Thursday, 20 August 2009 | By: Menaga Sathia

கோதுமை ரவை கிச்சடி

தே.பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
கேரட் - சிறியது
பீன்ஸ் - 5
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் நீளவாக்கில் அரியவும்.கேரட்டை துறுவவும்,பீன்ஸை நடுத்தர சைஸில் நறுக்கவும்.

*கோதுமை ரவையை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் தாளிக்க குடுத்துள்ளவைகளாஇ போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் துருவிய கேரட்+பட்டானி+பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்.

*பின் 1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் மற்றூம் காய் வேக 1/2 கப் தண்ணீர் மொத்தம் 2 1/2 கப்தண்ணீர் வைத்து ரவை+உப்பு போட்டு குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் வைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் கிச்சடியை கிளறி விடவும்.


பி.கு:

இந்த கிச்சடி மிகவும் நன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

இந்த மாதிரி தான் கிச்சடி சாப்ப்பிடனும் ஆசைபட்டேன். இன்னிக்கு இரவு செய்து பார்கிறேன் மேனகா

நட்புடன் ஜமால் said...

பிரியாணி போல் இருப்பதால்

தயிர் பச்சடி ஜோராத்தான் இருக்கும்.

Menaga Sathia said...

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பாயிஷா நன்றாகயிருக்கும்.நன்றி!!

Menaga Sathia said...

நீங்கள் சொல்வதும் சரிதான்,நான் அப்படியே தான் சாப்பிட்டேன்.தயிர் பச்சடியுடன் அடுத்த முறை சப்பிடனும்.நன்றி ஜமால்!!

வால்பையன் said...

இவ்வார ஆனந்தவிகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ!

பெருமையாக இருக்கிறது! தோழி!

இவ்வாய்ப்பு உங்களை மேலும் மெருகேற்ற உதவும்!


வாழ்த்துக்கள்!

அநேகமாக முதல் வாழ்த்து நாந்தான்னு நினைக்கிறேன்!

GEETHA ACHAL said...

எனக்கு மிகவும் பிடித்த கோதுமை ரவை பிரியாணி...பார்க்கவே சாப்பிடனும் போல தோனுது...கண்டிபாக இந்த வாரத்தில் செய்து வேண்டும்.

சாருஸ்ரீராஜ் said...

மேனகா எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி , இந்த வாரம் கட்டாயம் செய்து பார்கிறேன்

Menaga Sathia said...

// வ்வார ஆனந்தவிகடன் வரவேற்பறையில் உங்கள் வலைப்பூ!

பெருமையாக இருக்கிறது! தோழி!

இவ்வாய்ப்பு உங்களை மேலும் மெருகேற்ற உதவும்!


வாழ்த்துக்கள்!

அநேகமாக முதல் வாழ்த்து நாந்தான்னு நினைக்கிறேன்!//

வால் இந்த தகவலை தெரிவித்ததில் மிகவும் சந்தோஷம்+நன்றி!!
ஆனந்தவிகடனில் என் வலைப்பூ வரும்னு நிலைக்கவேயில்லை,எனக்கு எதிர்பார்க்காத சந்தோஷம்.

உங்களுடையது தான் முதல் வாழ்த்து,மீண்டும் நன்றி வால் உங்களுக்கு
ஒரு உதவி செய்யுங்களேன்,அந்த லிங்க் குடுங்களேன் முடிந்தால் ஏன்னா எனக்கு அந்த புத்தகம் வாங்க பாரீச்க்கு போகனும்.நெட்லயும் சந்த்தாரர்கள் தான் படிக்கமுடியும்.அதனால்தான் கேட்டேன்.

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,நன்றி கீதா!!

Menaga Sathia said...

எனக்கும் இந்த ஐயிட்டம் ரொம்ப பிடிக்கும்.கட்டாயம் செய்துப் பாருங்கள்,நன்றி சாரு!!

Jaleela Kamal said...

ம்ம் அருமையான கோதுமை ரவை கேசரி. பார்க்கவே முத்து முத்தாய் இருக்கு, வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

இந்த லிங்கினை பார்க்கவும்.
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆனந்த விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்!!!

Unknown said...

மாமி!!கிச்சடி சூப்பர்ர்!! வாழ்த்துக்கள் நானும் விகடன்ல உங்க வலைபூ பற்றி பார்த்தேன்,ஆனால் அனுப்ப முடியுமானு தெரியல அதுல இருந்த மேட்டர் நான் அனுப்பி இருக்கிறேன் பாருங்க மாமி!!

///தமிழ் சமையல்! www.sashiga.blogspot.com

சமையல் குறிப்புகளால் மணக்கும் வலைப்பூ. மிக எளிதாக சமையல் செய்ய நினைப்பவர்களுக்கு உதவும். சைவம், அசைவம் என்று வகைப்படுத்தி அதில் குழம்பு, பொரியல், ஊறுகாய், சிக்கன், மீன், சாம்பார், முட்டை, ரசம், வறுவல், நண்டு, வடை, வற்றல், பலகாரம், இனிப்பு எனப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். சமையல் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சுவையாகச் சமையல் செய்ய விரும்புபவர்களுக்குமான வலைப்பூ!////

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் மேனகா...ஆனந்தவிகடனில் உங்கள் ப்ளாக் வந்த்தில் மிகவும் மகிழ்ச்சி...

சாருஸ்ரீராஜ் said...

மேனகா ஆனந்த விகடனில் உங்கள் வலைப்பூ வந்ததில் மிகவும் மகிழ்ச்சி

நட்புடன் ஜமால் said...

ஆ.வி. வாழ்த்துகளும்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

விருதை பெற்றுக்கொண்டேன் நன்றி கீதா!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி மாமி!!.அதுல இருப்பதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்ததற்க்கு மீண்டும் நன்றி உங்களுக்கு...

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கு மிக்க நன்றி கீதா ஆச்சல்,சாரு,ஜமால்!!

சாராம்மா said...

dear menaga

heartful congragulations to u for ur blog came in vikatan.keep on rocking
regards
anita.

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கு நன்றி சாராம்மா,உங்களுக்கு அவார்ட் குடுத்திருக்கேன் பார்த்திங்களா?

Pavithra Elangovan said...

First time to your blog.. so nice and really enjoyed reading and seeing lovely recipes.. will be back reagularly.. peep in my blog when u find time ..keep going

Menaga Sathia said...

நன்றி பவித்ரா தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

01 09 10