Monday 22 October 2018 | By: Menaga Sathia

சோளமாவு அல்வா | Microwave Cornflour Halwa / Bombay Karachi Halwa | Diwali Recipes


சோளமாவு அல்வா மிக எளிதாக செய்ய கூடியது.நான் மைக்ரோவேவ் அவனில் சுலபமாக செய்துள்ளேன்.இதனை பாம்பே கராச்சி அல்வா என்றும் சொல்வார்கள்.

மைக்ரோவேவ் அவனின் ஹை பவரில் செய்ய வேண்டும்.

சோளமாவு :சர்க்கரை :நீர் இம்மூன்றும் 1:3:4 என்ற விகிததிதில் இருக்கவேண்டும்.எந்த கப்பில் அளக்கிறமோ அதே கப்பில் அனைத்தையும் எடுக்க வேண்டும்.

தே.பொருட்கள்
சோளமாவு- 1/2 கப்
சர்க்கரை- 1+ 1/2 கப்
நீர் -2 கப்
கேசரி கலர் -2 துளி
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி- 10,பொடியாக உடைத்தது
நெய்- 1 டீஸ்பூன்

செய்முறை

*மைக்ரோவேவ் கண்ணாடி பாத்திரத்தில் சோளமாவு,நீர்,சர்க்கரை இவற்றை கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.பின் கேசரிகலர் சேர்த்து கலக்கவும்.


*இப்பொழுது ஹை பவரில் 6 நிமிடங்கள் பாத்திரத்தை அவனில் வைக்கவும்.ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையில் கலந்து விடவும்.

*பின் வறுத்த முந்திரி,நெய்,ஏலக்காய்தூள் சேர்த்து மேலும் 6 நிமிடங்கள் வைக்கவும்.மீண்டும் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையே கலக்கி விடவும்.

*நெய் தடவில் தட்டில் ஊற்றி சமபடுத்தவும்.


*ஆறியதும் துண்டுகளாக போடவும்.

பி.கு
*சர்க்கரையின் அளவை குறைத்தால் அல்வா தன்மையும்,சுவையும் வராது.
Thursday 11 October 2018 | By: Menaga Sathia

ஊட்டி வர்க்கி /Ooty Varkey | Tea Time Snacks

 வர்க்கி செய்வதற்கு ப்ரெஷ் ஈஸ்ட் முக்கியம் .வர்க்கியில் பாரம்,இனிப்பு,மசாலா,சதுர வடிவம் என பல வகைகள் உண்டு,இதில் நான் இனிப்பு வர்க்கி செய்து உள்ளேன்.எப்படி செய்றதுனு இந்த வீடியோவை பார்த்து செய்தேன்.

தே.பொருட்கள்
மைதா - 1 கப்+1/4 கப்
ப்ரெஷ் ஈஸ்ட் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன் +1/4 கப்

ப்ரெஷ் ஈஸ்ட் செய்ய
மைதா -1/4 கப்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
நீர் -1/3 கப்

செய்முறை

*முதலில் ஈஸ்ட் செய்ய கொடுக்கபட்ட பொருட்களை கலந்து ,காற்றுபுகாத டப்பாவில் வெப்பமான இடத்தில் ,2 நாட்கள் வரை வைக்கவும்.

*பின் மாவு பொங்கி ப்ரெஷ் ஈஸ்ட் தயார்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா,உப்பு,சர்க்கரை,எண்ணெய்,ப்ரெஷ் ஈஸ்ட் 2 டேபிள்ஸ்பூன்,வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
 *பின் தேவைக்கு நீர் கலந்து மாவினை கொஞ்சம் இளக்கமாக பிசைந்து ,ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
 *பின் மாவினை மிக மெல்லியதா உருட்டவோ அல்லது பரோட்டாவுக்கு செய்வது போல் அடிக்கவும்.அதன் மீது சிறிது வெண்ணெய் தடவி,கொஞ்சம் மாவினை தூவி தடவவும்.
 *வலது,இடது ஒரங்களை மடத்து அதன்மீது மீண்டும் வெண்ணெய்,மைதா தடவவும்.
 *இதேபோல் 4 முறை செய்யவும்.நாம் எத்தனை முறை மடிக்கிறோமோ அத்தனை லேயர் வரும்.
 *அதன் பின் 1 இஞ்ச் தடிமன் அளவுக்கு தேய்த்து நீளவாக்கில் வெட்டவும்.வெட்டிய ஒரு நீளதுண்டை எடுத்து சிறிது சிறிதாக பிய்த்து வைக்கலாம் அல்லது சதுர துண்டுகளாக வெட்டி வைக்கலாம்.

*அவனை 180 டிகிரி செல்சியஸில் முற்சூடு செய்யவும்.

*பேகிங் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து  வர்க்கிகளை அடுக்கி,25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*பார்க்கும் போது வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.

*நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
Wednesday 3 October 2018 | By: Menaga Sathia

ராமசேரி இட்லி / How To Make Ramaserry Idli

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு..
கேரளாவில்,பாலக்காட்டில் இருக்கும் ராமசேரி இட்லி மிக பிரபலமானது.ரொம்ப நாளா செய்யனும்னு ஆசை.ஆனா என்னிடம் இடியாப்ப ஸ்டீமர் இல்லாததால் எப்படி செய்றதுனு தெரியல. யூடிபில் ஒரு விடியோவை பார்த்தபிறகு ஒரு ஐடியா கிடைத்தது.

ஒரு குட்டி/பெரிய பானையில் ,சுற்றளவில் கயிறு கட்டி,பின் பானையின் மேலே குறுக்கும்,நெடுக்குமாக கயிரினை கட்டி ,கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றில் முடிச்சுவிட்டால் ரெடி!!

பானையின் மேல் பாகத்திற்கு ஏற்ப துணியினை வெட்டவும் மற்றும் மேலே மூடுவதற்கு ஏற்ற பாத்திரம் இருந்தால் செய்யலாம்.

இது சிறிய ஊத்தாப்பம் போல இருக்கும்,ஸ்டீமர் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய இட்லி செய்யலாம்.

இட்லி மாவு எப்படி செய்வதுனு இங்கே பார்க்கவும்.

எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தே.பொருட்கள்:

இட்லி மாவு ‍-தேவைக்கு

செய்முறை

*படத்தில் காட்டியுள்ளவாறு தயார் படுத்திக் கொள்ளவும்.

*பானையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,துணியை நனைத்து அதன் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக தேய்க்கவும்.

*பின் அதன்மேல் மூடி வேகவைத்து எடுத்தால் இட்லி ரெடி..


காரசட்னி செய்ய :

தே.பொருட்கள் :

சின்ன வெங்காயம் -15
காய்ந்த மிளகாய்- 6
உப்பு -தேவைக்கு
புளி -சிறிது
தேங்காய் எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:
*எண்ணெய் தவிர அனைத்தையும் பச்சையாக அரைத்து எண்ணெய் கலக்கவும்.

இட்லியை தேங்காய் சட்னி,கார சட்னியுடன் பரிமாறவும்.

01 09 10