Thursday, 5 May 2011 | By: Menaga Sathia

ஹைதராபாத் சிக்கன் பிரியாணி/ Hyderabad Chicken Biryani

தே.பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
வெங்காயம் - 2 பெரியது
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் -2
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள்+தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய் +நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 4
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1 பெரியதுண்டு
கிராம்பு - 6
பிரியாணி இலை - 2
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ(அ)மஞ்சள் கலர் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் அரிந்து பொன்னிறமாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன்+எலுமிச்சை சாறு +உப்பு+பாதி புதினா கொத்தமல்லிதழை+சிறிதளவு பொரித்த வெங்காயம்+பச்சை மிளகாய்+தயிர்+மிளகுத்தூள்+மிளகாய்த்தூள்+சீரகத்தூள்+தனியாத்தூள்+மஞ்சள்தூள்+
பிரியாணி இலை -1+கறுப்பு ஏலக்காய் - 2+பச்சை ஏலக்காய் -1+கிராம்பு - 3+பட்டை -பாதி துண்டு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.


*வேறொரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைய வைத்து கொதிக்க விடவும்.அதில் பாதி உப்பு+மீதமுள்ள ஏலக்காய்+பட்டை கிராம்பு சேர்த்து அரிசியை பாதி வேக்காடாக வடிக்கவும்.

*வேறொரு பெரிய பாத்திரத்தில் ஊறவைத்த சிக்கன்+சிறிது புதினா கொத்தமல்லி+சிறிது பொரித்த வெங்காயம் போடவும்.

*அதன்மேல் 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்+1/2 கப் கொஞ்சம் குறைவாக நீர் ஊற்றவும்.

 *அதன்மேல் சாதம்+நெய்+மீதமுள்ள புதினா கொத்தமல்லி,பொரித்த வெங்காயம்+கலரை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
*ஆவி வெளியே போகாதவாறு சிறுதீயில் மூடி போட்டு 30 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Magesh said...

super sashiga

ஏன் இரண்டு விதமான ஏலம் use பண்ணனும்.

Anonymous said...

போட்டோக்களை பார்க்கும் போதே அருமையாக உள்ளது. தகவலுக்கு நன்றி .

asiya omar said...

பிரியாணி கமகமன்னு சூப்பர்...

Premalatha Aravindhan said...

Delicious briyani,luks very tempting...

sangee vijay said...

Wow...my fav biryani looks so inviting n tempting me a lot menaga...clear explanation...great job!!!
Can u give me a plate???

athira said...

சுவையான சிக்கின் பிரியாணி.

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப நன்றி மேனகா...வீட்டில் எல்லா பொருட்களும் இருக்கின்றது...செய்து பார்க்க வேண்டுமே...

சிக்கனை முதலில் வேகவைக்க வேண்டாமா...

சாதத்தினை முதலிலே வேகவைப்பதால் ரொம்ப வெந்து போய்விடாதா...

S.Menaga said...

@ப்ரியா
2 விதமான ஏலக்காய் உபயோகித்தால் நல்லா வாசனையாக இருக்கும்.கறுப்பு ஏலக்காய் இல்லாவிட்டாலும் சாதரண ஏலக்காயை கூட பயன்படுத்திக்கலாம்.

@கீதா
சிக்கன் சீக்கிரம் வெந்துவிடும்.அரிசியை 1/2 வேக்காடில் வடித்து விடுவதால் சாதம் குழைந்து போகாது.சிக்கனும்,சாதமும் ஒன்றாக வேக சரியாக இருக்கும்.

savitha ramesh said...

Different a irukku menaga.but naan,gravy madhiri panitu adhukku mela dhan dhum poduven.

சிநேகிதி said...

my all time fav... nice biriyaani...:-))

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா.

vanathy said...

super recipe. I like the last photo very much. Looking super.

MANO நாஞ்சில் மனோ said...

நானும் ருசி பார்த்துட்டேன்....

revathi said...

asathala irukku:) enakku ipavae saapidanum polla irukku:)
Reva

Vimitha Anand said...

I love chicken briyani and this looks so inviting...

Now Serving said...

Non-vegetarians delight :)

Priya said...

Veetu address pls, paathathume pasikuthu,atleast parcel achum anupa mudiyuma??truly tempting..

Sarah Naveen said...

My favorite..looks so delicious..

ChitraKrishna said...

படங்களை பார்க்கும் போதே ரொம்ப அருமையா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

அசத்தல் பிரியாணி.

இசக்கிமுத்து said...

நாக்கில் எச்சில் ஊர வைத்து விட்டீர்கள்!

Shama Nagarajan said...

arumai...please rush ur entries for Fast food-Noodles in my blog.

Malar Gandhi said...

Very flavorful indeed, makes me very hungry

Shanavi said...

Asathureenga menaga .. enaku oru plate anupungalein !!!

Akila said...

wow mouthwatering... will try it definitely..

Event: Dish Name Starts with H
Celebrate Sweets:- Stuffed Sweets

Regards,
Akila

ஹுஸைனம்மா said...

செய்ய சுலபமான பிரியாணி என்பதால் எனது ஃபேவரைட் இது.

krishmsg said...

அருமை !!

Unknown said...

அருமை

Riya Joselyn said...

Your hyderabad chicken briyani look like yummy.I Just love your recipe.Thanks for sharing and waiting for such posts in the future.
To taste the best Andhra food in Bangalore:Andhra restaurant in Bangalore |
Andhra Style restaurant in Bangalore |
Order Andhra food online
Home delivery restaurants Bangalore

01 09 10