தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவன் கிருஷ்ணபரமாத்மா. அவர் ஜனித்த (பிறந்த)புண்ய தினமே கோகுலாஷ்டமி தினமாகும்.
கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்தது நம் பாரதம்! இங்கு நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பின்னணி உண்டு. இவை ஒவ்வொன்றும் நமக்கு பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன.
நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் 'கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது.
எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில்
சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான்.
கிருஷ்ண ஜனனம் பற்றி ஒரு சுவரஸ்யமான புராண கதை:
கண்ணனின் மாமன் கம்சன். அவன் கிருஷ்ணரின் தந்தை வசுதேவரையும், கிருஷ்ணரின் தாய் தேவகியையும் சிறையில் அடைத்து வைத்திருந்தான். தேவகிக்குபிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்ததால் அவன் அவர்களை சிறையில் அடைத்து பிறந்து வரும்எல்லா குழந்தைகளையுமே கொன்று வந்தான்.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்தார். அந்தக் குழந்தையை வசு தேவர் கோகுலதில் இருக்கும் தன் நண்பர் நந்த கோபன் வீட்டில் வளரவைப்பதற்காக கொட்டும் மழையில் ஒரு கூடையில் வைத்து எடுத்துச் சென்றார்.
அதே சமயம் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட கம்சன் குழந்தையை கொல்ல வருகிறான். அங்கு கிருஷ்ணனுக்கு பதிலாக அம்மன் குழந்தை ரூபத்தில்இருந்தார். கம்ச ன் அந்தக் குழந்தையை கொல்வதற்காக மேலே தூக்கி போட்ட போது அந்தக் குழந்தை மேலே சென்று ''கம்சா உன்னனக்கொல்வதற்காக பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. உனக்கு மரணம் அந்தக் குழந்தையால் தான்'' என்று கூறி மறைந்தது.
மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன்.
கிருஷ்ணனின் இளமைப் பருவம் கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கிருஷ்ணன், குறுப்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான்.
ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது, நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது, மண்ணைத் திண்பது, வெண்ணையை திருடி உண்பது போன்றவை அவரது விளையாட்டுக்களில் சில.
இந்த கோகுலாஷ்டமி நாளன்று வீட்டில் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசிமாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலைவரைவர். அதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.பூஜைக்குப் பின் வெண்ணெய்யை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வார்கள்.
கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெயும் அவலும் வெல்லச்சீடை,உப்புச்சீடை போன்ற நிவேதப் பொருளுடன் சிறப்பான இடம் பிடித்திருக்கும், கோகுலத்தில் கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணெய் திருடித் தின்று லீலைகள் செய்தவன். கண்ணனது பால்ய சிநேகிதன் குசேலர் கண்ணனைக் காண வரும் போது அவர்கொண்டுவந்த அவலை கண்ணன் உண்ட போது குசேலரது வறுமை மறைந்து வளம் பெற்றதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம் . எனவே தான்வெண்ணெய்க்கும், அவலுக்கும் நிவேதனத்தில் சிறந்த இடம்.
இந்த பண்டிகை தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷபூஜைகள் நடைபெறும்.
இன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.
மாயக் கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றை போற்றும் வகையில், கிருஷ்ண ஜெயந்தியன்று உறியடித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
பாண்டவர்களுக்கு உதவியாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்த மொழிகளையே நாம் 'பகவத்கீதை'யாகப் போற்றி வருகிறோம்.
கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வளம் பெறுவோம்!
ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய நைவேத்தியங்கள்:
அவல்,வெல்லம்,வெண்ணெய்,பால்,தயிர்,வாழைப்பழம்,நாவல்பழம்,கொய்யாப்பழம்,விளாம்பழம்,சீடை,உப்புச்சீடை,வெல்லச்சீடை,முறுக்கு,லட்டு,மைசூர்பாகு,தேன்குழல்,தொட்டில்பயிறு,பொரிகடலை,வெல்லம் போட்ட உருண்டை,தட்டை,ஒமம்பொடி,தேங்காய்த் திரட்டிப்பால் ஆகியவை கிருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய நைவேத்தியங்கள்.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்ல பதிவுங்க.. நன்றி..
நல்லா விளக்கமா சொல்லிருக்கீங்க..
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை யாவும் கண்ணனே என்று வாழ வேண்டும்.
கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்
தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்
http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html
கண்ணனை நம்பினால் சொன்னது பலிக்கும் என்பார்கள்...
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்... நன்றிகள்...
நல்ல பதிவு! படிக்கும்பொழுது மனசு நிறைஞ்சிருக்கு.., இதையும் படிங்க!
http://kannansongs.blogspot.com/2009/02/blog-post.html
உங்கள் பதிவு http://harekirishna.blogspot.com/2009/08/blog-post_14.html இங்கே இணைக்கப்பட்டுள்ளது...
தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ராகவ்!!
தங்கள் வாழ்த்திற்க்கு நன்றி வசந்த்!!
என்படைப்பையும் விகடனில் வெளியிட்டதற்க்கு நன்றி வலைவிகடன்!!
தங்கள் கருத்துக்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி சந்ரு!!
தங்கள் கருத்திற்க்கு நன்றி சூர்யாகண்ணன்!!.நீங்கள் கொடுத்த லிங்கையும் படித்தேன்.படிக்கும் போதே மனசு சந்தோஷமாயிருந்தது.
என் பதிவை இணைத்ததற்க்கு நன்றி சந்ரு!!
மிகவும் நல்ல பதிவு. அனைவரும் படிக்க வேண்டியது இந்த கீதாசாரம்.
தோழமைக்கு இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.....
இன்றுதான் தங்கள் வலைப்பதிவிற்கு முதல் விஜயம்... இனி தொடர்ந்து வருவேன்....
தாங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...
என் வலைகளின் பக்கமும், நேரம் கிடைக்கும்போது வருகை தரவும்.....
www.edakumadaku.blogspot.com
www.jokkiri.blogspot.com
நன்றி கீதா!!
தங்கள் வாழ்த்திற்க்கும்,வருகைக்கும் மிக்க நன்றி கோபி.தொடர்ந்து வாருங்கள்.
//தாங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...// மிக்க மகிழ்ச்சி!!
தங்கள் வலைப்பக்கம் இதோ வருகிறேன்.
மேனகா கோகுலாஷ்டமி இந்த வருடம் கொண்டாடுவீர்களா எதுவுமே குறிப்பு கொடுக்கவில்லை....நான் உப்புசீடை குறிப்பு பார்க்க வந்தேன்.செய்துபார்க்கிரேன்.
கொண்டாடுவேன் கொயினி,ஏற்கனவே சில குறிப்புகள் கொடுத்துள்ளேன்..இப்போதான் லட்டு குறிப்பு போட்டுள்ளேன்,பாருங்கள்...சீடை குறிப்பு செய்து பார்த்து சொல்லுங்கள்...
Post a Comment