தட்டை
தே.பொருட்கள்:
பொன்னியரிசி - 2 கப்
காய்ந்த மிளகாய் - 3
பெருஞ்சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 5
ஊறவைத்த கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கட்லை - 1/2 கப்
மிளகு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
*அரிசி+மிளகாய்+பெருஞ்சீரகம் இவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் உப்பு+பூண்டுபல் சேர்த்து மைய அரைக்கவும்.
*பொட்டுக்கடலை+மிளகு மிக்ஸியில் படுடராக அரைக்கவும்.
*ஊறிய கடலைப்பருப்பு+பொட்டுக்கடலை மாவு இவற்றை அரைத்த அரிசி மாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.
*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலை மாவு சேர்க்கவும்.
*பிசைந்த மாவு சிறு உருண்டையாக எடுத்து ஒரு ப்ளாஸ்திக் கவரில் எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி பேப்பரில் போட்டு உலர விடவும்.
*ரொம்ப நேரம் உலர விடக்கூடாது அப்படி செய்தால் பேப்பரிலிருந்து எடுக்கும் போது தட்டை உடைந்து விடும்.
*எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Subscribe to:
Post Comments (Atom)
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
அந்த ‘தட்டையில்’ இருக்கே அதுதான் தட்டையா
(சும்மா சும்மா ...)
தட்டு நிறைய இருக்கிறதால தான் அது தட்டையாங்க?
அருமையான தட்டை,
என்ன விஷேஷம் மேனகா?
எனக்கு நொருக்கு ஐயிட்டம் ரொம்ப பிடிக்கும்.
வாவ் எனக்கு ரொம்ப பிடிக்கும்... மேனகா இப்போ இங்கு நல்ல மழை ... ஒரு பார்சல் பிளிஸ்!!!
மேனகா இன்னைக்கு என்ன விஷேஷம்.? தட்டை செய்திருக்கிங்க. என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும். அடிக்கடி அடையார்ஆனந்தபவனில் வாங்குவோம். இனிஉங்கள் செயல்முறை பார்த்து செய்துவிடவேண்டியது தான்
நல்லா இருக்கு மாமி!!நானும் இப்படி தான் செய்வேன்..ஆனால் நான் பச்சரிசில செய்வேன்...வீக் என்ட் செய்து வைக்கனும்..
ஹாய், உங்க குறிப்பு சூப்பர். எப்படி உங்களால் தினம் ஒரு குறிப்பு போட முடியுது?
ஆஹா சின்ன வயசுல காசுக்கு வாங்கி சாப்பிட்டது மறுபடியும் நாக்கில் நீர் சுரக்கிறது.....
நீங்க அசத்துங்க.....
சாப்பிட்டு ரொம்ப வருசமாச்சு ...என் அம்மாவை நினைவில் கொண்டு வருகிறது, இப்படிதான் எப்போதும் எனக்கு சாப்பிட ஏதாவது கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்...அது எல்லாம் நம்ம ஊரோட போச்சுங்க..
எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடித்த நொருக்கு அயிட்டத்தில் தட்டையும் ஒன்று அதுவும் எனக்கு ரொமப் பிடிக்கும்.
பார்க்கவே ரொம்ப நலல் இருக்கு.
சுவையான தட்டை..இதனை வீட்டில் செய்யும் பொழுது படு அமர்களமாகிவிடும்...ஆனா இப்போ நான் வேறு மாதிரி செய்கிறேன்..இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு செய்ய வேண்டும்.
இது கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலா மேனகா...
//அந்த ‘தட்டையில்’ இருக்கே அதுதான் தட்டையா
(சும்மா சும்மா ...)//
ஆமாங்க.ஹி ஹி.உங்கள் நகைச்சுவை உணர்வை ரசித்தேன் ஜமால்.நன்றி!!
//தட்டு நிறைய இருக்கிறதால தான் அது தட்டையாங்க?// ஹா ஹா ஆமா ராஜ்.அதெப்படி நீங்களும்,ஜமாலும் ஒரே மாதிரி கமெண்ட் குடுத்திருக்கிங்க.
ஒன்னுமில்லை அக்கா,சும்மா தான் செய்தேன்.சாப்பிட ஆசை வந்துடுச்சு,செய்து சாப்பிட்டேன்.நன்றி ஜலிலாக்கா!!
உங்களுக்கு இல்லாததா ஹர்ஷினி அம்மா,பார்சல் அனுப்பினேனே கிடைத்ததா?தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி!!
விசேஷமில்லை பாயிஷா,செய்து சாப்பிட ஆசை வந்தது.அதான் செய்தேன்.நீங்களும் இந்தமுறையில் செய்து பாருங்க.நன்றாகயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!
பச்சரிசி மாவில் செய்துதான் சாமிக்கு படைக்கனும்.சாதாரணமாக செய்யும் போது புழுங்கலரிசியில் செய்யலாம்.எங்கம்மா இப்படிதான் செய்வாங்க.நன்றி மாமி!!
நன்றி உமா தங்கள் கருத்துக்கு.நேரமிருக்கும் போது எழுதிடுவேன்.அந்தந்த தேதியில் தானா போஸ்ட் ஆகிடும்ப்பா.
நானும் இதை அடிக்கடி காசுக்கு வாங்கி சாப்பிடுவேன்.அம்மாகிட்ட கத்துக்கிட்ட பிறகு நானே செய்து சாப்பிடுறேன்.நன்றி வசந்த்!!
உங்கம்மாவை ஞாபகபடுத்திவிட்டேன் என்னுடைய தட்டை குறிப்பால்.மனைவிக்கிட்ட சொல்லி செய்து சாப்பிடுங்க சிங்கக்குட்டி.நன்றி தங்கள் கருத்துக்கு!!
தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
//இது கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலா மேனகா...// இல்லை கீதா.
இது எப்பவோ செய்தது.இனிதான் எல்லாம் செய்யவேண்டும்.தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!
ஆகா தட்டை பிடித்த ஐயிட்டம்.
குறிப்புகளும் சிறப்பாக இருக்கு !
செய்து ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான்
தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி கோவி.கண்ணன்!!
//குறிப்புகளும் சிறப்பாக இருக்கு !//மிக்க சந்தோஷம்.
Post a Comment