இந்த பிரியாணிக்கு
அரிசியை வடிக்காமல் தம் முறையில் செய்வது, வெங்காயம்+முந்திரி திராட்சை இவற்றை வறுத்து சேர்ப்பது மற்றும் பிரியாணியை தம் செய்வது இதுதான் இதில் முக்கியமானது.
பரிமாறும் அளவு - 4 நபர்கள்
சமைக்கும் நேரம் - > 1 மணிநேரம்
Recipe Source :
சமைத்து அசத்தலாம்
தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 2 பெரியது
நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித்தழை - தலா 1/2 கப்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
நெய் - 1/4 கப்
எண்ணெய் + உப்பு = தேவைக்கு
அலங்கரிக்க
சிவற வறுத்த வெங்காயம் - 1
வறுத்த முந்திரி+திராட்சை - தேவைக்கு
சாதம் செய்ய
பாஸ்மதி - 3 கப்
முழு மிளகு -8
பிரியானி இலை -2
கிராம்பு -3
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் -3
அரைக்க
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பச்சை மிளகாய் -3
செய்முறை
*மட்டனில் மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+1 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் 4/12 கப் நீர் கொதிக்க வைத்து உப்பு+பிரியானி இலை+கிராம்பு+மிளகு+ஏலக்காய்+பட்டை +சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*1 கப் அரிசிக்கு 1/1/2 கப் நீர் சேர்க்கவும்.
*நீர் கொதிததும் கழுவிய அரிசியை சேர்த்து வேகவிடவும். அரிசி 3/4 பதம் வெந்து இருக்கும்.
*வெங்காயம்+முந்திரி+திராட்சை வறுத்து வைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம்+தக்காளி +உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் கரம் மசாலா+தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*அனைத்தும் நன்கு வதக்கிய பின் தயிர்+புதினா கொத்தமல்லி சேர்க்கவும்.
*இதனுடன் வேகவைத்த மட்டனை நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.கிரேவி கெட்டியாக வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*இதில் பாதி கிரேவியை தனியாக எடுத்து வைத்து அதில் பாதி சாதம்+சிறிது வறுத்த வெங்காயம் +சிறிது முந்திரி திராட்சை+1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் +சிறிது கொத்தமல்லித்தழை +சிறிது நெய் சேர்க்கவும்.
*
*இதே போல் இன்னொரு லேயர் போடவும்.
*தோசைக்கல்லை காயவைத்து அதன்மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறுதீயில் 20 நிமிடம் தம் போடவும்.
*பின் சாதத்தை உடையாமல் கிளறிவிட்டு விரும்பிய ராய்த்தா+வறுவலுடன் பரிமாறவும்.
பி.கு
*இதில் நான் ரோஸ் வாட்டர் பதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.புதினா என்னிடம் இல்லாததால் கொத்தமல்லித்தழை மட்டும் 1 கட்டு சேர்த்து செய்தேன்.சுவையில் எந்த மாற்றமும் இல்லை.