Monday, 18 June 2012 | By: Menaga Sathia

மிளகு குழம்பு /Pepper Khuzhampu

தே.பொருட்கள்

புளிகரைசல் - 1 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்தரைக்க

பெருங்காயம் - 1 சிறுகட்டி
கறிவேப்பிலை- 1 கொத்து
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்தரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து அரைத்த கலவையை லேசாக வதக்கி உப்பு+புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
Thursday, 14 June 2012 | By: Menaga Sathia

துவரம்பருப்பு இட்லி & தக்காளி சட்னி -6 /Toor Dhal Idli & Tomato Chutney

இந்த சாதாரண இட்லியை விட மிக மென்மையாக இருக்கும்.தோசையும் நன்றாக வரும்.நன்றி வர்தினி!!

துவரம்பருப்பு இட்லி

தே.பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
உளுந்து - 1/4 கப்
உப்பு - சுவைக்கு

செய்முறை

*அரிசியை தனியாகவும் , துவரம்பருப்பு+உளுந்து இவைகளை ஒன்றாகவும் கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் பருப்புகளை நன்கு மைய அரைக்கவும்.அரிசியை ரவை பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

 தக்காளி சட்னி -6

இந்த ரெசிபி அண்ணியிடம் கற்றுக்கொண்டது.

தே.பொருட்கள்
பழுத்த தக்காளி - 2 நன்கு மசிக்கவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/4 கப் நீர்+உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.


Monday, 4 June 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத சாக்லேட் கேக் /Eggless Chocolate Cake With Flax Seeds

 தே.பொருட்கள்
டார்க் சாக்லேட் பார்(Dark Chocolate) -100 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
மைதா - 100 கிராம்
ப்லாக்ஸ் ஸூட் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்நீர் - 6 டேபிள்ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*ப்லாக்ஸ் ஸுடை நன்கு நைசாக பொடி செய்து அதனை 6 டேபிள்ஸ்பூன் வெந்நீர் ஊற்றி 10 நிமிடம் கரைத்து வைக்கவும்.

*மாவுடன் பேக்கிங் பவுடரை சலிக்கவும்.மைக்ரோவேவ் பவுலில் சாக்லேட்களை உடைத்து 2 டேபிள்ஸ்பூன் நீர் ஊற்றி உருக வைக்கவும்.

*உருகிய சாக்லேட்டுடன் பொடித்த சர்க்கரை+வெஜிடேபிள் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்.

*அதனுடன் ப்லாக்ஸ் ஸூட்+மைதா கலவையை கலந்து பேக்கிங் டிரேயில் ஊற்றவும்.

*180 முற்சூடு  செய்த அவனில் 30-35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போடவும்.

பி.கு

1 முட்டை = 1 டேபிள்ஸ்பூன் ப்லாக்ஸ் ஸூட் (பவுடராக பொடிக்கவும்)+3 டேபிள்ஸ்பூன் வெந்நீர் என பயன்படுத்தவும்.
01 09 10