Tuesday, 26 September 2017 | By: Menaga Sathia

சிகப்பு முளைகீரை பொரியல்/ Red Amaranth Leaves(Sikappu Mulaikeerai) Poriyal

சென்ற வருடம் இந்தியா சென்றிருந்தபோது சிகப்பு முள்ளங்கி வாங்கி சமைத்து படம் எடுத்ததோடு பதிவு போடவே மறந்துவிட்டேன்.

தே.பொருட்கள்
சிகப்பு முள்ளங்கி கீரை - 1 கட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
தேங்காய் துறுவல் - 1/3 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை

*கீரையை மண்ணில்லாமல் நன்கு கழுவி நீரை நன்கு வடிக்கவும்.

*அதன் பிறகு பொடியாக தண்டோடு சேர்த்து நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் நருக்கிய கீரை மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும்.

*நீர் சேர்க்க வேண்டாம்,கீரையிலுள்ள நீரே வேக சரியாக இருக்கும்.

*5 நிமிடங்களில் கீரை வெந்து இருக்கும்,தேங்காய் துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Wednesday, 13 September 2017 | By: Menaga Sathia

காராமணி வாழைக்காய் தோல் தோரன்/ Cowpeas & Plaintain Peel Thoran

நேந்திரங்காய் சிப்ஸ் பதிவில் ,வாழைக்காய் தோலில் பொரியல் செய்யலாம் என சொல்லியிருந்தேன் .இதனுடன் வேகவைத்த காராமணி சேர்த்துள்ளேன்.

தே.பொருட்கள்
2 வாழைக்காய் தோல்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4 டீஸ்பூன்
வேகவைத்த காராமணி -1/3 கப்
உப்பு-தேவைக்கு

நசுக்கி கொள்ள

வெங்காயம் - 1சிறியது
பூண்டுப்பல் -3
இஞ்சி -1/2 டீஸ்பூன்

தாளிக்க
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2

அரைக்க
தேங்காய்துறுவல் -1/2 கப்
சீரகம் -3/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -2

செய்முறை
*வாழைக்காய் தோலினை மிக பொடியாக நறுக்கி மஞ்சள்தூள்+சிறிது தயிர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.

*அரைக்க கொடுத்து பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நசுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கிய தோலினை சேர்க்கவும்.

*பின் மஞ்சள்தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும்.


*5 நிமிடங்களில் வெந்ததும் வேகவைத்த காராமணி மற்றும்  அரைத்த தேங்காயினை சேர்த்து கிளறி 1-2 நிமிடங்களில் இறக்கவும்.






Saturday, 9 September 2017 | By: Menaga Sathia

நேந்திரங்காய் சிப்ஸ் /Plaintain Chips | Nendran Chips | Kerala Banana Chips |Onam Sadya Recipe

 இந்த சிப்ஸ் செய்ய நன்கு காயாக இருப்பதையே பயன்படுத்தவும்.தோலினை தூக்கி எறியாமல் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.அடுத்த ரெசிபியில் எப்படி பொரியல் செய்வது என் பார்ப்போம்.

இப்போழுது சிப்ஸ் செய்வதை பார்க்கலாம்..

தே.பொருட்கள்
நேந்திரங்காய் -3
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் + 3/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*சிறிது நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்+1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

*நேந்திரங்காயில் கத்தியால் ஆங்காங்கே கீறி தோலினை எடுக்கவும்.
 *3/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்+ நீர் கலந்து தோல் சீவிய காயினை நீரில் 15 நிமிடம் வைக்கவும்.காய் மூழ்குமளவு நீர் இருக்க வேண்டும்.

*பின் காயினை ஈரம் போக நன்கு துடைத்து வைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.

*தீயினை குறைந்த அளவு வைத்து,சிப்ஸ் கட்டையால் நேரடியாக காயும் எண்ணெயில் சீவவும்.பின் தீயினை அதிகபடுத்தி வேகவைக்கவும்.
*கரண்டியால் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு கிளறி விடவும்.
 *சிப்ஸ் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கும் போது 1 டீஸ்பூன் உப்பு கலந்து நீரினை ஊற்றவும்.
 *மீண்டும் எண்ணெயின் சத்தம் அடங்கியதும் சிப்ஸினை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.


