தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை பழளவு
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -10
எண்ணெயில் வறுத்து அரைக்க:
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
வடகம் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு -3
செய்முறை:
*புளியை 1 கோப்பையளவு கரைத்து பூண்டுப்பல்+மிளகாய்த்தூள்+உப்பு+சுத்தம் செய்த மட்டன் போடவும்.
*வெங்காயம்+தக்காளி+முருங்கைக்காய் நறுக்கி வைக்கவும்.
*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைத்து அடஹ்னுடன் சீரகத்தை சேர்த்து மைய அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி வதக்கவும்.
*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.மட்டன் வெந்ததும் முருங்கைக்காய் போட்டு வேகவிடவும்.
*மட்டன்+காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பி.கு:
இதனுடன் வெள்ளை முள்ளங்கியையும் சேர்க்கலாம்.அப்படி சேர்க்கும் போது தக்காளி வதங்கிய பின்னர் முள்ளங்கியைப் போட்டு வதக்கி புளிகரைசலை ஊற்றவும்.நல்ல வாசனையாகவும்,ருசியாவும் இருக்கும்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாசிக்கும் போதே சாப்பிட வேண்டும்பூல் இருக்கிறது. அப்படியே அனுப்பி விடுங்கள் சாப்பிடுவது இலகுவாக இருக்கும்...
உங்கள் கோகுலாஷ்டமி பதிவு http://harekirishna.blogspot.com/2009/08/blog-post_14.html இங்கே இணைக்கப்பட்டுள்ளது...
வாங்க சந்ரு,உங்களுக்கு இல்லாததா,சூடாகவே செய்து தேரான்.தங்கள் கருத்துக்கு நன்றி சந்ரு!!
என் பதிவை உங்கள் வலைதளத்தில் இணைத்ததற்க்கு நன்றி சந்ரு!!
நல்லா இருக்கு மாமி!!ஆனால் இங்க மட்டன் அவ்வளவு சரி இல்ல, இருந்தாலும் சும்ம ட்ரை பண்ணதானே? கொஞ்சமா வாங்கி வீகெண்ட் பண்ணி பார்க்கிறேன்..
செமத்தி பசி இப்போ
மிக்ஸட் வெஜிடபில் போட்டு
குருமா மாதிரி செய்ய போறேன்
எப்படி வருமோ ...
பார்க்கவே ருசியாக இருக்கு..இன்னும் செய்து சாப்பிட்டால்....ருசியோ ருசி தான் போங்க...
டயட் முடியட்டும்...அப்புறம் ஒரு கட்டு கட்டுதான்...
மேனாக நான் ஊரில் இல்லை அதான் தொடர்ந்து நெட்டில் உட்கார முடியவில்லை.
பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு மேனகா. ருசியும் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறேன்
ஆகா! இப்படியும் வழி இருக்கிறதா!?
அருமை!
mmmmmmmmmmmm.. Yummmmmmmmmmmyyyyyyyyyyyyyy..
கொஞ்சமா டிரை பண்ணிபாருங்க மாமி,நன்றாக இருக்கும்.நன்றி மாமி!!
நான் வெஜ்ல செய்ததில்லை,அதனால் எப்படி இருக்கும்னு தெரியல எனக்கு.நீங்க செய்து நன்றாக வந்தால் சொல்லுங்கள்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நட்புடன்!!
டயட் முடிந்து செய்து பாருங்கள்,சுவையாக இருக்கும்.நன்றி கீதா!!
ஊருக்கு போய்ட்டு வந்தீங்களா,முடியும் போது வாங்க.ஆமாம்பா ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி பாயிஷா!!
நன்றி ஜோதி பாரதி!!
நன்றி ராஜ்!!
என்னது இது புளிக்குழம்புல மட்டனா...சொல்லும் போதே வாய் ஊருது...ச்சசாசா :-))
ஆமாங்க நல்லாயிருக்கும்,செய்து பாருங்க.நன்றி சிங்ககுட்டி!!
கலக்கல் மட்டன் புளிக்குழம்பு...செய்து பார்த்துட்டு சொல்றோம்
நன்றி சௌந்தர்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
பார்க்கவே ருசியாக இருக்கு..இன்னும் செய்து சாப்பிட்டால்....
மேனகா சமையலில் புதுமையாக யோசிக்க்றீங்க மேனகா.மட்டனில் புளியும் முருங்கைக்காயும் சேர்த்து..உடனே டிரைபண்ணிடுறேன்.
நன்றி சகோ!! டேஸ்ட் ரொம்ப சூப்பராகயிருக்கும்...
நன்றி ஸாதிகாக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்....
Post a Comment