Tuesday, 18 August 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் -- சிறு குறிப்பு

ஓட்ஸ் (Oats) ஒரு தானியப் பயிர் வகை ஆகும்.இதில் மதம் (Gluten) கிடையாது. ஆகையால் பாண் (ரொட்டி) தயாரிப்பது இயலாதது. ஆனால் ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது.ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் "காடைக்கண்ணி" ஆகும்.


பார்லி,கோதுமைக்கு அடுத்து ஒட்ஸ் தானியப் பயிர் வகையில் 2 வது இடத்தில் இருக்கு.ஐஸ்லாண்டில் அதிகம் பயிரிடபடுகிறது.இதில் மொத்தம் 11 வகை இருக்கு.ஆஸ்திரேலியன் ஒட்ஸ் என்பதே உயர்ந்த வகையாக கருதப்படுகிறது.சற்று விலை அதிகம் என்றாலும் இது ரொம்ப சுவையானது.

இங்கிலாந்தில் குதிரைகளுக்குத் தீனியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.ஸ்காட்லாந்து மக்களின் முக்கிய உணவு தானியமே ஒட்ஸ் தான்.

"ஒட்ஸ்,குதிரைகளுக்கும் ஸ்காட்லாந்து மக்களுக்கும்தான் சரிப்பட்டு வரும்" -- இங்கிலாந்து பழமொழி.

"இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்காட்லாந்தில் மக்களும் ஆரோக்கியமாக இருக்க ஒட்ஸே காரணம் "- இது ஸ்காட்லாந்து பழமொழி.

ஒட்ஸை மூலப் பொருளாக கொண்டு,சில கம்பெனிகள் சருமப் பாதுகாப்பு லோஷன்களைத் தயாரிக்கின்றன.ஒட்ஸினுடைய தவிடு கொழுப்பு சத்தை குறைப்பதால்,பெரும்பாலும் பாலிஷ் செய்து தவிட்டை நீக்காமல்தான் அதைப் பயன்படுத்துகின்றனர்.உலகளவில் ஒட்ஸ் பொத்தம் 24.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் பயிரிடப்படுகிறது.

ஒட்ஸ் விளைச்சலில் ரஷ்யவின் பங்கு 20 சதவிகிதத்துக்கும் மேல்.ஒட்ஸில் புரதச்சத்து இருப்பதால் சைவபிரியர்கள் இறைச்சி,முட்டை போன்றவற்றுக்கு பதிலாக ஒட்ஸ் சாப்பிடலாம்.

முதன்முதலில் ஒட்ஸ் கிழக்கு ஐரோப்பாவில் விளைந்தாலும்,மேற்கு நாடுகளில்தான் முதன்முதலில் இதை தானியமாக பயன்படுத்தத் தொடங்கினர்.விவசாயிகளுக்கு பிடித்த தானியம் ஒட்ஸ் தான் காரணம் இதை பூச்சிகள் அரிப்பது மிகமிக அரிது.பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் ஒட்ஸ் கலக்கப்படுகிறது.

இது குளிர்ப்ரதேசங்களில் நன்றாக வளரும்.பனிக் காலத்தில் இது அழிவதில்லை.மிகவும் வேகமாலவும் வீரியமாகவும் வளரக்கூடிய ஒட்ஸ்,தன்னோடு வளரும் களைகளின் வள்ர்ச்சியையும் குறைத்துவிடும்.ஆயிர்வேத சிக்கிச்சையின் மூலம் பச்சை ஒட்ஸ் டிகாஷனைப் பயன்படுத்தி 45 நாட்களுக்குள் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியும் என்று சொல்கிறார்கள்.

சமச்சீரான சத்துக்களைக் கொண்டிருப்பதால் நரம்புத்தளர்ச்சி,மலச்சிக்கல் போன்றவற்றுக்கு ஒட்ஸ் மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.பெரும்பாலான மருத்துமனைகளில் ஒட்ஸைதான் உணவாக கொடுக்கிறார்கள்.இதை சமைக்காமலும் சாப்பிடலாம்.