பி.கு

*சிப்ஸ்க்கு எண்ணெய் நன்றாகவே காய்ந்திருக்க வேண்டும்.

*உப்பு கலந்த நீரினை சூடான எண்ணெயில் ஊற்றும் எண்ணெய் பொங்கும்,கவனமாக செய்யவேண்டும்.

நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
Monday, 4 September 2017 | By: Menaga Sathia

ஓணம் ஸ்பெஷல் -3 /Kerala Onam Sadya -3 | Thali Recipes


ஓணம் சத்யா- 1
ஓணம் சத்யா -2

இந்த முறை ஒணம் சத்யா 24 குறிப்புகளை செய்துருக்கேன்...காரணம் என் நீண்ட நாள் தோழி வீட்டிற்கு வந்ததில் அவர்களுடன் சத்யா சாப்பாடு செய்து சாப்பிட்டதில் மிக சந்தோஷம்.

  முதலில் என்ன மெனு செய்ய போகிறோம் என முடிவெடுத்து அதற்கு தகுந்தாற் போல் முதல்  நாள் இரவே காய்களை நறுக்கி ப்ரிட்ஜில் வைத்தேன்.

ஊறுகாய் மற்றும் இஞ்சி புளியும் முதல் நாளே செய்தாயிற்று.இஞ்சி கிச்சடி செய்வதற்கு மட்டும் இஞ்சி புளி செய்யும் போது இஞ்சி வறுத்ததில் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்தேன்.

சாம்பாருக்கு காய்களை கொஞ்சமாகவும்,பெரிய துண்டுகளாகவும் நறுக்கவும்.நான் முருங்கைகாய்,கேரட்,பீன்ஸ்,பூசணி சேர்த்து செய்தேன்.

அவியலுக்கு வத்திகுச்சி போல மெலிதாக நீளவாக்கில் காய்களை நறுக்கவும்.

காளன் மற்றும் கூட்டுகறி செய்ய   கருணை கிழங்கு மற்றும் வாழைக்காயினை நறுக்கவும்.எரிசேரிக்கு இந்த முறை  மஞ்சள் பூசணிக்காயை பயன்படுத்தி செய்தேன்.

முதல்நாள் இரவே தட்டைபயிறு,கறுப்புகடலை ஊறவைக்கவும்.இந்த முறை தேங்காய் பாலினை கடையில் வாங்கினேன்.

பாசிபருப்பினை பிரதமன் மற்றும் பருப்புக்கறி வறுத்து வைக்கவும்.கோஸினை துருவி ப்ரிட்ஜில் வைக்கவும்.

மெழுக்குபுரத்தி செய்ய கேரட் மற்றும் பீன்ஸ் அவியலுக்கு நறுக்குவது போல் நறுக்கி வைக்கவும்.

பாலடையும் கடையில் வாங்கிவிட்டேன்

மறுநாள் ஈசியாக அனைத்தும் செய்து விடலாம்.தேங்காய்+சீரகம்+பச்சைமிளகாயினை நிறைய அரைத்துகொண்டால் அவியல்,காலன்,பச்சடி,கூட்டுகறிக்கு பயன்படுத்திக்கலாம்.

இன்றைய சத்யா மெனு
1.வாழைப்பழம்
2.உப்பு
3.எலுமிச்சை ஊறுகாய்
4.அப்பளம்
5.இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்
6.நேந்திரன் சிப்ஸ் - கடையில் வாங்கியது
7.இஞ்சி புளி
8.இஞ்சி கிச்சடி
9.கோஸ் தோரன்
10.கூட்டுக் கறி
11.கேரட் பீன்ஸ் மெழுக்குபுரத்தி
12.அவியல்
13.ஒலன்
14.எரிசேரி
15.சாதம்
16.பருப்பு கறி +நெய்
17.சாம்பார்
18.ரசம்
19.மோர் காய்ச்சியது
20.தக்காளி பச்சடி
21.காளன்
22.பருப்பு பிரதமன்
23.பாலடை  பாயாசம்
24.சம்பரம்

சம்பரம் என்பது மோரினை நன்கு கலக்கி உப்பு,நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

இஞ்சி கிச்சடி --வறுத்த இஞ்சியில் தயிர்+உப்பு சேர்த்து கலக்கி கடுகு+காய்ந்தமிளகாய்+கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.


01 09 10