Monday 28 February 2011 | By: Menaga Sathia

வேர்க்கடலை மசாலா / Peanut Masala


தே.பொருட்கள்:

உப்பு சேர்த்து வேகவைத்த வேர்க்கடலை - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நருக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சாட்மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.
Wednesday 23 February 2011 | By: Menaga Sathia

கோதுமை ரவை வெண்பொங்கல் / Wheat Rava Venpongal

தே.பொருட்கள்

கோதுமைரவை - 1 கப்
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கற்வேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமைரவையை வறுக்கவும்.
*லேசாக வறுபட்டதும் வெந்த பாசிப்பருப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
*உப்பு+2 1/2 கப் வெந்நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
 *பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
*பின் மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து சாம்பார்,சட்னியுடன் பரிமாறவும்.
Tuesday 22 February 2011 | By: Menaga Sathia

ப்ரவுன் ரைஸ் வெஜ் சேமியா உப்புமா/Brown Rice Veg Semiya Upma


தே.பொருட்கள்:

ப்ரவுன் ரைஸ் சேமியா - 2 கப்
துருவிய கேரட் - 1
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
நறுக்கிய பீன்ஸ் - 6
நறுக்கிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 5 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*வெறும் கடாயில் சேமியாவை லேசாக வறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+ப.மிளகாய்+காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+நீர் சேர்த்து காய்களை வேகவிடவும்.

*காய் வெந்ததும் சேமியாவை போட்டு வேகும் வரை கிளறி இறக்கவும்.


பி.கு:

ப்ரவுன் ரைஸ் சேமியா வேக நேரம் எடுக்கும்.இந்தளவு தண்ணீர் சரியாக இருக்கும்.
Monday 21 February 2011 | By: Menaga Sathia

சாம்பார் பொடி / Sambhar Podi

தே.பொருட்கள்

தனியா - 1 கப்
காய்ந்த மிளகாய் - 1 கப்
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்


செய்முறை

*மேற்கூறிய பொருட்களில் மஞ்சள்தூள் தவிர அனைத்தையும் தனிதனியாக லேசாக சூடு வரும் வரை வறுக்கவும் அல்லது வெயிலில் காயவைக்கவும்.

*ஆறியதும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு நைசாக பொடிக்கவும்.

பி.கு

*சாம்பார் பொடியை நைசாகவும்,ரசப்பொடியை கரகரப்பாகவும் பொடிக்க வேண்டும்.
Thursday 17 February 2011 | By: Menaga Sathia

ஹைதராபாத் சிக்கன் 65 / Hyderabad Chicken 65

 தே.பொருட்கள்:எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
முட்டையின் வெள்ளைக் கரு - 1
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1 சிட்டிகை
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 இணுக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*சிக்கனில் உப்பு+முட்டை வெள்ளைக் கரு+சிகப்பு கலர்+மிளகாய்த்தூள்+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு கிண்ணத்தில் தயிர்+மஞ்சள் கலர்+உப்பு+மிளகுத்தூள்+சீரகத்தூள்+கரம்மசாலா அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கீறிய பச்சை மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தயிர் கலவையை ஊற்றவும்.இதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி இறக்கவும்.

Wednesday 16 February 2011 | By: Menaga Sathia

சிம்பிள் உருளை வறுவல் /Simple Potato Fry

ஒரு முறை சாம்பார் பொடி போட்டு செய்தேன்.இந்த முறை ரசப்பொடி போட்டு செய்தேன்.நன்றாக இருந்தது.
 
தே.பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது
ரசப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 4
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.

*கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து பூண்டுப்பல் போட்டு வதக்கவும்.

*பின் ரசப்பொடியை போட்டு 1 நிமிடத்தில் உருளைக்கிழங்கு,உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி சிம்மில் வைத்து வேகவிடவும்.

*தண்ணீர் ஊற்றகூடாது,நடுவில் கிளறி விடவும்.

