பருப்பு கடைசல்
தே.பொருட்கள்
பாசிப்பருப்பு,துவரம்பருப்பு -தலா 1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
சீரகம்,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கறிவேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
செய்முறை
*பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.
*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.பூண்டை மட்டும் பச்சை வாசனை போக வதக்கி சேர்க்கவும்.
*ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
வாழைக்காய் மிளகு பொரியல்
வாழைக்காய் - 2
புளிகரைசல் - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 1
செய்முறை
*வாழைக்காயை நறுக்கி புளிகரைசலில் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து 3/4 பதமாக வேகவைக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனைப்போக வதக்கவும்.
*பின் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.