Wednesday 26 April 2017 | By: Menaga Sathia

உப்பு (அட ) மாங்கா /Uppu (Ada )Manga | Summer Spl

போன வருடம் ஊருக்கு சென்றிருந்த போது மாமியார் இந்த அட மாங்காயை கொடுத்தாங்க.அவங்க செய்யும் போது பார்த்தாலும் படம் எடுக்கவில்லை.

இது எனக்கு ரொம்ப பிடிக்கும்,அப்படியே கூட சாப்பிடலாம்,மோர் குழம்பு ,வத்தல் குழம்பு,பச்சடி என செய்யலாம்.

இந்த மாங்காயின் கொட்டையை குழம்பு வைக்கலாம்.உடம்புக்கு மிக நல்லதும் கூட...

இதில் உப்பு அதிகம் இருப்பதால் குழம்பில் உப்பின் அளவை குறைத்து போடவும்.

வத்தல்களில் உப்பு தான் ப்ரிசர்வேடிவ் என்பதால் உப்பினை அதிகம் போடவும்.

தே.பொருட்கள்

கிளி மூக்கு மாங்காய்-  5
கல் உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*மாங்காயை கழுவி நன்கு துடைத்து பக்கவாட்டில் முக்கால் பாகம் வரை நறுக்கவும்.

*எப்படி என்று மேலிருக்கும் படத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.

*கல் உப்பு,மஞ்சள்தூள் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*உப்பு கலவையை நறுக்கிய மாங்காயில் நங்கு அடைத்து வைக்கவும்.இப்படியே அனைத்து மாங்காயில் செய்த பின் பீங்கான் ஜாடி அல்லது பானையில் வைத்து மெல்லிய துணியால் மூடி வைக்கவும்.

*இப்போழுது மறுநாள் மாங்காய்  நங்கு ஊறி நீர் விட்டிருக்கும்.

*தனியாக மாங்காயினை மட்டும் தட்டில் வைத்து வெயிலில் காய்வைக்கவும்.மாங்காய் ஊறவைத்த பானையும் நீரோடு ,துணியால் மூடி வெயிலில் வைக்கவும்.

*மாலையில் திரும்ப மாங்காயினை பானையில் போட்டு எடுத்துவைக்கவும்.இதே போல் நீர் வற்றும் வரை செய்த பின் மாங்காய் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.

*இதனை மீண்டும் நன்கு காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்.அதாவது  மாங்காயை ஆட்டினால் உள்ளிருக்கும் கொட்டை சத்தம் கேட்க வேண்டும்.

மாந்தோல் குழம்பு 
மாம்பருப்பு குழம்பு

Tuesday 11 April 2017 | By: Menaga Sathia

பிடி கருணை கருவாட்டு குழம்பு/ Pidi Karunai Karuvattu(Dry Fish )Kuzhambu

தே.பொருட்கள்
பிடி கருனை -1/4 கிலோ
கருவாடு - 5 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் -1
பூண்டுப்பல் -8
சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி -1
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*பிடிகருணையை மண்ணில்லாமல் நன்கு கழுவி தேங்காய் ஒடு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

*தேங்காய் ஒடு சேர்த்து வேகவைப்பது கருணை கிழங்கு அரிப்பில்லாமல் இருக்கும்.

*புளிபேஸ்டினை 2 கப் நீர் ஊற்றி உப்பு,தக்காளி,சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
*புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்தபின் சுத்தம் செய்த கருவாடு,வேகவைத்த கிழங்கினை துண்டுகளாக அரிந்து சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பி.கு
*நான் சேர்த்திருப்பது வஞ்சிரம் கருவாடு.

*கருவாடு சேர்க்காமல் இதேபோல் பிடிகருணை காரகுழம்பு செய்யலாம்.

*பிடிகருணை சேர்க்கும்போது வேறு எந்தகாயும் சேர்க்கவேண்டாம்.
Tuesday 4 April 2017 | By: Menaga Sathia

சுண்டைக்காய் வத்தல் /Sun Dried Turkey Berry(Sundakkai) Vathal | Summer Spl

 சுண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது,ஏராளமான பயன்கள் கொண்டது.இணையத்திலிருந்து எடுத்த சில பயன்களை இங்கே குறிப்பிடுகிறேன்.

இருமலுக்கு - 2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 2 வேளை 1/2 டீஸ்பூன் சாப்பிடலாம்..
தலைவலிக்கு - சுண்டைக்காய் வத்தலை பொடித்து தினமும் இதனை  முகர்ந்தால் சரியாகும்.
வயிற்றுவலிக்கு - 5-6 சுண்டைக்காய் வத்தலை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் சரியாகும்.
இரத்தசோகைக்கு -2 டீஸ்பூன் சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடித்து,தினமும் 3 வேளை 1/4 டீஸ்பூன் சாப்பிடலாம்.

தே.பொருட்கள்
ப்ச்சை சுண்டைக்காய் -3 கப்
தயிர் - 2கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*பச்சை சுண்டைக்காயின் காம்பினை நீக்கி கழுவவும்.
*இதனை இடிப்பானில் லேசாக நசிக்கியோ அல்லது கத்தியில் கீறியோ வைக்கவும்.
*தயிரை கட்டியில்லாமல் நன்கு கடைந்து உப்பு சேர்த்து 1/2 கப் நீர் ஊற்றி சுண்டைக்காயை 1 நாள் ஊறவிடவும்.
*மறுநாள் வெயிலில் சுண்டைக்காயினை மட்டும் தட்டில் வைத்து காயவைக்கவும்.
*மோரினை வெயிலில் வைக்ககூடாது,மாலையில் திரும்பவும் மோரில் ஊறவைக்கவும்.

*இதேபோல் மோர் வற்றும் வரை செய்து பின் வெயிலி நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.

*வத்தகுழம்பு செய்தால் நன்றாக இருக்கும்.குறிப்பினை இங்கே பார்க்கவும்.

*இதே போல் மணத்தக்காளி காயில் செய்யலாம்,அப்படி செய்யும் போது நேரடியாகவே தயிரில் ஊறவைத்து காயவைக்கவும்.நசுக்கி போட தேவையில்லை.

*தயிரில் ஊறவைத்து போடுவது வாசனையாக இருக்கும்.
01 09 10