*உருளைவெந்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
Tuesday 15 February 2011 | By: Menaga Sathia

மீன் வறுவல் / Fish Fry

தே.பொருட்கள்:

சுத்தம் செய்த மீன் - 10
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 4
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைக்கவும்.

*மீன்+உப்பு+மிளகாய்த்தூள்+அரைத்த மசாலா அனைத்தையும் ஒன்றக கலந்து 1/2 மணிநேரம் வைத்திருந்து எண்ணெயில் வறுத்தெடுக்கவும்.
Monday 14 February 2011 | By: Menaga Sathia

முட்டையில்லாத பாதாம் ஆரஞ்ச் கப் கேக்/ Eggless Almond Orange Cupcakes


தே.பொருட்கள்

ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
பாதாம் பவுடர் - 1 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
ஆரஞ்ச் கலர் - 1 துளி விரும்பினால்
வெண்ணெய் -1/2 கப் (அறை வெப்பநிலையில்)
துருவிய ஆரஞ்ச் தோல் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 1/4 கப்
சர்க்கரை - 1 1/2 கப்

செய்முறை

*மைதா மாவில் பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர்+பாதாம் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*ஒரு பவுலில் வெண்ணெய்+சர்க்கரை கலந்து கரையும் வரை பீட் செய்யவும்.அதனுடன் பால்+மைதா கலவை+ஆரஞ்ச் ஜூஸ்+கலர்+ஆரஞ்ச் தோல் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*மஃபின் கப்பில் ஊற்றில் 180°C முற்சூடு செய்த அவனில் 20 - 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
Sunday 13 February 2011 | By: Menaga Sathia

அன்னாசிப்பழ பச்சடி / Pineapple Pachadi

தே.பொருட்கள்

அன்னாசிபழதுண்டுகள் - 1 கப்
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்(அ)இனிப்பிற்கேற்ப
உப்பு - 1 சிட்டிகை
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வருத்த முந்திரி - தேவைக்கு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அன்னாசிபழதுண்டுகளைப்போட்டு சிறுதீயில் வதக்கி வேகவைக்கவும்.

*தண்ணீர் ஊற்ற வேண்டாம்,சிறுதீயிலே மூடிபோட்டு வேகவிடவும்.

*வெந்ததும் மஞ்சள்தூள்+உப்பு+வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி முந்திரிதுண்டுகளை சேர்த்து இறக்கவும்.

Thursday 10 February 2011 | By: Menaga Sathia

அன்னாசிப்பழ ரசம் / Pineapple Rasam


தே.பொருட்கள்

அன்னாசிப்பழ துண்டுகள் - 1/2 + 1/4 கப்
தக்காளி - 1
புளிகரைசல் - 1 கப்
ரசப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
தேங்காய்ப்பால் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*1/2 கப் அன்னாசிபழத்திலிருந்து சாறு பிழியவும்.

*தக்காளியை சிறுதுண்டுகளாகி சிறிதுநீர் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும்.
* தக்காளி வெந்ததும் புளிகரைசல் +உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பு+ரசப்பொடி சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.
*பின் அன்னாச்சிபழசாறு சேர்த்து இறக்கவும். 
*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி மீதமுள்ள அன்னாசிப்பழ துண்டுகள்+தேங்காய்ப்பால்+கொத்தமல்லித்தழை இவைகளை சேர்க்கவும்.

*கமகம வாசனையோடு ரசம் தயார்..சூப் போலவும் அப்படியே குடிக்கலாம்.


Wednesday 9 February 2011 | By: Menaga Sathia

கமன் டோக்ளா / Kaman Dhokla

தே.பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
எள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலை மாவு+பேக்கிங் சோடா+உப்பு+தயிர்+எலுமிச்சை சாறு கலந்து தேவையானளவு நீர் கலந்து இட்லி மாவு பதத்திற்க்கு கலந்து 2 மணிநேரம் புளிக்கவிடவும்.

