தே.பொருட்கள்:
சுத்தம் செய்த காடை - 4
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது - 1 டேபில்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
செய்முறை :
*சுத்தம் செய்த காடையில் மிளகாய்த்தூள்+உப்பு+விழுது அனைத்தையும் கலந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*300 டிகிரி அவனை முற்சூடு செய்து 15 நிமிடம் அவன் டிரேயில் வேக வைத்து எடுக்கவும்.
*நடுவில் ஒருபக்கம் வெந்ததும் திருப்பி விடவும்.
*சுவையான காடை ரோஸ்ட் ரெடி
கவனிக்க:
காடை சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் அவரவர் அவனுக்குஏற்ப டைம் செட் செய்து வேகவைத்து எடுக்கவும்.சீக்கிரம் செய்து விடலாம்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
காடை ரோஸ்ட் கலக்கல்...காடை எல்லாம் சாப்பிட்டதே இல்லை பா...பார்பதற்கு சிக்கன் மாதிரியே இருக்கு...சூப்பர்ப்...
ஆஹா.. அருமை.. ஆன என் அம்மிணி செய்ய மாட்டா. ஏன்னா அவ காட கூட்டமாம்!!
ம்ம் கலக்கலான ரெசிபி .
ஆசையாகத்தான் இருக்கு ...
கோழியையும் இதே போல பொரிக்கலாமா?... நீங்க ஆமா சொல்லிட்டீங்கன்னா இரவக்கே பொரியலோ பொரியல் தான்!......
இந்த கதையை ஏன் நீங்கள் உரையாடல் போட்டிக்கு அனுப்பவில்லை?
மாமி கலக்குறீங்க!!!ஆனால் இப்போதான் முதல் தடவ பார்க்கிறேன் காடைய..இது உயிரோட இருக்கும் போது எப்படி இருக்கும், அதயும் பார்க்கனும்..இருங்க கூகுள் போய்ட்டு வாரேன்..
ஆமா கீதா காடை கோழி இனத்தை சேர்ந்ததுதான் செய்து பாருங்க நன்றி கீதா!!
//ஆஹா.. அருமை.. ஆன என் அம்மிணி செய்ய மாட்டா. ஏன்னா அவ காட கூட்டமாம்!!// இருங்க உங்க அம்மணிகிட்ட சொல்றேன்.நன்றி ராஜ்!!
நன்றி ஜலிலாக்கா!!
அப்புறமென்ன செய்து சாப்பிடுங்க.நன்றி ஜமால்!!
தாராளாம கோழியையும் இதுபோல் செய்யலாம்,நன்றாக இருக்கும்.அப்போ இன்னிக்கு நைட் கோழி பொரியலா,நானும் வரேன் சேர்த்து செய்ங்க.செய்துப் பார்த்து சொல்லுங்க.நன்றி சபூராஸ் அபூ பக்கர்!!
நான் எந்த கதையும் எழுதலை,அனுப்பவும் இல்லை.நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல தண்டோரா.
குட்டி கோழிப்போல் இருக்கும் காடை,கூகிளில் பார்த்தாச்சா மாமி.நன்றி மாமி!!
Post a Comment