Recipe Source :
Here
ஆந்திரா வெஜ் மெனுவில் சாதம், சாம்பார்,ரசம்,கோவைக்காய் வறுவல்,வெண்டைககய் பொரியல் என செய்துள்ளேன்.
ஆந்திரா சாம்பார் / Andhra Sambhar
தே.பொருட்கள்
து.பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
புளிகரைசல் -1/2 கப்
முருங்கைக்காய் -1
கேரட் -2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
கசகசா - 1 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் -1
செய்முறை
*குக்கரில் துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.வெந்ததும் நறுக்கிய காய்கள் சேர்த்து 2 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம்+தக்காளி +உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி அரைத்த விழுது+சாம்பார் பொடி+புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் வேகவைத்த காய் பருப்பு கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
ஒமம் தக்காளி ரசம் / Carom Flavoured Tomato Rasam / Tomato Vammu Charu
இதில் ஒமம் சேர்த்து தாளிப்பது தான் செம ருசி,மறக்காமல் சேர்த்து செய்யவும்.
தே.பொருட்கள்
தக்காளி -2
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
வேகவைத்த துவரம்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
ரசப்பொடி -2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
ஓமம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஓமம் -1/4 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் -1
செய்முறை
*புளியை 1 கப் நீரில் கரைத்து வடிகட்டவும்.அதில் அரைத்த தக்காளி+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் போது 1/4 டீஸ்பூன் ஒமத்தை கையால் நுணுக்கி போடவும் மற்றும் ரசப்பொடி+மஞ்சள்தூள் +கறிவேப்பிலை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+1/4 கப் நீர்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி தாளித்து சேர்க்கவும்.
கோவைக்காய் வறுவல்/ Ivy Gourd Fry | Dondakaya Kobbarikaram Vepudu (Fried Ivy Gourd With Coconut Spice Mix)
இந்த வறுவல் வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது...
தே.பொருட்கள்
கோவைக்காய் - 1/4 கிலோ
சீரகம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பொடிக்க
முந்திரி -2 டீஸ்பூன்
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -1
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
செய்முறை
*கோவைக்காயை நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். நான் எண்ணெயில் பொரிக்காமல் நான் ஸ்டிக் கடாயில் 15 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்து செய்துள்ளேன்.
*பொடிக்க கொடுத்துள்ளவைகளில் உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொடித்த பொடி+பொரித்த கோவைக்காய்+தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
வெண்டைக்காய் பொரியல் | Bendakaya Vepudu | Okra Poriayl
Recipe Source :
Here
தே.பொருட்கள்
வெண்டைக்காய் -1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த வேர்க்கடலை -1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் -1
கறிவேப்பிலை -1 கொத்து
செய்முறை
*வெண்டைக்காயை கழுவி துடைத்து சிறுதுண்டுகளாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் மிளகாய்த்தூள் + வெண்டைக்காய் +உப்பு சேர்த்து வதக்கவும்.இடையே வெண்டைக்காயின் கொழகொழப்பு போக 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.
*வெந்ததும் தேங்காய்த்துறுவல்+வேர்க்கடலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்.