தே.பொருட்கள்
Dark Chocolate(Chopped) - 1 கப்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
ஹெவி விப்பிங் க்ரீம் - 1 கப்
ஐசிங் சர்க்கரை - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
செய்முறை
*ஒரு பவுலில் சாக்லேட்+வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லர் அல்லது மைக்ரோவேவில் உருகி ஆறவைக்கவும்.
*விப்பிங் கீரிமில் ஐசிங் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
*இதில் 1/4 கப் விப்பிங் க்ரீமை அலங்கரிப்பதற்காக எடுத்து வைத்து மீதியில் இருக்கும் கீரிமில் பாதியை உருகிய சாக்லேட்டில் மிருதுவாக கலக்கவும்.
*பின் மீதி பாதி விப்பிங் கீரிமை கலந்து பரிமாறும் பவுலில் வைத்து பிரிட்ஜில் 2 மணிநேரம் செட்டாகவைக்கவும்.
*பரிமாறும் போது மேலே விப்பிங் கீரிமை வைத்து அதன்மீது துருவிய சாக்லேட் தூவி பரிமாவும்.
பி.கு
*இங்கு நான் 85% டார்க் சாக்லேட் பயன்படுத்தியிருப்பதால் சர்க்கரை சேர்த்து இருக்கேன்.அதற்கு பதில்Semi Sweet Chocolate பயன்படுத்தினால் சர்க்கரை சேர்க்கதேவையில்லை.