Wednesday 30 September 2015 | By: Menaga Sathia

பஸ்பூஸா/முட்டையில்லாத ரவா கேக்/ Basbousa | Eggless Semolina Cake | Eggless Rava Cake

print this page PRINT IT
Recipe Source : HomeBakersChallenge


தே.பொருட்கள்

சர்க்கரை சிரப் செய்ய‌
சர்க்கரை -1 கப்
நீர்-1 கப்
ரோஸ் எசன்ஸ் -1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்

கேக் செய்ய‌
ரவா- 2 கப்
சர்க்கரை- 1 கப்
பேக்கிங் பவுடர் -1/2 டீஸ்பூன்
சர்க்கரை சிரப் -1/4 கப்
காய்ந்த தேங்காய் துறுவல்- 1/4 கப்
பால்- 1 கப்
உருக்கிய வெண்ணெய் -1/4 கப் +1 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் -2 டீஸ்பூன்
பாதாம் துண்டுகள் -அலங்கரிக்க‌


செய்முறை
*முதலில் சர்க்கரை சிரப்பினை செய்ய வேண்டும்.பாத்திரத்தில் சர்க்கரை+நீர் சேர்த்து கரைந்ததும் பிசுக்கு பதம் வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.ஆறியதும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

*கேக் செய்ய கொடுத்துள்ள பொருட்களில் பாதாம் துண்டுகள் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.




*பேக்கிங் டிரேயில் 1 டீஸ்பூன் வெண்ணெய் தடவி ரவா கலவையை ஊற்றி 1 இரவு முழுக்க வைக்கவும்.



*பாதாமை வெந்நீரில் ஊறவைத்து தோலெடுத்து வைக்கவும்.

*அவனை 200°C 10 நிமிடம் முறசூடு செய்யவும்.பின் பேக்கிங் டிரேயினை வைத்து 10 நிமிடம் பேக் செய்யவும்.


*டிரேயினை அவனிலிருந்து எடுத்து கத்தியில் லேசக துண்டுகள் போட்டு பாதாம் துண்டுகளை வைத்து லேசாக அழுத்தவும்.


*மீண்டும் 15 நிமிடங்கள் அல்லது கேக் வேகும் வரை பேக் செய்து எடுக்கவும்.

*இதனிடையே சர்க்கரை சிரப்பினை லேசாக சூடுபடுததவும்.

*கேக் வெந்ததும் சூடான சர்க்கரை சிரப்பினை கேக் மீது பரவலாக ஊற்றவும்.





*ஆறியதும் பரிமாறவும்.இதனை அன்றே சாப்பிடுவதை விட மறுநாள் சர்க்கரை சிரப் ஊறி  சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு
* கேக் கலவையை முதல் நாள் இரவே தயார் செய்து ஊறவைக்கவும்.



Tuesday 22 September 2015 | By: Menaga Sathia

பிஸிபேளாபாத் / Bisi Bele Bath (Authentic Recipe) | Lunchbox Recipes

print this page PRINT IT 
இந்த செய்முறையில் பிஸிபேளாபாத் பொடியில் பொப்பரைத்துறுவல் சேர்க்காதததால் தேங்காய்த்துறுவல்+புளி+பொடி  இவற்றை அரைத்து சேர்க்க வேண்டும்.

நான் சேர்த்திருக்கும் காய்கள் சின்ன வெங்காயம்,சௌ சௌ,கேரட்,கத்திரிக்காய்,நூல்கோல்,முருங்கைக்காய்.

தே.பொருட்கள்
பச்சரிசி- 3/4 கப்
துவரம்பருப்பு- 1/2 கப்
காய்கள்- 1 கப்
வெல்லம்- சிறிது
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
நீர்- 6கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
புளி -எலுமிச்சை பழளவு
பிஸிபேளாபாத் பொடி -1/4 கப்

தாளிக்க‌
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை- 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*குக்கரில் அரிசி+பருப்பினை 6 கப் நீர் +மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*நறுக்கிய காய்களை பாத்திரத்தில் மூழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த விழுது+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த அரிசி பருப்பு +தேவைக்கு நீர் சேர்த்து கலக்கவும்.

*சிறிது நேரம் கிளறிய பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.

*சாதம் கொஞ்சம் நீர்த்தாற்போல் இருக்க வேண்டும்.ஆறியதும் கெட்டியாகிவிடும்.

*வறுவல் அல்லது சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.

பி.கு

*இதில் அரிசியை தனியாகவும்,ப்ருப்புடன் காய்கள் சேர்த்து தனியாகவும் வேகவைத்து செய்யலாம்.

