Sunday 23 August 2009 | By: Menaga Sathia

மோதகம் /Modhagam

தே.பொருட்கள்:

மேல் மாவுக்கு:

 அரிசிமாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பு - 3/4 கப்
ஏலக்காய் - 2
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

செய்முறை:

*ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் ஊற்றி உப்பு+எண்ணெய் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.

*பத்திரத்தில் அரிசிமாவு போட்டு கொதிக்கும் நீரை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும்.

*சப்பாத்தி மாவு பதத்திற்க்கு இருக்க வேண்டும். அதை ஈரத்துணியால் மூடிவைக்கவும்.மேல் மாவு ரெடி!!


*கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து மலர வேகவைக்கவும்.

*வெந்த பருப்பை நீர் இல்லாமல் வடிகட்டி ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும்.

*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடித்துக்கொள்ளவும்.

*ஏலக்காயை பொடிக்கவும்,தேங்காய்த்துறுவல்+மசித்த கடலைப்பருப்பு வெறும் கடாயில் வதக்கவும்.

*வெல்லத்தை 1 கம்பிபதம் அதாவது கையில் எடுத்தால் பிசுபிசுப்பாக இருக்கனும் எடுத்து ஏலக்காய் பொடி+கடலைப்பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.பூரணம் ரெடி.

*மேல்மாவில் சப்பாத்தி மாவு அளவுக்கு உருண்டை எடுத்து எண்ணெய் தொட்டு சொப்பு போல் செய்து பூரணத்தை அதில் வைத்து மாவை அப்படியே மேல் நோக்கி இழுத்து விடவும்.பார்ப்பதற்க்கு தேங்காய்ப் போல் இருக்கும்.



*இதே போல் எல்லா மாவையும் செய்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

பார்க்க அழகா இருக்குப்பா!ஆனால் நான் உங்க அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறதில்ல, சக்கரையும் தேங்காயும் மட்டும் சேர்த்து பிசந்து செய்வேன்..நீங்க செய்தது போல தனியா ஒரு நாள் செய்து பார்க்கிறேன்..நன்றி மாமி!!

ப்ரியமுடன் வசந்த் said...

கொழுக்கட்டையா?

விநாயகர் சதுர்த்தி ஸ்பெசல்

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்....

Nithya said...

Miga azhagaana modakangal.. :) Paarkave saapida thoondugiradhu. Very different variation. will try it next time. :)

Menaga Sathia said...

இதே மாதிரி ஒருநாள் செய்துபாருங்க மாதிரி.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

ஆமாம் வசந்த்,விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் தான்.

Menaga Sathia said...

நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

அடுத்தமுறை செய்துபாருங்கள் நித்யா.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!

UmapriyaSudhakar said...

மேனகா, நீங்க எப்படி மாவு mix பண்ணனும்னு சொன்னீங்களோ அப்படி தான் கொழுக்கட்டைக்கு மாவு mix செய்தேன். ரொம்ப easy-அ வந்தது.

Menaga Sathia said...

கொழுக்கட்டை நன்றாக வந்ததில் சந்தோஷம் உமா.செய்துப் பார்த்து பின்னுட்டம் அளித்ததில் மிக்க நன்றி!!

01 09 10