கோதுமை,பார்லி போன்ற பயிர்களுக்கு இடையே முளைக்கும் தேவையற்ற களையாகவே ஒட்ஸ் பலநூற்றாண்டு வரை கருதப்பட்டது.

100 கிராம் ஒட்ஸில் கார்போஹைட்ரட் 66 கிராம்,புரதச்சத்து 7 கிராம்,கொழுப்பு 7 கிராம்,மக்னீசியம்,இரும்புச்சத்தும் இருக்கு.இது உடம்பில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

ஓட்சின் குறிப்புக‌ள் அருமை.
ஓட்ஸ்சின்னை தினமும் ஒரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு காய்கறிகளுடன் சூப் போல் செய்து கொடுத்தால் நல்ல சத்துக்கள் கிடைக்கும்

GEETHA ACHAL said...

நல்ல தகவல்...

நட்புடன் ஜமால் said...

நல்ல பதிவு தகவலோடு

அதை வைத்து ஒரு மெனு போடுங்களேன் ...

குறை ஒன்றும் இல்லை !!! said...

வழக்கம் போல நல்ல குறிப்பு அதனால வழக்கம் போல நன்றி,...

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்ல பல குறிப்புக்கள்....

வாழ்த்துக்கள்....

Menaga Sathia said...

கருத்துக்கும்,கூடுதல் டிப்ஸ்க்கு மிக்க நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ஜமால்!! ஒட்ஸ் பிஸிபேளாபாத் குறிப்பு போட்டிருக்கேன் பாருங்கள்.

Menaga Sathia said...

நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

நன்றி சபூராஸ் அபூபக்கர்!!

puduvaisiva said...

நல்ல தகவல்

நன்றி பாயிஷா

Jaleela Kamal said...

மேனகா நல்ல அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள்.

ஓட்ஸை சிக்கன் சூப்பில் கார்ன் மாவிற்கு பதில் இதை பயன் படுத்துலாம்.
கட்லெட்க்கு கிரெம்ஸ் இல்லை என்றால் உடனே ஓட்ஸை ஒன்றிரண்டாக பொடித்து தோய்த்து சுட்டால் கூடுதல் கிரிஸ்பியாக இருக்கும்.

Unknown said...

///"இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்காட்லாந்தில் மக்களும் ஆரோக்கியமாக இருக்க ஒட்ஸே காரணம் "- இது ஸ்காட்லாந்து பழமொழி.///

அங்க குதிரைகள் நல்ல கொழு கொழுனு தான் இருக்கு,இது தான் குதிரை நம்ம ஊருல இருக்கிறது கழுதைனு(குட்டிகுதிரை) நானே சொல்லி இருக்கேன்,,ஆனால் ரகசியம் ஓட்ஸ்தானா?நல்ல தகவல் மாமி..கலக்கிட்டீங்க..

சாருஸ்ரீராஜ் said...

ஒட்ஸ் பத்திய தகவல் மிகவும் அருமை ...

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி புதுவை சிவா!!

Menaga Sathia said...

தங்கள் கூடுதல் டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

//அங்க குதிரைகள் நல்ல கொழு கொழுனு தான் இருக்கு,இது தான் குதிரை நம்ம ஊருல இருக்கிறது கழுதைனு(குட்டிகுதிரை) நானே சொல்லி இருக்கேன்,,ஆனால் ரகசியம் ஓட்ஸ்தானா?நல்ல தகவல் மாமி..கலக்கிட்டீங்க.// ஹா ஹா ஆமாம் மாமி,தங்கள் கருத்துக்கு நன்றி மாமி!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சாரு!!

துபாய் ராஜா said...

தெரிந்த தானியம்.தெரியாத தகவல்கள்.
அறியத்தந்தமைக்கு நன்றி.

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி துபாய் ராஜா!!

manjula said...

its very useful

Menaga Sathia said...

நன்றி மஞ்சுளா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்!!

01 09 10