*இதனை சூடாக  பரிமாறவும்,ஆறியதும் சாதம் கெட்டியாகிவிடும்.
Sunday 20 September 2015 | By: Menaga Sathia

முட்டையில்லாத ப்ளாக் ஃபாரஸட் கேக் / Eggless Black Forest Cake | Eggless Cake Recipes


print this page PRINT IT 

தே.பொருட்கள்

முட்டையில்லாத சாக்லேட் கேக் -1
ஹெவி க்ரீம்- 200 மிலி
ஐசிங் சுகர்- 4 1/2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய செர்ரி பழ துண்டுகள் -1/4 கப்
சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
நீர் -1/4 கப்
துருவிய சாக்லேட் -அலங்கரிக்க‌

செய்முறை

*இந்த லிங்கில் கொடுத்துள்ளபடி சாக்லேட் கேக் செய்துக் கொள்ளவும்.

*1/4 கப் நீரில் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை சூடு செய்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவைக்கவும்.

*கேக் ஆறியதும் சமமாக 2ஆக நறுக்கவும்.

*விப்பிங் க்ரீமை பவுலில் ஊற்றி ,சிறிது சிறிதாக ஐசிங் சர்க்கரை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

*கேக் போர்டில் சிறிது விப்பிங் க்ரீம் வைத்து அதன் மேல் கேக் வைக்கவும்.

*ப்ரெஷ்ஷால் சர்க்கரை பாகினை கேக் மீது தடவும்.

*அதன் மீது விப்பிங் க்ரீம் வைத்து நறுக்கிய செர்ரி துண்டுகளை வைக்கவும்.


*இதே போல் இன்னொரு லேயர் கேக் வைத்து செய்யவும்.

*கடைசியாக கேக் மீது ப்ரெஷ் க்ரீம் தடவி விருப்பத்திற்கேற்ப அலங்கரிக்கவும்.



*அதன் மீது செர்ரி பழத்துண்டுகள் மற்றும் துருவிய சாக்லேட் சேர்த்து அலங்கரிக்கவும்.

Monday 14 September 2015 | By: Menaga Sathia

நெய்(பொரித்த) கொழுக்கட்டை| ரவை கொழுக்கட்டை / Nei Kozhukattai | Fried Modak |Rava Kozhukattai| Vinayagar Chathurthi Recipes

print this page PRINT IT 

நெய் கொழுக்கட்டையை ரவை அல்லது மைதாவில் செய்வாங்க.நான் ரவையில் செய்துருக்கேன்.

இந்த நெய் கொழுக்கட்டையை கணபதி ஹோமம் அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று செய்வார்கள்.

பொதுவாக இதனை கணபதி ஹோமத்துக்கு முதல் நாளே செய்து பயன்படுத்துவாங்க.இதனை குறைந்தது 10 நாட்கள் வரை வைத்து காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

ரவையில் செய்வதாக இருந்தால் மெல்லிய ரவையில் செய்ய வேண்டும்.

பெயருக்கேற்றார்போல் இதனை நெய்யில் பொரிக்க வேண்டும்.அதற்கு பதில் எண்ணெயிலும் பொரிக்கலாம்.

Recipe Source :
Here

தே.பொருட்கள்

மெல்லிய ரவை -1/2 கப்
உப்பு -1 சிட்டிகை
பால்- 1/4 கப்+1 டேபிள்ஸ்பூன்
நெய்- 2 டீஸ்பூன்
எண்ணெய்/நெய் -பொரிக்க‌

பூரணத்திற்கு

தேங்காய்த்துறுவல்- 1 கப்
வெல்லம் -1/2 கப்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்

செய்முறை

*ரவையில் உப்பு கலந்து பால் சேர்த்து கெட்டியாக பிசையவும்.



*பிசைந்த மாவினை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் நெய் தொட்டு மாவினை நன்கு பந்துபோல மிருதுவாக பிசையவும்.

*பூரணம் செய்ய,வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

*பின் மீண்டும் வெல்லநீரை கொதிக்கவைத்து தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி ஆறவைக்கவும்.

*மாவினை பெரிய உருண்டைகளாக எடுக்கவும்.

*ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல மெலிதாக தேய்த்து சிறு வட்ட வடிவ மூடியினால் வெட்டிக் கொள்ளவும்.

*அதில் 1 டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து அப்படியே மேல் நோக்கி அழுத்தி மூடவும்.இப்போழுது குட்டி மோதகம் போல இருக்கும்.


*இப்படியே அனைத்தையும் செய்து முடித்த பின் நெய்/எண்ணெயில் பொன்னிறமாக‌ பொரித்தெடுக்கவும்.

பி.கு

*அனைத்து மோதகங்களை செய்து முடித்த பின் காயாமல் இருக்க பேப்பர் போட்டு மூடி வைக்கவும்.
Friday 11 September 2015 | By: Menaga Sathia

வாங்கிபாத் மசாலா பொடி / Vangibath Masala Powder | Authentic Mysore Style Vangibath Masala Powder


print this page PRINT IT
பிஸிபேளாபாத் மசாலா பொடி செய்த அதே வீடியோவில் பார்த்த செய்த குறிப்பு.மிக நன்றாக இருந்தது.

