றி தங்கள் கருத்துக்கு!!
ஆமாம் ராஜ் அப்படிதான்.சாப்பிட்டு பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க.நன்றி தங்கள் கருத்துக்கு!!
//மேனகா வடகம்னு வத்தலையா சொல்றீங்க?// இல்லை அம்மு,வடகம் என்பது தாளிப்பதற்க்கு சேர்ப்போம்.
நிச்சயம் அம்மாகிட்ட சொல்லி சாப்பிட்டு பாருங்க சந்ரு,நன்றாகயிருக்கும்.
//முடியும்னா நீங்க கட்டாயம் ஆண்கள் இலகுவாக சமைக்கக் கூடிய சமையல் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள். (ஆனால் ஒரு வேண்டுகோள்.... மிகவும் இலேசான முறையாக இருக்க வேண்டும் )
அருமையாக இருந்தது இன்றைய பதிவு... வாழ்த்துக்கள்...//
நிச்சயம் எனக்கு தெரிந்த ஈசியான முறையை எழுதுகிறேன்.
செய்துபார்த்து பின்னுட்டம் அளித்தற்க்கு மிக்க நன்றி சப்ராஸ் அபூபக்கர்!!
இனி இந்த துவையலை செய்து சாப்பிடுங்க.நன்றி கீதா தங்கள் கருத்துக்கு!!
படிக்கும்போது நன்றாக இருக்கிறது....அப்டியே கோவிச்சுக்காமெ வடகம் என்றால் என்னவென்று ஒரு சிறு குறிப்பு வரைக...
ZAKIR HUSSAIN
இந்த துவையலின் வாசமே வாயில் ஜொள்ளு வரும்.Superஆ இருக்கு. வாழ்த்துக்கள் Sashia
நன்றி ஜாகீர் உசைன்!! வடகம் எனப்து தாளிக்க பயன்படுத்தும் பொருள்.என் லேபிளில் வத்தல்/வடகம் என்று இருக்கும்,பாருங்கள்...
நன்றி செஃப்!!
Post a Comment