இந்த குருமாவில் தக்காளி சேர்க்க தேவையில்லை
பரிமாறும் அளவு - 3
சமைக்கும் நேரம் - < 30 நிமிடங்கள்
ஊறவைக்கும் நேரம் - 30 நிமிடங்கள்
தே.பொருட்கள்
சிக்கன் -1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
கெட்டி தயிர் -1/2 கப்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
பட்டை -சிறுதுண்டு
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 1
கிராம்பு+ஏலாக்காய் - தலா 3
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
செய்முறை
*சிக்கனில் தயிர்+கரம் மசாலா+சீரகத்தூள் சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
*பச்சை வாடை அடங்கியதும் ஊறவைத்த சிக்கன் சேர்த்து நன்கு வதக்கியபின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி உப்பு+ 1 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் வேகவைத்த உருளைகிழங்கு சேர்த்து (விரும்பினால்) மேலும் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
*கடைசியாக எலுமிச்சைசாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
super flavorful and inviting chicken kurma...love to have it with dosa..too tempting!
சிக்கனில் காய்கறிகள்..செமையான ஊட்டச்சத்து ஆச்சே...!
உங்களின் செய்முறைப் படி தக்காளி சேர்க்காமல் செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...
நேரம் கிடைப்பின் - தங்களின் கருத்துரைக்காக : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html
Chicken kurma looks delicious. Mouth watering kurma.
படங்கள் ஸூப்பர். சிக்கன் உருளைக்கிழங்கு யாருக்குத்தான் பிடிக்காது.
Kurma looks so delicious, makes me hungry now :)
mmmm.....yummmm... Looks mouthwatering. Amazing clicks
Kuruma arumai ...en kanavaruku migavum pidithathu...
super tasty chicken
Post a Comment