இதில் உருளை வறுவல் செய்ததில் மிக நன்றாக இருந்தது.காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

இதில் கொப்பரைத்துறுவல் சேர்க்காததால் ப்ரிட்ஜில் 2 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நான் எப்போழுதும் குறைந்த அளவே மசாலா பொருட்களை அரைத்து உடனடியாக பயன்படுத்தி விடுவேன்.அவர்கள் கொடுத்துள்ள அளவில் நான் ஸ்பூன் அளவில் பயன்படுத்தி அரைத்ததே கால் கப்பிற்கும் கூடவே இருந்தது.

தே.பொருட்கள்

தனியா -1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
காஷ்மிரி மிளகாய்- 4
கிராம்பு -5
பட்டை 1 இஞ்ச் அளவில்- 2
எண்ணெய் -1 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி முதல் கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

*பின் பட்டை +கிராம்பு சேர்த்து வறுத்த பின் மிளகாயினை சேர்த்து வறுக்கவும்.

*கடைசியாக தனியாவை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.கடாயின் சூட்டிலேயே தனியா வறுபட்டுவிடும்.

*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அரைத்த பொடியினை நன்கு ஆறவைத்த பின் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

Wednesday 9 September 2015 | By: Menaga Sathia

பால் போளி / PAAL POLI | MILK POLI | GUEST POST FOR USHA RANI


print this page PRINT IT

உஷாராணியை எனக்கு ப்ளாக் மூலமாகதான் தெரியும்.அவரின் ஆந்திரா குறிப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கும்.அதே போல் நிறைய பேக்கிங் குறிப்புகளையும் அவரின் வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்.

அவரின் வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்டபோது நானும் சிறிது தாமதத்திற்கு பிறகே இந்த குறிப்பினை அனுப்பினேன்.அவரின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் இருக்கும்.எனக்கொரு வாய்ப்பினை அளித்த உஷாவிற்கு நன்றி !!

என்னுடையது தமிழ் என்பதால் மறுபடியும் குறிப்பினை இங்கே மிக தாமதமாக பகிர்கிறேன்.

தே.பொருட்கள்

மைதா- 1/2 கப்
எண்ணெய் -1 டீஸ்பூன்+பொரிக்க‌
உப்பு- 1 சிட்டிகை
பால்- 3 கப்
சர்க்கரை- 1/3 கப்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
பிஸ்தா பருப்பு -அலங்கரிக்க‌

செய்முறை

*மைதா+உப்பு+1 டீஸ்பூன் எண்ணெய் இவற்றை பவுலில் போட்டு பிசைந்து பின் தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.



*பாத்திரத்தில் பாலை ஊற்றி 3/4 பாகம் வற்றும் வரை காய்ச்சவும்.

*வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

*பால் நன்றாக காய்ந்த பின் குங்குமப்பூ+ஏலக்காய்த்தூள்+சர்க்கரை சேர்க்கவும்.

*இந்த பாலினை அகலமான பாத்திரத்தில் ஊற்றவும்.

*ஊறிய மைதா மாவில் சிறு சம உருண்டைகளாக எடுக்கவும்.

*இதனை மெலிதான சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*பொரித்த பூரிகளை லேசாக மடித்து பாலில் ஊறவிடவும்.

*பரிமாறும் போது பிஸ்தாதுண்டுகளை சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.

பி.கு

*பூரிகளை பொன்னிறமாக பொரிக்க வேண்டாம்.

*பூரிகள் பாலில் குறைந்தது 1/2 மணிநேரமாவது ஊறவைக்கவும்.
Monday 7 September 2015 | By: Menaga Sathia

சுண்டைக்காய் சாம்பார்/SUNDAKKAI (FRESH TURKEY BERRY) SAMBAR


print this page PRINT IT
பச்சை சுண்டைக்காய் சாம்பார் நல்லா சுவையுடன் இருக்கும்,கசப்பு தெரியாது.இதில் விட்டமின் ,கால்சியம்,இரும்பு சத்து,நார்சத்து இருக்கு.இதனை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்,மேலும் நரம்புகளுக்கு வலு சேர்க்கும்,பக்கவாதமும் குணமாகும்.

இதனை தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுபடும்.

காய்ந்த சுண்டைக்காயினை பொரித்து சாப்பிட்டால் வாயுதொல்லை குணமாகும்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
பச்சை சுண்டைக்காய்- 1/3 கப்
புளிகரைசல்- 1/3 கப்
நருக்கிய வெங்காயம்+தக்காளி -தலா1
கீறிய பச்சை மிளகாய் -2
சாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

தாளிக்க‌
வடகம் -1/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*சுண்டைக்காயினை கழுவி லேசாக நசுக்கிக் கொள்ளவும்.


*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+தக்காளிபச்சை மிளகாய்+நசுக்கிய சுண்டைக்காய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வேகவைத்த பருப்பினை சேர்த்து கொதிக்கவிடவும்.


*சுண்டைக்காயினை நசுக்கி சேர்த்திருப்பதால் 5 நிமிடத்திற்கள்ளாகவே வெந்துவிடும்.

*வெந்ததும் புளிகரைசல் ஊற்றி மேலும்  சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.


*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.
01 09 10