தே.பொருட்கள்:
சுத்தம் செய்த இறால் - 500கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை கட் செய்யவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் உப்பு+இறால் சேர்த்து மூடவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*5 நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் நீர் இருக்கும்,அது சுண்டும் வரை சுருள சுருள கிளறி இறக்கவும்.
*ஈஸி இறால் தொக்கு ரெடி.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாவ்... நன்றி.. ரொம்ப நன்றி!!!
பார்க்க சூப்பரா இருக்கு மாமீ!! ஆனால் எங்க வீட்டுல யாருக்கும் இறால் பிடிக்காதே!! இதே மாதிரி சிக்கன்ல செய்ய முடியுமா? ஏன்னா நல்ல கார சாரமா இருக்கும்போல தெரியுதே?!
தங்கள் கருத்துக்கு நன்றி ராஜ்!!
எனக்கும் இறால் பிடிக்காதுப்பா.ஹஸ் மட்டும் சாப்பிடுவார்.இதே மாதிரி சிக்கனிலும் தாராளமா செய்யலாம் மாமி.நன்றி!!
ரொம்ப ஈசியா பண்ணிடலாம் போல இருக்கே! பொதுவா இறால் வேக நிறைய நேரம் பிடிக்கும்ல.5 minsல எப்படி செய்தீங்க?
ஆமாம் உமா ஈஸியா செய்யலாம்.இறாலை லேசாக வதக்கும் போதே சீக்கிரம் வெந்துவிடும் அதுவும் ரொம்ப நேரம் வெந்தால் சாப்பிடும் போது ரப்பர் மாதிரி இருக்கும்.நான் சொன்னமாதிரி ஒரு தடவை செய்து பாருங்கள் உங்களுக்கே தெரியும்பா.கருத்துக்கு நன்றி உமா!!
எங்கள் வீட்டிலும் நான் இப்படி தான் இந்த இரால்வறுவலினை செய்வேன்..மிகவும் சுவையாக இருக்கும்.
இவ்வளவு எளிதா?
நன்றி!
படத்த பாத்தா தெரியுது சுவையா இருக்குமென்று!
ஆமாம் மேனாகா ரொம்ப நேரம் வதக்கினால் ரப்பர் போல் ஆகிவிடும், நானும் இது போல் தான் செய்வேன், கொத்து மல்லி தழை கொஞ்சம் சேர்ப்பேன்.
இதே இறாலை ,வெங்காய இறால் என்று நிறைய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம், மைதா ரொட்டி, மைதா அடைக்கு தொட்டுகொள்ள ரொம்ப அருமையா இருக்கும்
நீங்களும் இப்படிதான் செய்வீங்களா,ஆனா எப்படி இருக்கும்னு தெரியல ஏன்னா நான் இறால் சாப்பிடமாட்டேன்.நன்றி கீதா!!
செய்வது ரொம்ப எளிது,தங்கள் கருத்துக்கு நன்றி ஜோதிபாரதி!!
//இதே இறாலை ,வெங்காய இறால் என்று நிறைய வெங்காயம் சேர்த்தும் செய்யலாம், மைதா ரொட்டி, மைதா அடைக்கு தொட்டுகொள்ள ரொம்ப அருமையா இருக்கும்// அடுத்த தடவை செய்துவிட வேண்டியது தான்.நன்றி ஜலிலாக்கா!!
மேனகா பார்க்க அருமையாக இருக்கு.நான் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்டும் சேர்ப்பேன்.சிம்பிள் & சூப்பர்.
எனக்குப்பிடித்த கடலுணவு இது ஒன்றுதான்.படத்தைப்பார்த்தும் உடனே செய்து சாப்பிட வேண்டும் போலுள்ளது
நன்றி ஆசியாக்கா!! நானும் இஞ்சி பூண்டு சேர்த்துதான் செய்துள்ளேன்..
நன்றி ஸாதிகாக்கா!!
Post a Comment