தே.பொருட்கள்:
பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 3
கேரட் - 1 சிறியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*வெங்காயம்+தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.
*கேரட்+உருளையை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு+எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.
*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம்+தக்காளியை நன்கு மசிக்க வதக்கி காய்கள் அனைத்தையும் போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.
*காய்கள் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.
*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.
*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
இது புதுசா இருக்கே..
Pasta dish looks very colourful, i do prepare this often, definitely a kid's special pasta dish...
பார்க்கவே நல்லாயிருக்கு மேனகா
தங்கள் அனைவரின் கருத்துக்கு நன்றி வசந்த்,ப்ரியா,பாயிஷா!!
முட்டை பாஸ்தா கலக்கல்...எங்கள் வீட்டிலும் இப்படி செய்வோம்..
இப்ப டயடில் இருப்பதால் எல்லாத்தையும் மூட்டை கட்டியாச்சு...
என்னோட Favorite , இது கூட தக்காளி கெட்ச்சப் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் டேஸ்ட்டியா இருக்கும். Thanks
எனக்கு பாஸ்தாவில் நிறைய டவுட், அடுத்த வாரம் ஒரு தரம் ஆன்லைன்ல வாங்க மாமி கேட்க்கனும்..கண்டிப்பா செய்து பார்க்கனும் அதான் டவுட்ட கிளியர் பண்ணிட்டு பண்ணலாம்னுதான்..உங்க டிஷ் பார்க்க சூப்பரா இருக்கு,ஆசைய தூண்டிவிட்டுட்டீங்க மாமி!!
பாத்தீங்களா மக்களே.. முட்டைய சைவம் ஆக்கியாச்சுன்னா யாராச்சும் நம்பரீங்களா? இப்போ பாருங்க..
ரொம்ப simple-a இருக்கே! நான் இருமுறை பாஸ்தா செய்திருக்கிறேன். இருமுறையும் எனக்கு பிடிக்கவில்லை. உங்க method-படி செய்து பார்க்கிறேன்.பாஸ்தா சாஸ் use பண்ண தேவையில்லையா?
தங்கள் கருத்துக்கு நன்றி கீதா,ஷஃபிக்ஸ்!!
என்ன டவுட் மாமி கேளுங்க சொல்றேன்.ஆசையை ரொம்ப தூண்டிவிட்டாச்சா.சீக்கிரம் செய்து சாப்பிடுங்க.நன்றி மாமி!!
அப்போ நீங்களும் ஒத்துக்கறீங்களா முட்டை சைவம்னு?இப்போ உங்களால் அந்த குழப்பம் தீர்ந்தது.நன்றி ராஜ்!!
ஒரு தடவை பாஸ்தாசாஸ் யூஸ் பண்ணி செய்ததில் குப்பை தான் சாப்டுச்சு.அதிலிருந்து அதெல்லாம் போடமாட்டேன்.இது எங்க அக்கா செய்யும் முறை உமா.அவங்ககிட்ட கத்துக்கிட்டது.இந்த முறையில் செய்து பாருங்க உங்களுக்கு பிடித்துப்போய் அடிக்கடி செய்வீங்க.நன்றி உமா!!
ம்ம் பாஸ்தா ரொம்ப நல்ல இருக்கு மேனகா, நான் செய்யும் முறை வேறு.
இது நூடுல்ஸ் டைப்பில் இருக்கு,இப்படி கொடுத்தால் குழந்தைக்ளுக்கு பிடிக்கும்
தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!
Post a Comment