*பின் ஒரு தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போட்டு தேங்காய்த்துறுவல்+கொத்தமல்லித்தழை தூவி,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

*க்ரீன் சட்னியுடன் சாப்பிட சூப்பராகயிருக்கும்..
Tuesday 8 February 2011 | By: Menaga Sathia

சுறா மீன் கட்லட் / Shark Fish Cutlet

தே.பொருட்கள்:சுறா மீன் - 1/2 கிலோ
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியாது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 4
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - சிறிதளவு
முட்டை - 2
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.

*வெந்ததும் தோலை எடுத்து விட்டு மீனை உதிர்த்துக் கொள்ளவும்.

*அதனுடன் உருளைக்கிழங்கு +உப்பு+சோம்புத்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து சிரு உருண்டையாக எடுத்து விரும்பிய வடித்தில் ஷேப் செய்யவும்.

*முட்டை ஒரு பவுலில் நன்கு அடிக்கவும்.ப்ரெட் க்ரம்ஸை ஒரு தட்டில் வைக்கவும்.

*உருண்டையை முட்டையில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் ப்ரட்டி 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பின் தவாவில் இருபக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
Monday 7 February 2011 | By: Menaga Sathia

மொசரெல்லா சீஸ் ப்ரை /Mozarella Cheese Fry

தே.பொருட்கள்:

மொசரெல்லா சீஸ் - 100 கிராம்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*சீஸை விரல் நீள துண்டுகளாக நறுக்கவும்.

*மைதா மாவில் சிறிதளவு உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கெட்டியாக கரைக்கவும்.சீஸில் உப்பு இருப்பதால் மைதா கலவையில் கொஞ்சமாக சேர்க்கவும்.

* சீஸை மைதா கலவையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ஸில் புரட்டி ப்ரிட்ஜில் 15 நிமிஷம் வைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

*எண்ணெயில் போட்ட உடனே எடுத்துவிடவும் இல்லையெனில் சீஸ் உருகிவிடும்.
Sunday 6 February 2011 | By: Menaga Sathia

கோதுமைரவை போண்டா / Wheat Rava Bonda

மீதமான கோதுமைரவை இட்லி மாவில் செய்தது.
 
தே.பொருட்கள்:

கோதுமைரவை இட்லி மாவு - 1 கப்
மைதாமாவு - 1/4 கப்
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது
பொடித்த மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை :

*மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலந்து போண்டாவாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.நல்ல க்ரிஸ்பியாக இருக்கும் இந்த போண்டா...

பி..கு

கோதுமைரவை இட்லி செய்ய 2 கப் கோதுமைரவை = 1/2 கப் உளுந்து.உளுந்தை மட்டும் ஊறவைத்து நன்கு அரைத்து அதனுடன் கோதுமைரவை+உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவிடவும்.
Thursday 3 February 2011 | By: Menaga Sathia

எலுமிச்சை அவல்/ Lemon Aval

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
எலுமிச்சைப் பழம் - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி

செய்முறை:
*அவலைக் கழுவி நீரை வடிக்கட்டவும்.எலுமிச்சைப் பழத்தில் சாறு பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+உப்பு+எலுமிச்சை சாறு ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

*ஆறியதும் வடிகட்டிய அவலை போட்டு நன்கு கிளறி பரிமாறவும்.
Wednesday 2 February 2011 | By: Menaga Sathia

கொள்ளு ரசம் / Kollu(Horsegram) Rasam


தே.பொருட்கள்:

கொள்ளு வேகவைத்த நீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் -4

செய்முறை :
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+கறிவேப்பிலை+கீறிய பச்சை மிளகாய்+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் புளிகரைசல்+ரசப்பொடி+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பின் கொள்ளு வேகவைத்த நீரை சேர்த்து கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*இதை சூப்பாகவும் குடிக்கலாம்.இந்த முறையில் செய்ததில் சூப்பர்ர் ருசியில் இருந்தது.

Tuesday 1 February 2011 | By: Menaga Sathia

வேர்க்கடலை சட்னி / Peanut Chutney

தே.பொருட்கள்:
வேர்க்கடலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 1
புளி - 1 கொட்டை பாக்களவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
 
செய்முறை:
*வேர்க்கடலை வறுத்து தோல் நீக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.
01 09 10