Monday 3 December 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத சோளமாவு ஆரஞ்ச் கேக் /Steamed Eggless Cornflour Orange Cake

தே.பொருட்கள்
ரவை - 1 கப்
மஞ்சள் சோளமாவு -1 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 1/4 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் - தலா 1/2 டீஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் -1/2 கப்
வெந்நீர்/ பால் - 1 கப்

செய்முறை
*ரவை+சோளமாவு+பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து 2 முறை சலிக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய்+சர்க்கரை+வெந்நீர் சேர்த்து கலக்கவும்.

*இதனுடன் ரவை கலவை+துருவிய ஆரஞ்ச் தோல்+ஆரஞ்ச் ஜூஸ் சேத்து மிருதுவாக கலக்கி,எண்ணெய் தடவிய கேக் பானில் கலவையை ஊற்றவும்.

*குக்கரை அடுப்பில் வைத்து 5 நிமிடம் சூடு செய்து பேக்கிங் சோடாவை தூவி குக்கர் ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை வைக்கவும்.

*மீதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்து பின் குறைந்த தீயில் 25-30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

*கேக் வேகவில்லை எனில் மேலும் 5-10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Yummy cake....love it...

divya said...

looks yummy....love it..;)

Vimitha Durai said...

Looks so.inviting. Bookmarking dear

Asiya Omar said...

பார்க்கவே மணமாக தெரிகிறது.அருமை.

ஹுஸைனம்மா said...

மஞ்சள் சோளமாவு என்றால் என்ன? புதுசா இருக்கே!

Priya Suresh said...

Love the cake texture, looks yummy.

Sangeetha Nambi said...

Yet to try baking cake using cooker... this came out so perfectly...
http://recipe-excavator.blogspot.com

ஸாதிகா said...

ஆஹா..சோளமாவில் அருமையான கேக் பண்ணி காட்டி விட்டீர்களே.சூபர் மேனகா.

Unknown said...

Wow.. Super..

Hema said...

Beautiful texture dear, I love to use orange juice as a egg substitute, in my opinion the best..

Jayanthy Kumaran said...

innovative flavours...looks delicious..
Tasty Appetite

Priya ram said...

கேக் நல்லா இருக்கு மேனகா.... இதே கேக் நான் மைதா மாவு வைத்து செய்து இருக்கேன்....



மேனகா நீங்க இந்த கேக் குக்கரில் செய்து இருப்பதாக போட்டு இருக்கீங்க.... என்னோட நாத்தனார் வீட்டில் நார்மல் ஓவன் தான் இருக்கு.... அவங்க வீட்டில் கேக் பண்ணுவதற்கு வழி கேட்டு கிட்டு இருக்காங்க.... நீங்க எப்படி குக்கரில் பண்ணீங்கனு கொஞ்சம் விளக்கமா சொல்லறீங்களா.... ப்ளீஸ்.



enrenrum16 said...

vow..menage...superb... i'll really try this soon.....thanx for sharing the recipe.

Menaga Sathia said...

@ஹூசைனம்மா

மஞ்சள்சோளமாவிலிருந்து தான் வெள்ளை சோளமாவு தயாரிக்கபடுகிறது.உதராணத்திற்கு ப்ரவுன் சர்க்கரைக்கும்,வெள்ளை சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசம் போலதான் மஞ்சள்சோளமாவிற்கும்,வெள்ளை சோளமாவிற்க்கும்...மஞ்சள்சோளமாவுதான் பயன்படுத்துவதற்க்கு சிறந்தது...

@ப்ரியாராம்

குக்கரில் கேக் செய்யும் முறையினை இந்த லிங்கினை பார்க்கவும்.
http://sashiga.blogspot.fr/2012/05/eggless-carrot-cake-pressure-cooker.html

ஹுஸைனம்மா said...

மஞ்சள்சோளமாவு குறித்த தகவலுக்கு நன்றி மேனகா. நான் இப்போதான் முதன்முறையா இதப்பத்திக் கேள்விப்படுறேன். சூப்பர்மார்க்கெட்டுகளில் இப்படி ஒன்றைப் பார்த்ததே இல்லை. எங்கே கிடைக்குமென்று விசாரிக்க வேண்டும்.

மஞ்சள் சோளமாவை, நாம் வெள்ளை சோள மாவுக்குப் பதிலாக எல்லா வகை சமையலிலும் பயன்படுத்தலாமா? மஞ்சூரியனில் கரைத்துவிட, பொறிக்க, சப்பாத்தி பரத்துவதற்கு, பட்டர் குக்கீஸ் செய்ய போன்ற எல்லாம்... ?

Menaga Sathia said...

@ஹுசைனம்மா

மஞ்சூரியனுக்கு வெள்ளைசோளமாவுதான் சரிவரும்..சப்பாத்தி பரத்துவதற்க்கு,தொசை,குக்கீஸ்,கேக் அனைத்துக்கும் மஞ்சள்சோளமாவு பயன்படுத்தலாம்...

01 09 10