தே.பொருட்கள்:
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த பீன்ஸ்,கேரட்,பட்டாணி கலவை - 1 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
செய்முறை :
*வெங்காயத்தை நீளவாக்கில் அரியவும்.
*குக்கரில் பட்டர்+எண்ணெய்விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை வதக்கவும்.
*பின் பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் 3 கப் அரிசிக்கு 4 1/2 கப் தண்ணிர் வைத்து உப்பு+அரிசி சேர்க்கவும்.
*3 விசில் வைத்து இறக்கி பச்சடி அல்லது க்ரேவியுடன் பறிமாறவும்.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்ல சுவையாக இருக்கும் போல
Vegetable pulao samachi romba naal achu..Paathathum senchi saapidanam pola irruku Menaga..
நல்லா இருக்கு மேனகா...இதையே தான் நான் வெஜ் பிரைட் ரைஸ்ன்னு எங்க வீட்லே சொல்லிடுவேன் :-)
எளிமையான செய்முறை விளக்கம். நன்றி
pulav endraley yenakku romba romba pidikum. :)
மேனகா...
படம் பார்த்தாவே பசி வந்துடுச்சு...
வெஜ் புலாவ்... என்னோட ஒன் ஆஃப் தி ஃபேவரிட் டிஷ்...
உங்க கை பக்குவம் எப்படி இருக்குன்னு பாக்கறதுக்கு, ஒரு பார்சல் அனுப்ப முடியுமா... கண்டிப்பா சாப்பிட்டு பார்த்து விட்டு, எப்படி இருக்குன்னு சொல்லிடுவேன்...
சிம்பிள் பட் வொண்டர்புல்..
அன்புடன்,
அம்மு.
நானும் இப்படித் தான் செய்வேன். உங்க குறிப்பு படிச்சதும் நாளைக்கே சமைக்க ஆவலாய் உள்ளது. எங்க வீட்டுல நாளை மெனு ரெடி.
எளிதான குறிப்பு மேனகா.நேத்து தான் veg fried rice செய்தேன். அடுத்த வாரம் நீங்க செய்த மாதிரி செய்கிறேன்.
செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி சந்ரு!!
என்னப்பா இன்னிக்கு உங்க வீட்ல வெஜ் புலாவ்வா?நன்றி ப்ரியா தங்கள் கருத்துக்கு!!
இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு.நாமும் பாலோ செய்ய வேண்டியதுதான்.நன்றி ஹர்ஷினி அம்மா!!
தங்கள் கருத்துக்கு நன்றி நவாஸ் ப்ரதர்!!
எனக்கும் புலாவ் வகைகள் பிடிக்கும் நித்யா.நன்றி!!
பார்சல் அனுப்பினேனே வந்ததா கோபி.எப்படியிருக்கு என் கைப்பக்குவம்?தங்கள் கருத்துக்கு நன்றி கோபி!!
நன்றி அம்மு!!
என்ன ப்ரபா செய்தீங்க உங்க வீட்ல?நன்றி சக்திப்ரபா!!
அடுத்தவாரம் செய்து அசத்துங்கப்பா.நன்றி உமாப்ரியா!!
Post a Comment